முதலாகப் பறந்த நாள் - First flying day

முதலாகப் பறந்த நாள்

முதலாய் முயன்று தோற்றாலும் - தன் பெயர் காலத்தால் அழிந்தாலும் - என்றோ எங்கேயோ சிலரால் ஒருவன் நினைவுக் கொள்ளப்படுவான். அவன் விடாமுயற்சி காரணமாக...

சரியாக இன்றிலிருந்து 113 வருடங்கள் முன்பு, ஜெர்மனி ஹானோவர் நகரின் வெளியே, வாஹ்ரென்வெல்டர் ஹெய்ட் எனும் இடத்தில் தான் உருவாக்கிய விமானத்தை ஒரு சோதனை ஓட்டத்திற்குத் தயார் படுத்தியிருந்தான், 30 வயது இளைஞனான கார்ல் ஜேதோ (Karl jatho) 
கார்ல் ஜேதோ (1873 - 1933)

தன்னால் வடிவமைக்கப்பட்ட விமானத்தை நிரூபிக்க - இந்த உலகை தன் பக்கம் திருப்ப - தன்னால் இந்த உலகிற்கு ஏதேனும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை துணைகொண்டு செலுத்தினான் விமானத்தை. பறக்கவும் செய்தான். பயணதூரம் 18மீட்டரில் முடிந்தது. 1 மீட்டர் உயரமே பறக்க முடிந்தது. 

முயற்சிக்குப் பாராட்டாவது கிடைக்கும் என எதிர்பார்த்த கார்லுக்கு எள்ளலும் கிண்டலுமே பரிசாயின. முயற்சியில் பங்கெடுக்காத பலர், இது பறத்தல் அல்ல தாவுதல் எனக் கேலி செய்தனர். முயற்சி கைவிடாத கார்ல், 1903 நவம்பர் மாதம் 68மீட்டர் வரை விமானம் செலுத்தினான். இம்முறை 4மீ உயரம் வரை பறந்தது.

கார்ல் ஜேதோவின் விமானம்

ரைட் சகோதரர்களுக்கு 4 மாதம் முன்பாகவே விமானத்தில் பறந்திருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்து இவர் பெயர் இல்லாமல் போனது வியப்பே. பின்னாளில், ஜெர்மனி ஹேனோவரில் பறக்கும் பள்ளியும், விமானத் தொழிற்சாலையும் நிறுவிய கார்ல் ஜேதோ, ஏனோ ரைட் சகோதரர்கள் பெற்ற புகழையும் வெற்றியையும் அடையவே இல்லை.

இன்று ஆகஸ்ட் 18 ஆம் நாள் - கார்ல் ஜேதோ முதன் முதலாகப் பறந்த நாள்.

தகவல் : pioneer.com வலைத்தளம்


Comments

  1. பல உண்மைகள் இது போலவெ மறைக் க படுகின்றன

    ReplyDelete
    Replies
    1. தேடினால் கிடைக்கும் உண்மை...

      Delete
  2. மறைக்கப்பட்ட உண்மை.தகவலுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka