உலகப் புகைப்பட நாள் - World Photo Day
உலகப் புகைப்பட நாள்
இன்று ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட நாள். இன்று - பெரும்பாலோர் கையில் கைப்பேசி வடிவிலாவது புகைப்படக் கருவி வந்துவிட்ட காலத்தில் - நாம் நுகரும் இந்த நொடிப் பொழுதை உறைய வைத்து அதை என்றும் நாம் கண்டுணர - பகிர்ந்து மகிழ - காலத்தைத் தற்காலிகமாக வெல்லும் வாய்ப்பைத் தரும் இந்தப் புகைப்படக் கலையைக் கொண்டாடுவோம். இந்தப் பதிவுக்கு இரு காரணங்கள்.
- எதனால் உலகப் புகைப்பட தினம் இன்று கொண்டாடப் படுகிறது?
- என்னுடைய சுயநலம் - எனது புகைப்படத்தையும் இங்கே பகிரலாமே...!!!
முதல் காரணம் விரிவாக... சுமார் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். பிரான்சு நாட்டின் இரு கலைஞர்கள் - தொழில்நுட்ப வல்லுனர்கள் - கண்டுபிடிப்பாளர்கள் ஜோசப் நைஸ்போர் நீப்ஸி (Joseph Nicèphore Nièpce) மற்றும் லூயி டாகியூர் (Louis Daguerre) இருவரும் 1837 ஆம் வருடம் டாகியூரோடைப் (Dagguerotype) என்னும் புகைப்பட செயல்முறை தொழில்நுட்பத்தினை (Photo processing technique) உருவாக்குகின்றனர். இரு வருடம் முயன்று, அந்தத் தொழில்நுட்பம் ஜனவரி 9 1839 அன்று பிரான்சு அறிவியல் கழகத்தால் அங்கீகரிக்கப் படுகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், பிரெஞ்சு அரசு இந்தத் தொழில்நுட்பத்தின் காப்புரிமையை வாங்கி - இந்தக் கண்டுபிடிப்பை உலக மக்களுக்கு இலவசப் பரிசென அறிவித்த நாள் - ஆகஸ்ட் 19 1839. இந்த நாளையே உலக புகைப்பட நாளாகக் கொண்டாடுகிறோம்.
ஜோசப் நைஸ்போர் நீப்ஸி 1827 ஆம் ஆண்டே ஹீலியோகிராபி (Heliography) என்ற முறையில் புகைப்படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எடுத்த "எ வியூ பிரம் விண்டோ அட் லே கிராஸ் (A View from Window at Le Gras)" எனும் புகைப்படமே இன்று உலகின் மிகப்பழமையான புகைப்படமாய் கொண்டாடப் படுகிறது. அந்தப் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு.
A view from Window at Le Gras - Joseph Nicephore Niepce (1827) |
டாகியூரோடைப் புகைப்பட முறை ஹீலியோகிராபி முறையை விட எளிதானதாகவும், சிறந்ததாகவும் இருந்தது. டாகியூரோடைப் முறையில் எடுத்து மிகவும் பிரபலமான "பொலிவர்ட் டு டெம்பிள் (boulevard du temple)" என்கிறப் புகைப்படம் இதோ.
Boulevard du Temple - Louis Daguerre 1837 |
இன்றைய நிலையில் இது மிகச் சாதாரணமாகத் தெரியலாம். இந்தப் புகைப்படத்தில் உள்ள சாலைமுனையில் உள்ள ஷூ பாலிஷ் போடும் சிறுவன் - பாலிஷ் போட்டுக் கொள்ளும் ஒருவன் - இந்த இரு மனிதர்களே உலகில் முதன் முறையாய் புகைப்படத்தில் பதியப் பட்டவர்கள்.
சரி. இரண்டாவது காரணத்திற்கு வருவோம். எனது புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
Sunrise View (Place: Kuwait) |
Hide and Seek Sunset - Place: Kolathur, Chennai |
Lonely Planet - Place: Havelock Island, Andaman |
கணபதிராமன்
புகை படம் .....அப்படின்னு சொன்ன உடனே என் நினைவிற்கு வந்தது 'முண்டாசு பட்டி 'படம் தான் ....ஓவியத்தின் பரிணாம வளர்ச்சி புகைப்படம்.....இப்படியும் சொல்லலாமா ....
ReplyDeleteசொல்லலாம் ஆனால் ஓவியம் கற்பனையாகக் கூட இருக்கலாம்... சில ஓவியர்கள் 100 ஆண்டு முன்பு வரைந்ததை இன்றும் என்னவென்று புரியாமல் - புரிந்து கொள்ள ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்... அதைப்பற்றி தனியே வலை மலரும்... மகிழ்ச்சி...!!!
Delete- நாம் நுகரும் இந்த நொடிப் பொழுதை உறைய வைத்து அதை என்றும் நாம் கண்டுணர - பகிர்ந்து மகிழ - காலத்தைத் தற்காலிகமாக வெல்லும் .... super....
ReplyDeleteநன்றி... திருமலை...
Delete