Posts

Showing posts with the label awareness

தாய்மொழிப் போற்றுதும் - Celebrate Mother Language

Image
தாய்மொழிப்  போற்றுதும் இன்று உலகத் தாய்மொழி நாள்... ஐக்கிய நாடுகள் மன்றம் பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துக் கொண்டாடுகிறது.  ஏன் தாய்மொழி?  மொழி அறிவு அல்ல... அது கருத்துத்தொடர்புக்கான ஒரு கருவி. ஆனால், ஒரு கருவியைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை சரிவர பயன்படுத்தலும் கைகூடும். ஒரு மொழி அறிவு அல்ல எனினும் குறைந்த அளவு மொழியறிவு இங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சுமார் 5 மாதங்கள் முதல் குழந்தையின் செவியுணர் திறன் துவங்கி விடும். அவைக் கேட்கும் சொற்களே அக்குழந்தையின் மூளையின் மொழியறிவுக்காக இருக்கும் பகுதியில், கட்டுமானக் கற்களாய் அடுக்கப்படும். வயிற்றில் இருக்கும் போதும், பிறந்த பின்பும் தான் கேட்கும் ஒவ்வொரு புதிய சொற்களையும் மூளை தானாகப் பதிவு செய்கிறது. இவ்வாறாக, ஒரு குழந்தை தான் கேட்டச் சொற்களைக் கொண்டு, எவ்வித இலக்கணமும், ஆசிரியரும் இன்றி தானே பேச எத்தனிக்கும் மொழியே தாய்மொழி.  இந்தத் தாய்மொழி மூலம் கற்றிடில், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. யார் தன் தாய்மொழியில் மிகவும் வலிமையுள்...

உழைச்சு சம்பாதிங்கடா...! - Work and Earn...!

Image
இரு நாட்களாக, முகநூல், ட்விட்டர், வாட்ஸாப் செய்லிகள் வாயிலாக, ஒரு காணொளியும், அதற்கு ஒரு முன்னுரையும் பரவலாகி வருகிறது. பொண்ணு எடுத்தா இப்படி ஒரு வீட்லெ பொண்ணு எடுக்கணும்👇👇👇 அந்தக் காணொளியில் "பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த" என்று எம்ஜிஆருக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிக்கொண்டிருக்க, ஒரு திருமண இணையர் முன் செல்ல, அவர் பின் அந்த பெண் வீட்டார் செய்த சீதனப்பொருட்கள் வரிசையாக அணி வகுக்கின்றன. இதைப் பகிரும் யாருக்கும் நம் நாட்டில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமுதாய நோயான இந்த வரதட்சணைக் கொடுமையைப் பற்றிய சிறு குற்றவுணர்வு கூட இருப்பதில்லை... யாரோ வீட்டில் நிகழ்வது போலவும், இப்படி நமக்குக் கிடைக்கவில்லையே எனப் பொறாமைக் கொள்வது போலவும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பெண்ணை மணம் புரிவதற்கு பணம், பொருள் பெறுவது என்பது அந்த ஆணை என்னவாக மாற்றுகிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் கிடைக்கும் காசுக்கு வாயைப் பிளக்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? சரிப்பா, அந்தக் காணொளியை பகடி / எள்ளல் செய்வதற்காக பகிர்ந்திருக்கலாம் அல்லவா? என நீங்கள் கேட்கலாம்... ஆனால், காண்போரிடம் ஏன் இப...

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள் - World Day to Combat Desertification and Drought

Image
இன்று பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத்தில் உலகை - இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் - சுயநலமாய் சுரண்டி தின்னாமல் நம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியான இடமாக இந்த புவியை விட்டு செல்ல வேண்டிய கடமை உள்ள அனைவருக்கும் முக்கியமான நாள்.  ஜூன் 17 - உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்.  1994 முதல் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் இதற்கான பல விழிப்புணர்வு முகாம்களும் நிகழ்வுகளும் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேசுபொருள் தலைப்பாக கொண்டு அதன் அடிப்படையில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதன்படி இந்த வருட பேசுபொருள்: நிலச்சீரழிவும்  மக்கள் இடம்பெயர்வும் (Land Degradation and Migration) இன்று நம் நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற தலைப்பு தான், அல்லவா?  இன்று மக்கள் பணிக்காக வேறு நாடுகளுக்கு அல்லது நகரம் நோக்கி இடம்பெயர முக்கிய காரணிகளில் ஒன்று - நிலச்சீரழிவு. வெகு காலமாக ஆற்றுமணல் அள்ளுதல், கால்வாய் பராமரிப்பின்மை, நீர் மேலாண்மையின்மை, நெகிழிப் பயன்பா...

உலக புவித்தாய் நாள் 'ஏப்ரல் 22' - International Mother Earth Day

Image
மனிதர்கள் நாம் மட்டுமல்லாமல், நாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல உயிர்களுக்கு உணவு தந்து - உறைவிடமாய் இருந்து வருவது நம் புவித்தாய்.  ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஏப்ரல் 22 இன்று உலக புவித்தாய் நாளாக கொண்டாடுகிறது. உயிர் வாழ தகுதியுள்ள இந்தப் புவியில், மனிதனோடு, வாழும் அத்தனை உயிர்களுக்கும், தாவரங்களுக்கும் இந்த புவித்தாய் உரிமை உடையவளாய் இருக்கிறாள் என்பதை கூறும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த வருடத்தின் பேசுபொருள் " சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அறிவு - Environmental & Climate Literacy ".  கல்வியறிவு - விழிப்புணர்வு இவையே நம் முன்னேற்றத்திற்கு வழிகோலும். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் மட்டுமல்லாது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது,  நாம் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளும், இயற்கையை விட்டு அகன்று செல்லும் ஒவ்வொரு அடியும், இப்புவியில் நமது வாழ்வை நாம் கடினமாக்க, நமக்கே செய்து கொள்ளும் வினை என்பதை நாம் உணர வேண்டும்.  ஆறுகள் ஆண்டாண்டு காலம் கொண்டு சேர்த்த வளமிக்க மண...

உலகை வேறாய்க் காண்பவர்கள் - The People who see the world differently

Image
" காணும் காட்சியின் வண்ணம்  காணும் கண்களைப் பொறுத்தது...  காண்பது வேறாய் இருந்தால் - காண்பதைப் புரிதல் வேறாய் இருந்தால்  அது குறையல்ல... நிறக்குருடு குருடல்ல... குறைபாடு நோயல்ல.. . " - கணபதிராமன்  நீங்கள் வேதியியல் ஆய்வகத்தில் பினாப்தலீன் நிறமி உபயோகித்து நிறமாற்றம் நிகழ்வதை உணர முடியாமல் இருந்துள்ளீர்களா?  நிறம் மாறும் ஒளியீரி (Color Changing LED) நிறம்  சிவப்பா பச்சையா என குழம்பி இருக்கிறீர்களா?  மற்றவர்கள் எளிதாய் உணரும் நிறங்களை உங்களால் உணர முடியாமல் போனதுண்டா?  இந்தக் குறை உங்களிடம் மட்டுமல்ல உலகில் சுமார் 4.5 சதவீத மக்கள் நிறக்குருடு உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் ஆண்களே. இந்த நிறக்குருடு எதனால் ஏற்படுகிறது? எத்தனை வகை? ஆண்கள் அதிகம் பாதிக்கக் காரணம் என்ன? இதுவே இன்றையப் பதிவு.  நமது கண்ணில் விழித்திரையில் அடிப்படை நிறங்களை உணர்வதற்கு கூம்பு வடிவ செல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மற்றும் செயல் திறன் நமக்கு காணும் காட்சியின் வண்ணங்களைப் பிரித்தறிய உதவுகிறது. அடிப்படை நிறங்க...

ஹார்வர்டில் தமிழ் இருக்கை - Tamil Chair in Harvard

Image
ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்க தமிழ் இருக்கை (Tamil Chair) கொண்டு வருவதின் மூலம் நமது மொழியைக் காப்பாற்றி விட முடியுமா? இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்? இந்தக் கேள்விகளைக் களைந்து விட்டு உற்று நோக்கும் போது மனதில் எழும் முக்கியமான வினா "இங்கு எத்தனைப் பேருக்கு 'ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்' அமையப் போகவிருக்கும் தமிழ் இருக்கைப் பற்றித் தெரியும்?" தெரிந்து கொள்வோம்.  ஹார்வர்ட் பல்கலைக்கழகம்: 1636 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மாஸ்சூஸட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது. பல துறைகளில் தன் பாடத்திட்டங்களில் சுய ஆய்வு மூலம் மென்மேலும் தன்னைத் தானே மெருகேற்றி இன்று உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனமாக ஹார்வர்ட் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், கலை, மொழியியல் முதலான துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நமது தமிழுக்கென்று ஒரு இருக்கை - ஒரு துறை அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பல தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு திரட்டி பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.  தமிழ் மொழியை நா...

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? - Where are we heading?

Image
எங்கே போய்க் கொண்டிருக்கிறது நாடு...? எங்கேத் தோற்றுப் போகிறோம் நாம்...? ஜோதி சிங், ஜெஸிகா லால், நந்தினி, ஹாசினி போல் தெரிந்தவை குறைவு. குற்றம் செய்தவனைத் தண்டிக்க கோஷம் போடும் நாம் - மத்தியக் கிழக்கு நாடுகள் போல் அதிகபட்ச தண்டனை வேண்டும் எனக் கொதிக்கும் நாம் - குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய போகிறோம்? தண்டனைகள் பயத்தை உருவாக்கலாம். விழிப்புணர்வை உருவாக்குமா? மனமாற்றத்தை உருவாக்குமா? குழந்தைகளை - பெண்களை போகப் பொருளாய் பார்க்கும் மனநோய் சரியாகுமா? ஆண் குழந்தைக்கும் ஒழுக்கத்தை சொல்லித் தருவோம்.  பெண் குழந்தைக்கு வீரம் - தற்காப்பு சொல்லித் தருவோம். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து அனைத்து பாலருக்கும் சொல்லித் தருவோம். முதலில் குழந்தைகளிடம் பேசுவோம். நிறைய பேசும் குழந்தைகள் திடீரென மௌனமானால் என்ன காரணம் எனக் கண்டறியுங்கள். என் பெற்றோரிடம் எது வேண்டுமானால் சொல்லலாம் என்ற எண்ணத்தை உருவாக்குங்கள். சந்தேகங்களை விளக்குங்கள். அனைத்துக்கும் தொழில்நுட்பத்தையும், இணையத்தையும் குறை சொல்வது எளிது. ஆனால், இவை இல்லாத காலத்திலும் இவ்வகை கொடுமைகள் நிகழ்ந்து வந்தே உள்ள...

குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - Save Children

Image
கடந்த ஞாயிறு அன்று முகநூலில் வந்த ஒரு செய்தி... குழந்தை காணவில்லை என. பெயர் ஹாசினி. புகைப்படத்தில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை. வயது 7. பொதுவாக, குழந்தையைக் காணவில்லை என வரும் வதந்திகளைப் போல் இதையும் நினைத்து கடந்து சென்றிருந்தேன். ஆனால், நான் நம்பும் சிலரும் இந்தப் பதிவை பகிர, இது உண்மை என அறிந்து கொண்டேன். இந்த நிலையில் இன்று காலை கிடைத்த செய்தியில் 'குழந்தை ஹாசினி மாங்காடு அருகே இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.' என அறிந்தேன்.  ஹாசினி அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த செய்தி, என்னுள் பல கேள்வியை எழுப்பியது. இணையம் வளர்ந்து, சமூக வலைத்தளம் பல நாடுகளை இணைத்துள்ள இந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவது குறித்து இணையத்தில் ஏதாவது தகவல் கிடைக்குமா எனத் தேடிய போது, இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. http://trackthemissingchild.gov.in/trackchild/tamilnadu   காணாமல் போன குழந்தைகள், கிடைத்த குழந்தைகள் குறித்த தகவல்களை (புகைப்படம் உள்பட) அனைத்து காவல் நிலையங்களில் இருந்து சேகரித்து வெளியிடுகிறது இந்த வலைத்தளம். இந்த வலைத்தளம் தரும் தகவல்கள் இன்னும...

விழிப்பா? கண்துடைப்பா? - Reverse Osmosis

Image
அறிவியல் வளர்ச்சி என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்தி - வாழ்வை எளிதாக்கி - ஒரு சுமூகமான வாழ்சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறதா? வழமையாக, பெரிதும் சந்தைப் படுத்தப்படும் ஒரு பொருளைப் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல் இதுவே நமக்கு சாலச் சிறந்தது என வாங்கும் போக்கு இன்று அதிகமாகி உள்ளது. விழிப்புணர்வு என்ற பெயரில் ஆட்டுமந்தையாகி போயிருக்கும் இந்த தலைமுறையின் ஒரு சக ஆட்டின் பதிவு இது.  ஒரு இருபது வருடம் முன்பு, என் அன்னை கிணற்றில் இருந்தோ, அல்லது நமது உள்ளாட்சி நிருவாகங்கள் மூலம் நிறுவப்பட்ட பொதுக்குழாய் மூலமோ, குடிநீர் பிடித்து வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வீட்டுக்கு வீடு நீர்க்குழாய் இணைப்பு வந்துவிட்ட போதிலும், நம் மனதில் ஒருவித பயத்தை விதைத்து, அதை முதலீடாய் வைத்து நம்மிடம் செய்யப்படுவதே நீர் அரசியல். கிணற்றில் இருந்து நேராய் நீர் குடித்த நாளில் இல்லாத நோய்கள், அனைத்து விஷயத்திலும் சுத்தமாய் இருக்க நினைக்கும் ஒரு சமூகத்தில் வளரக் காரணம் என்ன? நாம் என்ன தவற விடுகிறோம்? பூடகங்கள் போதும் என நினைக்கிறேன். நேரே விஷயத்தின் உள் செல்வ...

2016 ஊனமுற்றோர்க்கான ஒலிம்பிக்ஸ் - 2016 Paralympics

Image
இன்று ரியோவில் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்க உள்ளன. நம் நாட்டின் சார்பாக 19 போட்டிகளில் கலந்து கொள்ள 16 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் 13 ஆண்கள், 2 பெண்களும், அம்பெய்தலில் ஒரு பெண்ணும், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சலில் தலா ஒரு ஆணும் போட்டியிட உள்ளனர். பொதுவாகவே, கிரிக்கெட் தவிர வேறெதற்கும் கவனம் தராத நம் நாட்டில், விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் தலையீடுகளை சமாளித்து - நாட்டிற்காக மட்டுமல்லாமல் - 'ஊனம் உடலில் மட்டுமே மனதில் அல்ல' என மன ஊனம் படைத்த பலருக்குப் பாடமாய் தம்மை முன்னிறுத்தி நிற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி தன்னம்பிக்கைக்குத் தலைவணங்குகிறேன். இந்திய அணி - ரியோ பாராலிம்பிக்ஸ் 2016 அம்பு எய்தல்: பூஜா - அம்பு எய்தல் உலகத் தர வரிசையில் 5 ஆம் இடம் தடகளப் போட்டிகள்: ஓட்டப் பந்தயம்: அன்குர் தாமா - 1500மீ ஓட்டம் உயரம் தாண்டுதல்: மாரியப்பன் தங்கவேலு - உயரம் தாண்டுதல் வருண் சிங் பாட்டி - உயரம் தாண்டுதல் ஷரத் குமார் - உயரம் தாண்டுதல் ராம் பால் - உயரம் தாண்டுதல் ...

திறமை மதியா சமூகம் - Subash Mukhopadhyay

Image
சுபாஷ் முகோபாத்யாய்... இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா...? இவர் யாரென அறிந்திருக்கிறோமா...? உலகம் இன்றும் பல திறமை கொண்ட இரத்தினங்களைக் குப்பையில் கொட்டி வீணடித்துக் கொண்டிருக்கிறது. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கைக்கு திமிர் எனப் பெயர் சூட்டி - வதைத்துக் கொல்லத் திட்டமிட்டுக் காத்திருக்கும் இந்த உலகால் கொலை செய்யப்பட்ட ஒரு மருத்துவனின் கதை இது. சுபாஷ் முகோபாத்யாய் (1931 - 1981) சுபாஷ் முகோபாத்யாய் (Subash Mukhopadhyay) 16-01-1931 அன்று பீஹார் மாநிலம் ஹலாரிபாக் எனுமிடத்தில் பிறந்தார். படிப்பில் நன்கு விளங்கிய சுபாஷ், கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தார். 1955 ல் மருத்துவப் பட்டம் பெற்ற சுபாஷ், பட்டமேற்படிப்பைக் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அவர் எடுத்தத் துறைகள்: இனப்பெருக்க உடலியல் (Reproductive Physiology) மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியல் (Reproductive Endocrinology).  சுபாஷ் மருத்துவத்துறையில் அதுவும் தான் பயின்ற இனப்பெருக்க உடலியல் - உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து - மருத்...