எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? - Where are we heading?
எங்கே போய்க் கொண்டிருக்கிறது நாடு...? எங்கேத் தோற்றுப் போகிறோம் நாம்...? ஜோதி சிங், ஜெஸிகா லால், நந்தினி, ஹாசினி போல் தெரிந்தவை குறைவு. குற்றம் செய்தவனைத் தண்டிக்க கோஷம் போடும் நாம் - மத்தியக் கிழக்கு நாடுகள் போல் அதிகபட்ச தண்டனை வேண்டும் எனக் கொதிக்கும் நாம் - குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய போகிறோம்? தண்டனைகள் பயத்தை உருவாக்கலாம். விழிப்புணர்வை உருவாக்குமா? மனமாற்றத்தை உருவாக்குமா? குழந்தைகளை - பெண்களை போகப் பொருளாய் பார்க்கும் மனநோய் சரியாகுமா? ஆண் குழந்தைக்கும் ஒழுக்கத்தை சொல்லித் தருவோம். பெண் குழந்தைக்கு வீரம் - தற்காப்பு சொல்லித் தருவோம். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து அனைத்து பாலருக்கும் சொல்லித் தருவோம். முதலில் குழந்தைகளிடம் பேசுவோம். நிறைய பேசும் குழந்தைகள் திடீரென மௌனமானால் என்ன காரணம் எனக் கண்டறியுங்கள். என் பெற்றோரிடம் எது வேண்டுமானால் சொல்லலாம் என்ற எண்ணத்தை உருவாக்குங்கள். சந்தேகங்களை விளக்குங்கள். அனைத்துக்கும் தொழில்நுட்பத்தையும், இணையத்தையும் குறை சொல்வது எளிது. ஆனால், இவை இல்லாத காலத்திலும் இவ்வகை கொடுமைகள் நிகழ்ந்து வந்தே உள்ள...