Posts

Showing posts with the label birthday

டார்வின் நாள் - Darwin Day

Image
இன்று 12 பிப்ரவரி, உலகம் போற்றும் அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் பிறந்த நாள். இன்றைய நாளை, உலகம் முழுதும் அறிவியலைப் போற்றுவோர் டார்வின் நாளாகக் கொண்டாடுகின்றனர். டார்வினின் கொள்கைகளைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவோம் என ஆள்வோர் முழங்கும் காலத்தில் அவர் கருத்துக்களை, கூற்றுக்களை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது.  சார்லஸ் டார்வின் (12.2.1805 - 19.4.1882)  ஏற்கனவே, டார்வின் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். (படிக்க:  https://goo.gl/choC4D  ) எனவே, இந்தப் பதிவில் அவருடைய சில கூற்றுக்கள் தன்னை எழுத உள்ளேன். 1. ஒரு மனிதனின் நட்புக்கள் தான் அவனுடைய மதிப்பின் சிறந்ததொரு அளவுகோலாக இருக்கிறது.  A man's friendships are the one of the best measures of his worth. 2. ஒரு அமெரிக்க குரங்கு, மது அருந்தி போதை அடைந்த பின்பு, தன் வாழ்நாளில் மதுவை மீண்டும் தொடாது. எனவே, அது பெரும்பாலான மனிதர்களை விட அறிவுடையது தான். An american monkey, after getting drunk on brandy, would never touch it again, and thus is much wiser than mo...

சிவராம் ராஜ்குரு - Shivaram Rajguru

Image
சிவராம் ராஜ்குரு ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்து - தனது பதின்ம வயதுகளில் நாட்டில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறையையும் கண்டு வேதனையுற்று - தனது 22ஆம் வயதில் நாட்டுக்காக தன் இன்னுயிரையும் ஈந்த இளைஞன் சிவராம் ராஜ்குருவின் பிறந்தநாள் இன்று. என்னுடைய பள்ளிக்காலத்தில் - நாடகத்தில் நானிட்ட வேடங்களில் ஒன்று ராஜ்குரு. அப்போது கூட ராஜ்குருவை பகத் சிங்கின் உடன் வரும் கதாபாத்திரமாகவேத் தெரியும். ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொருக்குள்ளும் ஒரு நெருப்பு இருந்த்தையும் - தாய்நாட்டின் விடுதலையை மட்டும் எண்ணிப் பல விதத்தில் போராட எத்தனித்த துணிச்சலையும் சரிவரப் பதிவு செய்ய மறந்த வரலாற்றையும், நினைத்துக் கொள்ள மறந்த நம்மையும் நொந்து கொள்வோம்.  சிவராம் ராஜ்குரு மஹாராஷ்டிரா மாநிலம் கேத் எனும் இடத்தில் 24 ஆகஸ்ட் 1908 அன்று பிறந்தவர் சிவராம் ராஜ்குரு. சிறுவயது முதல் ஆங்கிலேயரின் அடக்குமுறை கண்டு வளர்ந்த ராஜ்குரு, தன் கல்லூரிக் காலத்தில் தன்னைப் போல் நாட்டுக்குப் போராடத் துடிக்கும் சக இளைஞர்களான பகத் சிங், சுக்தேவ் தாபர் போன்றோருடன் இணைந்தார். லாகூரின் நேஷனல் கல்லூரியில்...

ராதா கோபிந்த கர் - RG Kar

Image
ராதா கோபிந்த கர்  மருத்துவம் கொண்டு காசு பார்க்க நினைக்கும் இந்நாளில் - இந்நாட்டில், இவர் போன்ற சிலரும் இருந்திருக்கின்றனர் என்றெண்ணும்  போது திரு. ராதா கோபிந்த கர் மீது மரியாதை பல மடங்கு கூடுகிறது. யார் இவர்? என்ன செய்தார் இவர்? தான் கற்ற மருத்துவக் கல்வி இந்த நாட்டில் பலரும் கற்று - நாடு நோயின்றி வாழ நினைத்த ஒரு திருமகனின் - திரு. ராதா கோபிந்த கரின் பிறந்த நாள் இன்று.  23 ஆகஸ்ட் 1852 - மேற்கு வங்காளம் சாண்ட்ராகாச்சி எனும் ஊரில் தேவதாஸ் கர் என்ற மருத்துவரின் மகனாகப் பிறந்தார் ராதா கோபிந்தா. மருத்துவரின் மகன் என்பதால், வசதிக்குக் குறைவில்லை. கல்வி கற்பதில் தடையுமில்லை. பள்ளிப் படிப்பில் நன்கு கற்றுத் தேர்ந்த கோபிந்தா தந்தையைப் போல் மருத்துவம் பயில விழைந்தார்.  நுழைவுத்தேர்வில் வென்று கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ராதா கோபிந்தா, மருத்துவக்கல்லூரியில் ஆங்கிலேய மாணவர்களால் இந்தியமாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்ச உணர்வு - அதைக் கண்டும் காணாத ஆங்கிலேய மேலாண்மை போன்றவை கண்டு வருந்தினார். நாட்டின் நிதர்சன நிலை அவரின் தேச உணர்வையும் - தமக்குப் பி...

மெட்ராஸ் நாள் - Madras Day

Image
மெட்ராஸ் நாள் பல முகங்கள் - பல நிறங்கள் - சில குறைகள் இருந்தாலும் எந்நாளும் இளமையோடும் புதுமையாகவும் என்னை வியப்பில் ஆழ்த்தும் என் சென்னை மாநகரம்.  நிற்கக் கூட நேரமில்லாமல்  ஓடும் மனிதர்கள் -  இருப்பினும் ஏழு மணிக்குக் கிளம்பி  ஒன்பது மணி அலுவலகம் சேர்வார்.  தினமும் இதுவே வாடிக்கை எனினும்  குறையாய் சொல்லமாட்டார்.  முதல் வாய்ப்புக்கு வாய்ப்புத் தேடி  வந்த யாரும் நொந்ததில்லை.  என் சென்னைக்கு இணை இங்கு இல்லை.  - கணபதிராமன்   இன்று இந்தப் பதிவிற்குக் காரணம் பலருக்கும் தெரிந்ததே. இன்று மெட்ராஸின் பிறந்த நாள். - 377வது பிறந்த நாள்.  தம்மார்ல வேங்கடபதி எனும் விஜயநகர அரசரிடம் இருந்து பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் எனும் இரு பிரிட்டிஷ்காரர்கள் தற்போது ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் பகுதியை 1639 ஆம் ஆண்டு வாங்கிய நாள் இன்று. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி இந்திய நாட்டின் முதல் மாநகராட்சியாய் 1688 ஆம் ஆண்டு உருவாகியது. உலக வரிசையில் லண்டனுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மாநகராட்சி ...

தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy birthday father

Image
தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்  எனது தமிழுக்கு - எழுத்துக்கு - எண்ணங்களுக்கு - வாழ்விற்கு சிறந்ததொரு ஆசானாகவும் - பல நேரங்களில் பாடமாகவும் இருந்த - இருக்கும் எனது தந்தைக்கு வணக்கங்கள் பலவற்றுடன் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா....!!!   ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து - கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என உணர்ந்து கற்று - எங்கள் தெருவிலேயே முதல் பட்டதாரியாய் வளர்ந்து - தான் உழைத்து எங்கள் குடும்பம் அனைவரையும் வளர்த்து - அரசுப்பணி புரிந்து - அதிலும் நேர்மை எளிமை பூண்டு - தான் கற்ற தொழில்நுட்ப அறிவை எனக்கு மட்டுமல்ல என்னுடை நண்பர்களுக்கும் தந்து - யாவரும் நலமாயிருக்க வேண்டி நிற்கும் உள்ளம் படைத்த என் தந்தை... திரு. மாரிமுத்து.... பிறந்த தினம் இன்று.... ஆகஸ்ட் 7. ஆண்டுகள் 67 காணும் என் தந்தைக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்... மகிழ்வுடன் கணபதிராமன்