Posts

Showing posts with the label true story

விரலுக்கு விழி தந்தவன் - Louis Braille

Image
நீங்கள் உங்கள் வீட்டு முகப்பறையில் ஓர் இரவுப் பொழுதில், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், மின்சாரம் இல்லாமல் போனால் - திடீரென உங்கள் சூழல் இருண்டு போனால் ஒரு மணித்துளியேனும் பதறுவீர்கள் அல்லவா? ஆனால், எந்நேரமும் இருளையேக் கண்டு கொண்டிருப்போர் பற்றி என்றேனும் நினைத்திருக்கிறோமா? நினைத்திருப்பினும், அவர்தம்அன்றாட வாழ்வுதனை மேம்படுத்த உதவும் முறைகளைப் பற்றி அறிந்திருக்கிறோமா? அவர்களும் இன்று கல்வி கற்க - எழுதப்படிக்க ஏதுவான ஒரு எழுத்துமுறையை உருவாக்கிய ஒரு மேதையின் பிறந்தநாள் இன்று... இவரது பிறந்தநாளை உலகப் பார்வையற்றோர் கல்வி நாளாக உலகமேக் கொண்டாடட்டும்... வாருங்கள், இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். கூவ்ரே எனும் சிற்றூர்... பிரான்சின் பாரீஸ் நகரிலிருந்து 20 மைல்கள் கிழக்கே அமைந்துள்ள ஊர்... இந்த ஊரில் வசித்த சைமன் ரீன் - மோனிக் பிரெய்ல் இணையருக்கு 4 ஜனவரி 1809 அன்று நான்காவது மகனாகப் பிறந்தான் லூயிஸ் பிரெய்ல். லூயிஸ் பிரெயில் (4.1.1809 - 6.1.1852)  சைமன் ரீன் தனக்குச் சொந்தமான 3 ஹெக்டேர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார். தோல் பொருட்கள் கொண்டு க...

செல்லாத்தா பள்ளியும் பெற்றோரின் போராட்டமும் - sellatha schools and Protest of Parents

Image
Disclaimer நிலைவிளக்கம் : இந்தப் பதிவில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே... அதையும் மீறி சில கல்வி நிறுவனத்துடன் தொடர்பு படுத்தி யூகம் செய்தால் உங்கள் யூகம் சரியாகவும் இருக்கலாம் என்றுக் கூறிக் கொள்கிறேன். - கணபதிராமன் அண்ணன் : என்ன தம்பி, நல்லா இருக்கியா? பாத்து ரொம்ப நாள் ஆகுது? என்ன விஷயம்...? தம்பி : நல்லா இருக்கேன் அண்ணே... ஒரு விஷயம் சொல்லணும்...  அண்ணன் : என்ன சொல்லுப்பா... தெரிஞ்சுக்குவோம்... தம்பி : இந்த செல்லாத்தா ஸ்கூல் இருக்கு தெரியுமா?  அண்ணன் : வருஷா வருஷம் மூணு ரேங்குக்குள்ளே வருமே அந்த ஸ்கூல் தானே... தெரியுமே...! சென்னையில மட்டும் எப்படியும் 20 ஸ்கூல் இருக்குதுன்னு நினைக்கிறேன். தம்பி : ஆமா, ஏரியாக்கு ஒண்ணுன்னு கட்டிருக்காய்ங்க... போன வருஷம் தொடங்குன மேடவாக்கம் பிரான்ச்ல மூணு நாளுக்கு முன்னாடி பேரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்காங்க... அண்ணன் : என்னய்யா போராட்டம்.... எதுக்கெடுத்தாலும் போராட்டமா, தம்பி? தம்பி : என்னண்ணே... புரியாம பேசிக்கிட்டு... முன்னாடி சென்னையில நாலு ஸ்கூல் வச்சிருந்தவங்க ஏரியாக்கு ஒண்ணு கட்ட...