தாய்மண் - தமிழாக்கம் (Home - Tamil Translation of Warsan Shire Poem)
அகதி வாழ்வின் வலிகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், பட்டறிந்து வலியின் உச்சத்தில் கண்ணீர் காய்ந்த கண்களொடு - குருதி தோய்ந்த காயங்களொடு - ஏளனங்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டதை ஏற்றுப் பிழைத்தலைச் சொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்தேன் வார்சன் ஷைரின் வரிகளில்... தமிழாக்கத்தில் பொருள் சிதையவில்லை எனவே நினைக்கிறேன்... நீங்கள் படித்துக் கூறவும்... , தாய்மண் - வார்சன் ஷைர் யாரும் தாய்மண்ணை விட்டுச் செல்வதில்லை... அது திமிங்கிலத்தின் வாயாக இல்லாதவரை... நீ மட்டும் ஓடுகிறாய் சொந்த மண்ணின் எல்லை வரை மொத்த ஊரும் பின் வருகிறதே... உன்னண்டை வீட்டார் உனைவிட வேகமாய் ஓடுகின்றனர்... மூச்செரிந்து வெந்திறங்குகிறது அவர்களின் தொண்டைக்குழியில்... உன்னுடன் பள்ளியில் பயின்றவன் முதல் முத்தமிட்ட காதலன் அவனைவிடப் பெருந் துப்பாக்கியேந்தித் துரத்தி வருகிறான்... நீ தாய்மண்ணை விட்டுப் போகிறாய். அது உன்னைத் தங்க அனுமதிக்காதபோது... யாரும் தாய்மண்ணை விட்டுச் செல்வதில்லை... அது உன்னைத் துரத்தாதவரை ...