Posts

Showing posts with the label bio

விரலுக்கு விழி தந்தவன் - Louis Braille

Image
நீங்கள் உங்கள் வீட்டு முகப்பறையில் ஓர் இரவுப் பொழுதில், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், மின்சாரம் இல்லாமல் போனால் - திடீரென உங்கள் சூழல் இருண்டு போனால் ஒரு மணித்துளியேனும் பதறுவீர்கள் அல்லவா? ஆனால், எந்நேரமும் இருளையேக் கண்டு கொண்டிருப்போர் பற்றி என்றேனும் நினைத்திருக்கிறோமா? நினைத்திருப்பினும், அவர்தம்அன்றாட வாழ்வுதனை மேம்படுத்த உதவும் முறைகளைப் பற்றி அறிந்திருக்கிறோமா? அவர்களும் இன்று கல்வி கற்க - எழுதப்படிக்க ஏதுவான ஒரு எழுத்துமுறையை உருவாக்கிய ஒரு மேதையின் பிறந்தநாள் இன்று... இவரது பிறந்தநாளை உலகப் பார்வையற்றோர் கல்வி நாளாக உலகமேக் கொண்டாடட்டும்... வாருங்கள், இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். கூவ்ரே எனும் சிற்றூர்... பிரான்சின் பாரீஸ் நகரிலிருந்து 20 மைல்கள் கிழக்கே அமைந்துள்ள ஊர்... இந்த ஊரில் வசித்த சைமன் ரீன் - மோனிக் பிரெய்ல் இணையருக்கு 4 ஜனவரி 1809 அன்று நான்காவது மகனாகப் பிறந்தான் லூயிஸ் பிரெய்ல். லூயிஸ் பிரெயில் (4.1.1809 - 6.1.1852)  சைமன் ரீன் தனக்குச் சொந்தமான 3 ஹெக்டேர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார். தோல் பொருட்கள் கொண்டு க...

தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher

Image
மயிலை சீனி வேங்கடசாமி தமிழாலே ஒன்னாணோம்னு சொல்லிக் கொள்ளும் நாம் முன்னால் நம் வரலாற்றினைச் சரியாகத் தரவுகளுடன் புரிந்து கொண்டுள்ளோமா? தரவுகள் இல்லாமல், சாதீயம், பரம்பரை, மதம் எனப் பலப்பிரிவுகளால் பிரிந்து - ஒருதலைப்பட்சமாக வரலாற்றைத் திரித்து வைத்திருந்த வேளையில், தரவுத்தேடி - நாடு முழுதும் சென்று - களப்பணியாற்றி - ஆய்ந்து - பல ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மூலம், தமிழின் தொன்மையை உலகுக்கு - ஏன் தமிழருக்கே காட்டிய மயிலை சீனி வேங்கடசாமியின் 117 வது பிறந்தநாள் இன்று... மயிலை சீனி வேங்கடசாமி (16.12.1900 - 8.5.1980) டிசம்பர் 16, 1900 அன்று மயிலை சீனிவாசன் எனும் சித்த வைத்தியர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார், வேங்கடசாமி. முதல் அண்ணன் தந்தையைப் போல் சித்த மருத்துவத்தில் நாட்டம் கொள்ள, இரண்டாம் அண்ணன் கோவிந்தராசனோ, தமிழ்ப்பற்று கொண்டு கவியெழுதலானார். திருக்குறளின் காமத்துப்பாலின் 250 குறள்தனை நாடகவடிவாய் எழுதினார். மேலும், மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்ணனின் தமிழ் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய வேங்கடசாமிக்கும் தமிழின் தொன்மையான அனைத்தையும் தேடிப்படிக்க எண்ணம்...

பிப்ரவரி 18 - ஒரு நாள் இரு சிறப்பு February 18

Image
நான் ஏற்கனவே எழுதியது போல ஒரு சில நாட்கள் பல வகைகளில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. இன்றைய தினமும் அவ்வாறே. இன்று நாம் மறந்த ஒரு சிறந்த தலைவனின் பிறந்த தினம். முதன் முதலாய் வானஞ்சல் (Airmail) சேவை துவங்கிய தினம். இரண்டும் இன்றைய பதிவாய்.  ம. சிங்காரவேலர் பொதுவுடைமைவாதி, சிந்தனைச் சிற்பி, வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், புரட்சியாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமைக் கொண்ட இவரை இன்று பலர் மறந்தே போய்விட்டோம் என்பது மறக்கமுடியாத உண்மை. ம. சிங்காரவேலர் 18.02.1860 ஆம் ஆண்டு மீனவக் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலு பள்ளிப் படிப்பு முதலே படிப்பில் சிறந்து விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்த இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1907 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராய் பதிந்த இவர், தன் வாழ்நாளில் பேராசைக்காரர்களுக்கோ, பணம் கொண்டு அடக்குமுறை செய்பவர்க்கோ வாதாடியதில்லை. வழக்கறிஞராய் சம்பாதித்ததில் பல புத்தகங்கள் வாங்கி தன் வீட்டிலே சுமார் 20000 புத்தகம் கொண்ட நூலகம் அமைத்திருந்தார். வெள்ளையனை எதிர்ப்பதில் ...

அன்னி ஃபிரான்க் - Anne Frank

Image
ஒரு 15 வயது சிறுமியால் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா? வாழ்வதற்குக் கூட உரிமையில்லை என தன் இனமே அழிப்புக்கு உள்ளான நேரம் கூட உலகின் அழகியலைக் காண - உள்ளத்து அழகை எழுத இச்சிறுமியின் மனத்தால் மட்டுமே முடியும். இவரின் எழுத்துகள் இவர் இறந்த பின்னரே உலகிற்குத் தெரிந்தது. என்றாலும், நேர்மறைத் தன்மையைப் (Positivity)  பரப்பும் இவர் வார்த்தைகள் நம்மால் கொண்டாடப்பட வேண்டியதே. இவரின் வாழ்க்கையும், இவரின் நாளேட்டுக் குறிப்பில் இருந்து சில கூற்றுக்களும் இன்றையப் பதிவாய். அன்னி ஃப்ரான்க் (Anne Frank 1929 - 1945)  ஃபிரான்க் குடும்பம்: அன்னி ஃபிரான்க் ( முழுப்பெயர்: அன்னிலி மேரி ஃபிரான்க் ) ஓட்டோ மற்றும் எடித் ஃபிரான்க் தம்பதியின் இரண்டாவது மகளாக 12.06.1929 அன்று பிறந்தார். மார்கட் ஃபிரான்க் இவரது மூத்த சகோதரி. இந்த அழகிய குடும்பம் ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபர்ட் நகரில் வசித்து வந்தது. 1933ல் அடோல்ப் ஹிட்லரின் நாஜி கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஜெர்மனியில் இவர்களின் வாழ்வில் பெரும் மாற்றம் வந்தது. நாஜி கட்சியினரால் ஜெர்மனியில் இருந்த யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது அடக்குமுறை அவிழ...

கோடுகள் வரைந்து பலரைக் காப்பாற்றியவன் - Samuel Plimsoll

Image
பள்ளிப் பாடத்தில் அறிவியலில் படித்த நியாபகம்... எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல் ஆசிரியர் சொன்னதை மனனம் செய்து மதிப்பெண்ணுக்கு மட்டும் படித்த காலத்தில் படித்திருக்கிறேன், ப்ளிம்சால் கோடுகளைப் பற்றி. கப்பலின் அதிகபட்ச பாரச்சுமை அளவைக் காட்டும் விதத்தில் கப்பலின் பக்கவாட்டில் போடப்படும் கோடுகளே ப்ளிம்சால் கோடுகள். (பார்க்க படம்) பிளிம்சால் கோடுகள் ஒரு காலத்தில் மதிப்பிற்கு அதிகமாக காப்பீடு செய்யப்பட்ட கப்பல்களை - சரிவர பராமரிப்பு செய்யப்பட்டாத கப்பல்களை கப்பல் முதலாளிகளே அதிக பாரமேற்றி நடுக்கடலில் மூழ்கடிப்பது வழக்கமாய் இருந்தது. காப்பீடு மூலம் அவர்களுக்கு பணம் மீண்டும் கிடைத்து விடுவதால், அதிக பாரம் ஏற்றுவது பற்றியோ, பராமரிப்பு பற்றியோ கப்பல் முதலாளிகள் மிகவும் மெத்தனமாகவே இருந்து வந்தனர். இந்த நேரத்தில், இந்த கப்பல்களை 'கல்லறைக் கப்பல்கள்' எனக் கூறி அபாயமணிக் குரலால் இங்கிலாந்து பாராளுமன்றத்தை - இங்கிலாந்து மக்களை - உலகையே தன் பக்கத்தில் திரும்ப வைத்தவர் சாமுவேல் ப்ளிம்சால் (Samuel Plimsoll). இன்று இவரின் பிறந்த நாள்  சாமுவேல் ப்ளிம்சால் 10 பிப்ரவரி 1824 அன்று பிர...

புகைப்பட மேதை TNA பெருமாளுக்கு நினைவேந்தல் - Tribute to Photography Legend TNA Perumal

Image
இன்று உயிர்நீத்த கானுயிர் புகைப்பட வல்லுநர் (Wildlife Photographer) திரு TNA பெருமாள் பற்றி சிலக் குறிப்புகளும், அவரது புகைப்படங்களுமே இன்றையப் பதிவு.  1932 ஆம் ஆண்டு பிறந்தார் தஞ்சாவூர் நடேசன் அய்யம் பெருமாள். சுருக்கமாக TNA பெருமாள். சிறுவயது முதல் புகைப்படக்கலையில் கொண்ட பற்றினால் அந்தத் துறையில் தனிக்கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்தார். 1960 முதல் கானுயிர் புகைப்படம் எடுக்கத் துவங்கினார். வன விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இவர் எடுத்த பலப் புகைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவை.  கருப்பு வெள்ளையில் இவரெடுத்த புகைப்படங்கள் இன்றும் இவர் திறமையைப் பறைசாற்றும்.  விருதுகளும் கௌரவங்களும்: 1961 - மைசூர் புகைப்பட சங்க உறுப்பினர் 1963 - பிரான்ஸின் FIAP (Federation de I Art Photographique) ன் ஆர்டிஸ்ட் ஃபியாப் விருது 1975 - தேசிய பத்திரிக்கையாளர் குழுவின் புகைப்பட விருது 1977 - லண்டன் Royal Photographic Society ன் Associateship (ARPS) 1978 - லண்டன் Royal Photographic Society ன் Fellowship (FRPS) 1983 - FIAP ன் மாஸ்டர் ஃபோட்டோகிராஃபர்...

ஜேசன் லூயிஸ் - Jason Lewis

Image
நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்களை உலகத்தில் யாரோ சிலர் எங்கோ முயன்று கொண்டுதானிருக்கிறார்கள். உலகத்தை எந்த எரிபொருள் துணையில்லாமல் சுற்றி வருவது சாத்தியமானதா? முயன்றால் முடியாதது இல்லை என்கிறார் ஜேசன் லூயிஸ்.  ஜேசன் லூயிஸ் இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷியர் பகுதியைச் சார்ந்தவர். 13 செப்டம்பர் 1967 அன்று பிறந்த ஜேசன் லூயிஸின் பள்ளிப் பருவம் அனைவரைப் போல சாதாரணமாகவே இருந்தது. இவரின் நண்பர் ஸ்டீவி ஸ்மித் மற்றும் அவரின் தந்தை ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோரின் தூண்டுதல் மற்றும் இயற்கையின் மீது அவர்களின் பார்வை ஜேசனின் உலகைப் புரட்டிப் போடுவதாய் இருந்தது. ஸ்டூவர்ட் ஸ்மித் தனது கனவுப் பயணமான 'பெடல் ஃபார் த பிளானெட்' (Pedal for the Planet) பற்றி ஜேசன் மற்றும் ஸ்டீவியிடம் பேசிய வண்ணம் இருப்பார். இதற்காக நிதி திரட்டவும் ஆரம்பித்திருந்தார் ஸ்டூவர்ட். பின்னாளில் அந்த நிதியே ஜேசனின் பயணமான 'எக்ஸ்பெடிஷன் 360' (Expedition 360)க்கு ஆதாரமாக அமைந்தது.  ஜேசன் லூயிஸ்  12 ஜூலை 1994ல் நண்பன் ஸ்டீவியுடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருந்தார் ஜேசன் லூயிஸ். பயணத்தில் ஒரே விதிதான் : ...

அன்னி பெசன்ட் - ANNIE BESANT

Image
பெண்ணின் கல்வி எவ்விதம் அவளை மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது என்பதற்கு ஆகச் சிறந்த சான்றானவர் அன்னி பெசன்ட் அம்மையார். அயர்லாந்து நாட்டைப பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிறந்து - தனது ஐந்து வயதில் தந்தையை இழந்து - தாயாலும் கைவிடப்பட்ட அன்னி வுட்டுக்கு ஆதரவாய் வந்தவர் எல்லன் மேரியட் (Ellen Marriot) எனும் தாயின் தோழியே. வெறும் அடைக்கலம் மட்டும் தராமல், சிறந்தக் கல்வியையும் சேர்த்து அன்னிக்கு அளித்து வளர்த்தார்  ஒரு பெண் தனி மனிதியாய் சமூகத்தில் நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அதற்கு சிறந்த கல்வியும் தெளிந்த பார்வையும் அவசியம் என்றும் அன்னிக்கு போதித்தார்  எல்லன். சிறந்த பள்ளிக் கல்வி மட்டுமல்லாது, பல புத்தகங்களின் மூலம் தனது அறிவின் பரப்பை விரிவாக்கிக் கொண்ட அன்னி வுட், தன் பதின்ம வயதின் இறுதிகளில், ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு சென்று தன் பயண அனுபவங்கள் மூலமும் பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார். புத்தகம் மூலம் உலகத்தையும், பயணம் மூலம் தன்னையும் கண்டறிந்தார் அன்னி வுட். 1867 ஆம் ஆண்டு தனது 20ஆம் வயதில், பிரான்க் பெ...

அசோகமித்திரனுக்குப் பிறந்தநாள் - Ashokamithran's Birthday

Image
தன் எழுத்தைக் கொண்டு சிறந்த கதைகளைச் சொல்லி, உலக அளவில் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த அசோகமித்திரனுக்கு இன்று 85 ஆம் பிறந்தநாள். அசோகமித்திரன்  1931 ஆம் வருடம் செப்டம்பர் 22 அன்று செகந்திராபாத்தில் பிறந்தார் தியாகராஜனாக. 1952 வரை, அங்கு வசித்த தியாகராஜன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சென்னைக்கு வந்தார். பத்தாண்டுகளுக்கு மேலாக சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவருக்கு கிடைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பு அவரையும் எழுத வைத்தது. 1953 ல் அவர் எழுதிய அன்பின் பரிசு நாடகம் பல பரிசுகளை பெற்றுத் தந்தது. 1966 முதல் எழுத்தையே தன் பணியாகக் கருதி முழுநேர எழுத்தாளனாக மாறிய தியாகராஜன், தன் பெயரையும் அசோகமித்திரன் என மாற்றிக் கொண்டார்.  மைய நீரோட்டமாய் எள்ளலும், நகைச்சுவையும் கொண்ட நடையும், எளிய மக்களின் வாழ்க்கை நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றது அசோகமித்திரனின் எழுத்துக்கள். இவர் எழுதிய நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ஆங்கீகார...