Posts

Showing posts with the label philosophy

பறவையின் கீதம்

Image
பறவையின் கீதம் இந்தப் பதிவில் நான் குறிப்பிடப் போவது எனது கருத்தல்ல... நான் பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிப் படித்த புத்தகத்தில் இருந்து சில பக்கங்களைப் பகிரவே இந்த பதிவு... பறவையின் கீதம் - எழுதியது அந்தோணி டி மெல்லோ. இது ஒரு தமிழாக்க பதிப்பு... தமிழில் எழுதியது மு. சிவலிங்கம்.  இந்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டது போல், உள்முகத் தேடலைத் தூண்டும் உன்னதக் கதைகள் அடங்கியது... நான் இந்தப் புத்தகத்தை விமர்சிக்கப் போவதுமில்லை... விவரிக்கப் போவதுமில்லை... மாறாக, இந்தப் புத்தகத்திலிருந்து இரு பக்கங்களைப் பகிர்கிறேன்... பக்கம் 124 டயோஜீன்ஸ் தத்துவ ஞானி டயோஜீன்ஸ் ரொட்டியையும், பருப்பையும் உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரின் இந்த நிலையைப் பார்த்த இன்னொரு தத்துவ அறிஞர் அரிஸ்ட்டிப்பஸ் ஒரு ஆலோசனை சொல்ல முன் வந்தார். இவரோ மன்னரைத் துதிபாடி ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை அனுபவித்து வந்தவர். "மன்னரிடம் பணிவுடன் நடந்து அவரை அனுசரித்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். பருப்பை உண்டு வாழ வேண்டிய நிலை வராது" என்று அரிஸ்ட்டிப்பஸ் ஆலோசனை சொன்னார். "பர...

கயாஸ் தியரியும் நியூட்டனின் மூன்றாம் விதியும் - Chaos theory & Newtons third law

Image
கயாஸ் தியரியும் நியூட்டனின் மூன்றாம் விதியும் கயாஸ் தியரி என்பது சிறு நிலை மாற்றங்களினால் கூட பாதிக்கப்பட கூடிய சிக்கலான அமைப்புகளை ஆய்ந்தறியும் கணிதப்பிரிவு. கயாஸ் என்பதை இன்னும் எளிய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், பல காரணிகளினால் ஒரு வினை நடக்கிறது எனக் கொண்டால், அக்காரணிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் சிறுமாற்றம் கூட அந்த வினையின் வீரியத்தை பெருமளவு மாற்றும் வல்லமை கொண்டது. இவ்வித வினைகளை கயாஸ் எனலாம். இது புரிந்து கொள்ள எவ்வளவு கடினமோ, அவ்வளவு எளிதானது நியூட்டனின் மூன்றாம் விதி.  ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு... ஆனால் இதற்கும் கயாஸ் தியரிக்கும் என்ன சம்பந்தம்?  உண்டு... நாம் நம் வாழ்வில் காணும் எதுவும் இந்த வினை (action) எதிர்வினை (consequence) என்ற கோட்பாடுகளுக்குள் அடங்கும்... நாம் நினைப்பது ஒரு வினை அதற்கு ஒரு எதிர் வினை மட்டுமே... ஆனால் சிலவினைகளின் எதிர் வினைகள் அதன் சூழலில் உள்ள மற்ற வினைகளையும் பாதிக்கிறது... இது பலமுனை சங்கிலி தொடர்வினை (Multiple Chain Reaction) யாக உருவெடுக்கிறது... வினை விதைத்தவன் வினை அறுப்ப...