கயாஸ் தியரியும் நியூட்டனின் மூன்றாம் விதியும் - Chaos theory & Newtons third law
கயாஸ் தியரியும் நியூட்டனின் மூன்றாம் விதியும்
கயாஸ் தியரி என்பது சிறு நிலை மாற்றங்களினால் கூட பாதிக்கப்பட கூடிய சிக்கலான அமைப்புகளை ஆய்ந்தறியும் கணிதப்பிரிவு. கயாஸ் என்பதை இன்னும் எளிய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், பல காரணிகளினால் ஒரு வினை நடக்கிறது எனக் கொண்டால், அக்காரணிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் சிறுமாற்றம் கூட அந்த வினையின் வீரியத்தை பெருமளவு மாற்றும் வல்லமை கொண்டது. இவ்வித வினைகளை கயாஸ் எனலாம்.
இது புரிந்து கொள்ள எவ்வளவு கடினமோ, அவ்வளவு எளிதானது நியூட்டனின் மூன்றாம் விதி.
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு...
ஆனால் இதற்கும் கயாஸ் தியரிக்கும் என்ன சம்பந்தம்?
உண்டு... நாம் நம் வாழ்வில் காணும் எதுவும் இந்த வினை (action) எதிர்வினை (consequence) என்ற கோட்பாடுகளுக்குள் அடங்கும்... நாம் நினைப்பது ஒரு வினை அதற்கு ஒரு எதிர் வினை மட்டுமே... ஆனால் சிலவினைகளின் எதிர் வினைகள் அதன் சூழலில் உள்ள மற்ற வினைகளையும் பாதிக்கிறது... இது பலமுனை சங்கிலி தொடர்வினை (Multiple Chain Reaction) யாக உருவெடுக்கிறது...
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... - (ஒரு வினை) நியூட்டனின் மூன்றாம் விதி...
சிறு துளி பெரு வெள்ளம் - (பலமுனை சங்கிலி தொடர்வினை) கயாஸ்
கயாஸ் தியரியில் ஆய்வு செய்த அறிவியலாளர் எட்வர்ட் லோரன்ஸ் (Edward Lorenz).சொல்கிறார்:
நிகழ்காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனில், தோராயமான நிகழ்காலம் தோராயமாக எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை...
When the present determines the future, the approximate present does not approximately determine the future.
நாம் செய்யும் காரியங்களில் நாம் செய்யும் தோராயங்கள் - சிறு தவறுகள் கூட பின்னாளில் பெரிய எதிர்வினைகளை - அழிவுகளை ஏற்படுத்தவல்லது,,, ஏனெனில், நாம் மட்டுமே செய்கிறோம் - யாருக்கும் தெரியாது என நாம் அனைவரும் செய்யும் சிறு தவறுகள் அனைத்தின் எதிர்வினை நான் யூகிக்கும் அளவை விட பெரிதாகவே இருக்கும். இந்த உலகத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கு தொடர்பில்லாத பல விஷயங்களினால் தினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்த பாதிப்பிற்கு நாமோ அல்லது நமது சமூக அமைப்போ செய்த சிறு பிழை கூட காரணமாய் இருக்கலாம்...
இந்த உலகின் பன்முனை சங்கிலித்தொடர் வினைகளின் பாதிப்பு உணராமல், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என உழல்பவர்க்கு ஒன்று மட்டுமே சொல்ல முடியும்...
யாரும் முழுமையை கண்டடைவதில்லை...
Nobody can see the big picture...!
- கணபதிராமன்
இது ஒரு அருமையான விளக்கம் தான்! பழைய கடிகாரத்தில் ஒரு பல் சக்கரத்தில் ஏற்படும் பழுது ஒட்டு மொத்த கடிகாரத்தையே நிறுத்துவது போல இந்த கயாஸும உள்ளதாக நினைக்கிறேன். 25 வயது வரை பெற்றோரை சுற்றி வந்தவன் ஒரு பெண்ணை நினைத்து மயங்குவது போல் என்று கூட இதனை வர்ணிக்கலாம். நான் காதலுக்கு எதிரானவன் அல்ல. என்றாலும் இந்த கயாஸ் காதலிலும் புகுந்து விடுமோ என்ற பயம் பல காதலர்களுக்கும் - குறிப்பாக பல பெற்றோருக்கும் வராமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணியம் அப்பா!
ReplyDeleteகாதல் மட்டுமல்ல... உலகின் அனைத்து பிரச்சினைகளிலுமே இந்த கயாஸ் உள்ளது... பிரச்சினையை நோக்கும் - பிரச்சினை கொண்டு நோகும் நாம் அதன் மூல காரணங்களை அணுகுவதே இல்லை. இங்கு பிரச்சினை காதலர்களோ, பெற்றோர்களோ இல்லை... சமூக அமைப்பு எனும் கயாஸ்...!!!
Deleteபல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.
ReplyDelete