உலகப் புகைப்பட நாள் - World Photo Day
உலகப் புகைப்பட நாள் இன்று ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட நாள். இன்று - பெரும்பாலோர் கையில் கைப்பேசி வடிவிலாவது புகைப்படக் கருவி வந்துவிட்ட காலத்தில் - நாம் நுகரும் இந்த நொடிப் பொழுதை உறைய வைத்து அதை என்றும் நாம் கண்டுணர - பகிர்ந்து மகிழ - காலத்தைத் தற்காலிகமாக வெல்லும் வாய்ப்பைத் தரும் இந்தப் புகைப்படக் கலையைக் கொண்டாடுவோம். இந்தப் பதிவுக்கு இரு காரணங்கள். எதனால் உலகப் புகைப்பட தினம் இன்று கொண்டாடப் படுகிறது? என்னுடைய சுயநலம் - எனது புகைப்படத்தையும் இங்கே பகிரலாமே...!!! முதல் காரணம் விரிவாக... சுமார் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். பிரான்சு நாட்டின் இரு கலைஞர்கள் - தொழில்நுட்ப வல்லுனர்கள் - கண்டுபிடிப்பாளர்கள் ஜோசப் நைஸ்போர் நீப்ஸி (Joseph Nicèphore Nièpce) மற்றும் லூயி டாகியூர் (Louis Daguerre) இருவரும் 1837 ஆம் வருடம் டாகியூரோடைப் (Dagguerotype) என்னும் புகைப்பட செயல்முறை தொழில்நுட்பத்தினை (Photo processing technique) உருவாக்குகின்றனர். இரு வருடம் முயன்று, அந்தத் தொழில்நுட்பம் ஜனவரி 9 1839 அன்று பிரான்சு அறிவியல் கழகத்தால் அங்கீகரிக்கப் படுகிறது. இதற...