என் நாடு விழிக்கட்டும்

என் நாடு விழிக்கட்டும் 

தாகூரின் கவிதை  - எனது தமிழாக்கம் 

'ஜன கண மன' மட்டுமே தாகூர் என எண்ணி இருந்த எனக்கு அவரின் இந்த கவிதை இன்னொரு பரிமாணத்தில் இருந்த அவரின் பார்வையைப் புலப்படுத்தியது. பல நேரங்களில் மொழியாக்கம் மூலத்தின் வீரியத்தை உணர்த்துவதில்லை. இருப்பினும், எனது முதல் தமிழாக்க முயற்சி இது. தாகூரின் கவிதைச் செறிவு என்னிடம் இல்லை எனினும் அதன் பொருள் கெடாவண்ணம் எழுதினேன் என்று நம்புகிறேன்.
ரவீந்திரநாத் தாகூர்
எங்கே மனம் பயமற்று இருக்கிறதோ -
தலை நிமிர்ந்து இருக்கிறதோ -
எங்கே உலகம் சிறு சுவர்களால்
பிரிக்கப்படாமல் இருக்கிறதோ -
எங்கே 
சொற்கள் வாய்மையாய் இருக்கின்றதோ - 
எங்கே உழைப்பு நிறைவை
நோக்கி இருக்கிறதோ -
எங்கே சரியான காரணங்கள்
மூடவழக்கங்களின் பாலையில்
தொலையாமல் இருக்கின்
றதோ - 
எங்கே எண்ணங்கள் உயர்ந்த செயல்களால்
விடுதலையின் சொர்க்கத்தை நோக்கி நடைபோடுகின்
றதோ -
  
அங்கே என் நாடு விழிக்கட்டும்....
அங்கே என் நாடு விழிக்கட்டும்....

- கணபதிராமன்
நவம்பர் 21 2014 அன்று எழுதியது...

Comments

  1. அருமை.. ஏகாந்த பறவைகள் வாசித்திருக்கிறேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... மகிழ்ச்சி

      Delete
  2. Arumai ya irukku ATG....UANAKKUL ORUVAN.....UNNA VERA PARIMAANTHIL PARKIREN....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka