நானும் உங்க ஊருதாங்க...

நானும் உங்க ஊருதாங்க...


யாதும் ஊரே யாவரும் கேளிர் 

- புறநானூறு, கணியன் பூங்குன்றனார்




நீங்கள் உங்களிடம் அறிமுகமாகும் புது ந(ண்)பரிடம் கேட்ட - கேட்கும் கேள்வி.... "உங்களுக்கு எந்த ஊருங்க...?"

இது ஒரு சராசரி கேள்வி எனினும், இந்தக் கேள்வியின் நோக்கம் என்னவெனில், பதில் கூறும் நபர் தனது ஊராக இருக்கவேண்டாம்... நமது ஊரின் 50 கிமீ வட்டாரத்தில் இருந்தாலும் கூட, நமக்கு ஒரு சந்தோஷம்... "அட நானும் உங்க ஊருதாங்க" எனக் கூறுவதில்...

நானும் உங்களிடம் கூறிக் கொள்கிறேன்... நானும் உங்க ஊருதாங்க...

என் தந்தை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி புரிந்ததால், பணி உயர்வு - இடமாற்றம் காரணமாக - எனது கல்வி காரணமாக - என் சிறு வயது முதல் பல ஊர்களில் வசித்து வந்துள்ளேன். 

பிறந்தது - தூத்துக்குடி
தந்தை ஊர் - எருக்கட்டான்சேரி (நாகை மாவட்டம்)
தாய் ஊர் - காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்)
எட்டாம் வயதில் - பெண்ணாடம் (விருத்தாசலம் அருகே)
பத்தாம் வயது முதல் கல்லூரி வரை - மேட்டூர் (சேலம் மாவட்டம்)
கல்லூரிக் காலத்தில் - கணியூர், கோயம்பத்தூர்
வாழ்க்கைத்துணையின் ஊர் - திருவாரூர்
தற்போது - சென்னை....
இது மட்டுமல்லாமல் - எனது பணி நிமித்தம் இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்து வந்துள்ளேன்.

இந்த இடமாற்றங்கள் என்னிடம் உணர்த்தியது ஒன்றைத் தான். எங்கெங்கு காணினும் சக்தியடா எனக் கூறிய பாரதி போல் நானும் உணர்ந்தேன்... எங்கும் நிறைந்திருக்கும் நட்பை....

அந்த நட்பின் காரணமாக நான் சென்ற போது என்னையும் தன்னில் ஒருவனாக நினைத்த சில நண்பர்களின் ஊரையும் எனதூராகவே நான் கருதுகிறேன். 

திருமலைசுப்பிரமணியன் - கம்பம்
மதன்குமார் - உத்தமபாளையம்
பத்மநாராயணன் - ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்ச்செல்வன் - வெள்ளக்கோயில்
சரவணக்குமார் - கரூர்
பூபதி - மகாதானபுரம் (கரூர்)
பிரபு மற்றும் அருண் பிரசாத் - திண்டுக்கல்
பிரகாஷ் , சதீஸ் - திருச்சி
சங்கர் - பொள்ளாச்சி

மொத்தத்தில், என் நண்பர்களிருக்கும் எந்த ஊரும் எனது ஊரே....

என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்... "நீ ஈரோடு காரன்கிட்ட நான் மேட்டூர்னு சொல்லியிருக்க... சென்னைக் காரன்கிட்ட நானும் சென்னைன்னு சொல்ற... நெஜமா நீ எந்த ஊருய்யா...?" நான் அவரிடம் கேட்டேன் நீங்க எந்த ஊரென...
அவர் தனது ஊரைக்கூறினார்... புன்னகையோடு பதிலளித்தேன்...

" அட நானும் உங்க ஊருதாங்க...!!!"



Comments

  1. மகிழ்ச்சி

    ReplyDelete
  2. Super. Final touch semaya irukku

    ReplyDelete
  3. Finishing touch ......super.....

    ReplyDelete
  4. அப்ப மதுரை.. அதுவும் தான நண்பா..

    ReplyDelete
  5. அப்ப மதுரை.. அதுவும் தான நண்பா..

    ReplyDelete
  6. நானும் உங்க ஊருதான்.. 👍🏽

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka