சனங்களின் தெய்வங்கள்
சனங்களின் தெய்வங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். - திருக்குறள் இந்தப் பதிவு எழுதக் காரணமாயிருந்த - எழுதத் தூண்டிய என் நண்பன் குமரேசனின் சிலப் புகைப்படங்களுக்கு நன்றிகள் கோடி... நமது கிராமங்களில் ஊருக்கு வெளியே - ஏரிக்கரையில் - வாய்க்கால் அருகே - சிலக் கல்லை நட்டு - வெட்டருவாள் மீசையுடனோ பூசிக்கப்படும் சிலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். காவல் தெய்வமென்றும் - இரவில் சென்றால் அடித்து விடும் என்றும் கதை கேட்டு பயந்திருக்கலாம். புகைப்படங்கள்: குமரேசன் தமிழ்நாட்டில் இப்போது காவிரிப் பிரச்சனை இருப்பது போன்று அந்தக் காலங்களிலும் நீர்ப் பிரச்சனை இருந்தது உண்மையே. கிராமங்களுக்கு இடையே வாய்க்கால் பிரச்சனை - கண்மாய்ப் பிரச்சனை என ஊரில் கலவரம் கூட நிகழ ஏதுவான பதற்றமான சூழலிலேயே இருந்து வந்தனர் நம் முன்னோர். இந்நிலையில், ஊரின் பாதுகாப்புக்காகவும், நீர்நிலை மற்றும் விவசாயத்தைக் காக்கவும், ஊரின் சில வீரர்கள் முன் வந்தனர். இரவில் ஏரி, கண்மாய், வாய்க்கால், வயல்வெளிகளைக் காவல் புரிந்து வந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலோ, மற்ற ஊ...