Posts

Showing posts with the label short story

நீர்க்குமிழி

Image
நீர்க்குமிழி - முடிவிலி ஒ லக்கூர் ஏரியிலிருந்து சிறுதாமூர் நோக்கி அடித்துக் கொண்டிருந்த காற்று, வெயிலின் தாக்கத்தில் ஈரப்பதத்தை ஏற்றிக் கொண்டிருந்தது. விக்னேஷ் தன்னுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் தோழி வளர்மதியைப் பார்க்க அவளுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அவளுடைய வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே குளத்தங்கரையின் அருகே களிமண்ணில் நீரைச் சிறிது சேர்த்துக் கொண்டிருந்த வளரைப் பார்த்து, "ஏ வளரு, ஏன் இங்க களிமண்ணைப் பிசைஞ்சுட்டு இருக்கெ?" என்றான் விக்கி.  கையில் ஒட்டியிருந்த களிமண்ணை உருண்டையாக்கி, அதில் மேலும் மண்ணை அப்பிவிட்டு, புறங்கையால் தன் முகத்தில் விழுந்த முடியை விலக்கியபடி நிமிர்ந்து தன் நண்பன் விக்கியைப் பார்த்தாள் வளர்மதி. வளர்மதியும், விக்கியும் ஒலக்கூரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படிப்பவர்கள். ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு முதலில் தனித்தனியே சென்றவர்கள் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து செல்லத் தொடங்கினர். இப்போது, இலவசப் பாசில் பேருந்தில் சென்றாலும், இருவரும் இணைந்தே செல்வார்கள்.    "வா விக்கி, நானும் புள்ளையார் சிலை செய்யப் போறேன். நா...

The Taste of The Water

Image
  The Taste of the Water - Infinity Once upon a time, there were two brothers in a village, near the seashore. The elder one, Sato, always used to scold and treat him like his slave. He wished that his younger one should be obedient to him and do whatever he says without a word. The younger brother, Trio, always listened to his brother. Sometimes, he thought that he was being treated by Sato badly. But, the next moment, he told himself that he can bear anything for his brother, even the mistreatment from him. Time flew and both brothers aged to their youth. Sato got married. Trio thought that his mother, who died in his infancy, came as his brother’s wife. But it turned to be the beginning of the living hell of his life. Now, he had to do the chores and orders from his brother and brother’s wife. One day, Sato’s wife cried, “Oh god, where did I keep that? I could not see my necklace anywhere. God, I can’t live in this hell”. Without any investigation, everyone’s glare fell ...

மகிழ்ச்சி - குறள் கதை

Image
மகிழ்ச்சி கார்காலத்தின் காலைப்பொழுதில் தூறலினால் தன் வீட்டுத்தோட்டத்தின் மரங்களின் பசுமை நிறம் இன்னும் மெருகேறியிருந்ததைத் தன் வீட்டு மாடியிலிருந்த கண்ணாடியிட்ட சாளரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார், கதிரேசன். மழையின் இன்பக்குளியலில் நனைந்திருந்த மரங்களும், அந்த மரங்களில் இன்னிசை படித்துக் கொண்டிருந்த மைனாக்களும் அவர் மனதில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டிருந்தன. நேற்றை விட இன்று இரு ரோஜா மலர் மொட்டுகள் மழையில் நனைந்து முகிழ்ந்திருந்தன. தன்னை மறந்து நின்று கொண்டிருந்த கதிரேசனை நோக்கி கையில் பேசியை எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி. "என்னங்க... குமரன் சார் லைன்ல இருக்காரு..." பேசியை வாங்கிய கதிரேசன், "குமரன், நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் நலமா? ஆபீஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று கேள்விகளை அடுக்கினார். கதிரேசன், நான்கு மாதங்களுக்கு முன் தான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, தான் பிறந்த ஊரில் கட்டிய மாடி வீட்டிலும், பின்னே அமைத்துள்ள எழில் கொல்லையிலும் தன் ஓய்வு வாழ்வை மகிழ்வோடு கழித்து வருகிறார். மறுமுனையில், குமரன் "எல்லார...

கற்பென்னும் திண்மை - குறள்கதை

Image
ஆசிரியர் குறிப்பு: குறள்மொழியின் முதல் கதையான 'அகர முதல' கதையின் மாந்தர்களைக் கொண்டும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. அந்த கதையைப் படிக்க :   bit.ly/2QxWH1M கற்பென்னும் திண்மை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 'பகவன்' முதற்றே உலகு " மாணவர்களின் குரல் காற்றில் ஓங்கி ஒலிக்க, மேடையில் இருந்த தலைமை ஆசிரியர் முதலான அனைவரும் கைத்தட்டல் பரிசளிக்க, என் தமிழ்ச்செல்வன் முகம் பெருமிதத்தில் மலர்ந்திருந்தது. அவன் என் தமிழ்ச்செல்வன் என்பதிலேயே என் மனமும் துள்ளிக் குதித்தது.  பள்ளியில் இருந்து நானும் தமிழும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, என் மனமோ காலத்தில் பின்னோக்கி நடைபோட்டது...  அப்போது தான் எனக்கும் தமிழுக்கும் மணமாகி இரு ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வுக்குப் படித்து கொண்டிருந்த நேரம். தமிழும் ஒரு பாடமாக இருந்ததால், அதில் ஐயம் நீக்க எனக்கு உதவியாய் இருந்தது தமிழ் தான். என்னுடைய தேர்விற்குப் படிப்பதற்காக, திருக்குறளைத் திருப்பிக் கொண்டிருந்த நேரம், ஒரு குறளில் என் கவனம் குத்திட்டு நின்றது. ...

திறந்திடு - Open it - சிறுகதை தமிழாக்கம்

Image
திறந்திடு... (Open It) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) (கதைக்காலம்: 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்) மதியம் 2 மணிக்கு அம்ரித்ஸரை விட்டுக் கிளம்பிய அந்த சிறப்பு ரயில், முகல்பூராவை அடைய எட்டு மணிநேரம் ஆனது. பல பயணிகள் வழியிலேயே கொல்லப்பட்டிருந்தனர்... பலர் படுகாயமுற்றிருந்தனர்... சிலர் காணாமல் போயிருந்தார்கள்... அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிராஜுதீன் கண் விழித்தபோது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன்னைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உளக்கொதிப்பில் இருக்கும் ஒரு பெருந்திரளை அவன் கண்டான். தான் எங்கு இருக்கிறோம் என்று அறியாத அவன், இப்போது புழுதி நிறைந்த வானை வெறித்துப் பார்க்கலானான். அந்த முகாம் முழுதும் பல குரல்கள், கூச்சல்கள் நிறைந்திருந்தன. ஆனால், நம் சிராஜுதீனுக்கு அவை யாவும் காதிலே விழவில்லை. யாராவது அவனைப் பார்த்தால், ஏதோ ஆழமாக, உன்னிப்பாக யோசிப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். இருந்தாலும், அவனுடைய மனது எதையும் நினைக்காதிருந்தது, ஒரு காலி பாத்திரம் போல... புழுதி நிறைந்த வான...

குளிர் சதை - Cold Flesh - சாதத் ஹசன் மண்ட்டோ (தமிழாக்கச் சிறுகதை)

Image
குளிர் சதை (Cold Flesh) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) ஈஷர் சிங் அறைக்குள் நுழைந்ததும், கல்வந்த் கௌர் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவளுடைய கூரிய கண்கள் அவனை உற்றுப் பார்த்தன. ஈஷர் கதவை அடைத்தான். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஒரு புரியாத அச்சமூட்டும் அமைதி அந்த நகரத்தையே பற்றிக்கொண்டது போலிருந்தது. கல்வந்த் கௌர் கட்டிலில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்தாள். ஈஷர் சிங் தன்னுடைய மனத்திலோடும் புதிர்களை - அவனுடைய கதையைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியவன், கையில் ஒரு கத்தியைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். சில நொடிகள் அமைதியாக, அந்த இரவின் ஒலியின்மைக்குப் போட்டியாய்க் கழிந்தன. வெறுப்பூட்டிய அந்த அமைதியை கல்வந்த் கௌர் கலைத்தாள். படுக்கையின் நுனி வரை வந்து அமர்ந்தவள், தன் கால்களை ஆட்ட கால் கொலுசுகள் சிணுங்கின. ஈஷர் சிங் அப்போதும் ஒன்றும் பேசாமலே நின்றிருந்தான். கல்வந்த் கௌர் நல்ல உடல்வாகுள்ள பெண், அகன்ற இடுப்பு, பெரிய பரந்த மார்பு, கூரிய விழிகள், சாம்பல் நிறத்தில் சற்று பெரிய உதடுகள்... அவளுடைய தாடையின் வடிவமே அவள் வலிமையான பெண் என்பதை உறுதிபடுத்தியது. தன்னுடைய ந...