Posts

Showing posts with the label kavithai

புளியமரம்

Image
ஊருக்கு வெளியே புளியமரம் சாலையோரம் வளந்த மரம் பசங்க கூடி உலுக்குவோம் அது நிழலுல தல கிடத்துவோம் சித்திரை வெயில்ல கூட சில்லுன்னு நிழலிருக்கும்... புளியங்காய் புளிச்சாலும் அது நெனப்பு நெஞ்சினிக்கும்... கல்லு வச்சு அத அடிச்சோம்... வலிக்கவில்லை அதுக்கும்... அப்பக் கூட சிரிச்சுக்கிட்டே குளிர் காத்து கொடுக்கும்... சாலைய அகலம் பண்ண  வெட்டிட்டாய்ங்க மரத்த... வாழுங்கால நினைப்பு அது எங்க போய் கொளுத்த... வச்சதாரு வளத்ததாரு தெரியவில்லை இன்னும்... எங்கள வளத்தது இந்த மரம் வலிக்குதய்யா இன்னும்... ஒத்தமரம்னு வெட்டிப்புட்டா ஒண்ணுமாகிப் போவாது... ஒண்ணு ஒண்ணா வெட்டுறியே... இந்த பூமி வாழாது...! வெட்டிப்போட்ட கிளை ஒண்ணு புதரோரம் முளைக்க... இது வளந்து நின்னு காய்க்கவேணும் தலைமுறைக்கும் நிலைக்க...!! - கணபதிராமன்

தாய்மண் - தமிழாக்கம் (Home - Tamil Translation of Warsan Shire Poem)

Image
அகதி வாழ்வின் வலிகளை  வெளியில் இருந்து பார்ப்பதற்கும்,  பட்டறிந்து வலியின் உச்சத்தில்  கண்ணீர் காய்ந்த கண்களொடு -  குருதி தோய்ந்த காயங்களொடு - ஏளனங்கள் வாழ்வின் அங்கமாக  மாறிவிட்டதை ஏற்றுப் பிழைத்தலைச்  சொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்தேன் வார்சன் ஷைரின் வரிகளில்... தமிழாக்கத்தில் பொருள் சிதையவில்லை எனவே நினைக்கிறேன்... நீங்கள் படித்துக் கூறவும்... , தாய்மண் - வார்சன் ஷைர் யாரும் தாய்மண்ணை விட்டுச்  செல்வதில்லை... அது திமிங்கிலத்தின் வாயாக இல்லாதவரை... நீ மட்டும் ஓடுகிறாய் சொந்த மண்ணின் எல்லை வரை மொத்த ஊரும் பின் வருகிறதே... உன்னண்டை வீட்டார் உனைவிட  வேகமாய் ஓடுகின்றனர்... மூச்செரிந்து வெந்திறங்குகிறது அவர்களின் தொண்டைக்குழியில்... உன்னுடன் பள்ளியில் பயின்றவன் முதல் முத்தமிட்ட காதலன் அவனைவிடப் பெருந் துப்பாக்கியேந்தித் துரத்தி வருகிறான்... நீ தாய்மண்ணை விட்டுப் போகிறாய். அது உன்னைத் தங்க அனுமதிக்காதபோது... யாரும் தாய்மண்ணை விட்டுச் செல்வதில்லை... அது உன்னைத் துரத்தாதவரை ...

ஒதுக்கீடு - Reservation

சுயநிலை விளக்கம்: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதப்பட்டது அல்ல... அவ்வாறு புண்பட்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக செய்த கொடுமையின் குற்ற உணர்ச்சியாக இருக்குமே தவிர, இந்தப் பதிவினால் இருக்காது. நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவன் மங்கள் பாண்டே எனவும் அவனே 1857 சிப்பாய் கலகத்துக்குக் காரணம் எனவும் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்... உண்மை அதுவல்ல... கங்கையில் குளித்து விட்டு கரையேறிக் கொண்டிருந்த பாண்டேயின் மீது மோத வந்த ஒரு தலித் சிறுவனைக் கடிந்து "நீ தொட்டால் தீட்டு... மீண்டும் குளிக்க வேண்டும்..." என்றான் பாண்டே... பதிலாய் அந்த சிறுவன் கேட்ட கேள்வியே நம் விடுதலைக்கு வித்திட்டது... அந்த சிறுவன் கேட்டான்  "மாட்டுக் கொழுப்பு தடவிய தோட்டாவினை வாயால் கடித்து துப்பாக்கியில் பயன்படுத்தும் நீ, பிராமணனா? நான் தொட்டால் தீட்டா?" இந்தக் கேள்வியால் பாண்டேயினுள் எழுந்த சாதிப்பற்றினால் தான் சிப்பாய் கலகம் துவங்கியது. எப்படியோ, இந்திய விடுதலைக்கு வித்திட்ட அந்த முகம் தெரியாத சிறுவனுக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். ஒதுக்கீடு ...

புரட்சிக் கவிஞனுக்கு வீரவணக்கம் - Salute to Revolutionary Poet

Image
கனகசபை சுப்புரத்தினமாய் இருந்தவன், தமிழ்ப்பற்று கொண்டு - தமிழர்கள் மீது திணிக்கப்படும் காழ்ப்புணர்வு கொண்டு - வீறு கொண்டு - மொழியையே ஆயுதமாக்கி - கவிதையால் சாட்டை சுழற்றி - புரட்சிக்கவிஞனாய் மாறினான். அவனுடைய நினைவு நாளான இன்று பாரதிதாசன் கனக சுப்புரத்தினத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். பாரதிதாசன் (29.04.1891 - 21.04.1964) இன்று அவர் கவிதை சிலவற்றை இணையம் வழி எடுத்துப் படித்த போது, இதுவரை இந்த கவி ரத்தினங்களை படிக்காமல் இருந்துள்ளோம் என என்னுள் தோன்றிய குற்ற உணர்வின் வெளிப்பாடே இவ்வார்த்தைகள்:   காதல் - புரட்சி - நாட்டுப்பற்று - மொழிப்பற்று - சமகால அரசியல் என பலவகைகளில் தன கருத்துகளை காலத்தால் அழியா கவியாய் செதுக்கிய பாரதிதாசனை நாம் இன்னும் சரியாய் படிக்கவில்லை; அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. சுப்பிரமணிய பாரதியை விட அதிகம் படிக்கப்பட வேண்டியவன் பாரதிதாசன். அவரின் கவிதைகளில் சில இதோ நம் அனைவருக்காக...! பெண்களால் மட்டுமே சமுதாய மாற்றம் நிகழ முடியும் என்பதை தீர்க்கமாக நம்பிய பாரதிதாசன் பெண் குழந்தைகளுக்கு எழுதிய தாலாட்டு பாடல்... பாடல் என்னவோ க...