Posts

Showing posts with the label puranaanooru

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

Image
சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் உழவே தலை              - திருக்குறள்   பாடப்பட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல் இன்றைக்கும் என்றைக்கும் ஒன்றிப் போகும் சில செய்யுள்கள் - பாடல்கள் பாடப்புத்தகத்தில் மட்டுமல்லாது வாழ்வின் பாடமாகவும் மாறிப் போவது நாம் அறிந்ததே. அவ்வகைப் பாடல்களில் ஒன்று தான் இன்றையப் பதிவாக.  புறநானூறு - பாடல் எண் - ௧௮ (18) பாடியவர் : குடப்புலவியனார்  பாடப்பட்டோன்:  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்   திணை: பொதுவியல் துறை: முதுமொழிக் காஞ்சி, பொருண்மொழிக் காஞ்சி  பாடல் பாடப்பட்ட காலத்தில் வான்மழைப் பொய்த்து வேளாண்மை நொடிந்து போனக் காலம். இந்தக் காலக்கட்டத்தில் மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள பாடல். (இந்தக் காலத்திற்கும் ஏற்ற பாடலாக அமைவதில் வியப்பொன்றும் இல்லை...!)  கடல் சூழ்ந்த நாட்டை ஆளும் மன்னா... எனப் புகழும் புலவர், மன்னனின் கோட்டை அகழி பெரிதாய் இருந்தாலும், நீரின்றி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்...  இறந்த பின் சேர்க்க வேண...

மனிதம் போற்றிய கணியன் - Kaniyan who praised humanity

மனிதம் போற்றிய கணியன் ஒரே பாடலில் - செய்யுளில் உலக ஒற்றுமை - சகோதரத்துவம் - வாழ்வின் நிதர்சனம் - இயற்கை நியதி - புகழ்ச்சி இகழ்ச்சி இல்லா நடுநிலைமை - மனிதம் இவ்வளவையும் கூற முடியுமா? எங்கள் சங்கக் கவி கணியன் பூங்குன்றனாரால் முடிந்திருக்கிறது. புறநானூற்றில் 192ஆம் செய்யுளாய்த் தொகுக்கப்பட்ட - கணியன் பூங்குன்றனாரால் பாடப்பட்ட "யாரும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செய்யுள் நான் மேற்கூறிய அனைத்தையும் தன்னுள்ளேக் கொண்டுள்ளது. புறநானூற்றில் பல செய்யுள்கள் மன்னனின் படைபலம் பற்றியோ - போர்திறம் பற்றியோ - ஈகைத்திறன் பற்றியோ இருக்க, யாரையும் புகழாமல் அதே நேரம் யாரையும் இகழாமலும், வாழ்க்கை நியதியையும், நிதர்சனத்தையும் கூறிய எங்கள் கவிக்கோமான் கணியன், பரிசிலுக்குப் பாடல் பாடியதில்லை என்பது கூடுதல் செய்தி. முக்காலமும் - எக்காலமும் உலக ஒற்றுமைப் போற்றும் இச்செய்யுளின் முதல் வரி ஐ நா சபையில் பொறிக்கப்பட்டுள்ளது.  இதோ அவர் பாடிய செய்யுளும், அதை எளிதாய் எழுத நானெடுத்த முயற்சியும்...  புறநானூறு (செய்யுள் - 192) பாடியவர் : கணியன் பூங்குன்றனார் திணை : பொதுவியல் திணை துறை : பொரு...

நானும் உங்க ஊருதாங்க...

Image
நானும் உங்க ஊருதாங்க... யாதும் ஊரே யாவரும் கேளிர்  - புறநானூறு, கணியன் பூங்குன்றனார் நீங்கள் உங்களிடம் அறிமுகமாகும் புது ந(ண்)பரிடம் கேட்ட - கேட்கும் கேள்வி.... "உங்களுக்கு எந்த ஊருங்க...?" இது ஒரு சராசரி கேள்வி எனினும், இந்தக் கேள்வியின் நோக்கம் என்னவெனில், பதில் கூறும் நபர் தனது ஊராக இருக்கவேண்டாம்... நமது ஊரின் 50 கிமீ வட்டாரத்தில் இருந்தாலும் கூட, நமக்கு ஒரு சந்தோஷம்... "அட நானும் உங்க ஊருதாங்க" எனக் கூறுவதில்... நானும் உங்களிடம் கூறிக் கொள்கிறேன்... நானும் உங்க ஊருதாங்க... என் தந்தை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி புரிந்ததால், பணி உயர்வு - இடமாற்றம் காரணமாக - எனது கல்வி காரணமாக - என் சிறு வயது முதல் பல ஊர்களில் வசித்து வந்துள்ளேன்.  பிறந்தது - தூத்துக்குடி தந்தை ஊர் - எருக்கட்டான்சேரி (நாகை மாவட்டம்) தாய் ஊர் - காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) எட்டாம் வயதில் - பெண்ணாடம் (விருத்தாசலம் அருகே) பத்தாம் வயது முதல் கல்லூரி வரை - மேட்டூர் (சேலம் மாவட்டம்) கல்லூரிக் காலத்தில் - கணியூர், கோயம்பத்தூர் வாழ்க்கைத்துணையின் ஊர...