Posts

Showing posts with the label places

சனங்களின் தெய்வங்கள்

Image
சனங்களின் தெய்வங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். - திருக்குறள் இந்தப் பதிவு எழுதக் காரணமாயிருந்த - எழுதத் தூண்டிய என் நண்பன் குமரேசனின் சிலப் புகைப்படங்களுக்கு நன்றிகள் கோடி... நமது கிராமங்களில் ஊருக்கு வெளியே - ஏரிக்கரையில் - வாய்க்கால் அருகே - சிலக் கல்லை நட்டு - வெட்டருவாள் மீசையுடனோ  பூசிக்கப்படும் சிலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். காவல் தெய்வமென்றும் - இரவில் சென்றால் அடித்து விடும் என்றும் கதை கேட்டு பயந்திருக்கலாம். புகைப்படங்கள்: குமரேசன் தமிழ்நாட்டில் இப்போது காவிரிப் பிரச்சனை இருப்பது போன்று அந்தக் காலங்களிலும் நீர்ப் பிரச்சனை இருந்தது உண்மையே. கிராமங்களுக்கு இடையே வாய்க்கால் பிரச்சனை - கண்மாய்ப் பிரச்சனை என ஊரில் கலவரம் கூட நிகழ ஏதுவான பதற்றமான சூழலிலேயே இருந்து வந்தனர் நம் முன்னோர். இந்நிலையில், ஊரின் பாதுகாப்புக்காகவும், நீர்நிலை மற்றும் விவசாயத்தைக் காக்கவும், ஊரின் சில வீரர்கள் முன் வந்தனர். இரவில் ஏரி, கண்மாய், வாய்க்கால், வயல்வெளிகளைக் காவல் புரிந்து வந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலோ, மற்ற ஊ...

நானும் உங்க ஊருதாங்க...

Image
நானும் உங்க ஊருதாங்க... யாதும் ஊரே யாவரும் கேளிர்  - புறநானூறு, கணியன் பூங்குன்றனார் நீங்கள் உங்களிடம் அறிமுகமாகும் புது ந(ண்)பரிடம் கேட்ட - கேட்கும் கேள்வி.... "உங்களுக்கு எந்த ஊருங்க...?" இது ஒரு சராசரி கேள்வி எனினும், இந்தக் கேள்வியின் நோக்கம் என்னவெனில், பதில் கூறும் நபர் தனது ஊராக இருக்கவேண்டாம்... நமது ஊரின் 50 கிமீ வட்டாரத்தில் இருந்தாலும் கூட, நமக்கு ஒரு சந்தோஷம்... "அட நானும் உங்க ஊருதாங்க" எனக் கூறுவதில்... நானும் உங்களிடம் கூறிக் கொள்கிறேன்... நானும் உங்க ஊருதாங்க... என் தந்தை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி புரிந்ததால், பணி உயர்வு - இடமாற்றம் காரணமாக - எனது கல்வி காரணமாக - என் சிறு வயது முதல் பல ஊர்களில் வசித்து வந்துள்ளேன்.  பிறந்தது - தூத்துக்குடி தந்தை ஊர் - எருக்கட்டான்சேரி (நாகை மாவட்டம்) தாய் ஊர் - காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) எட்டாம் வயதில் - பெண்ணாடம் (விருத்தாசலம் அருகே) பத்தாம் வயது முதல் கல்லூரி வரை - மேட்டூர் (சேலம் மாவட்டம்) கல்லூரிக் காலத்தில் - கணியூர், கோயம்பத்தூர் வாழ்க்கைத்துணையின் ஊர...