சனங்களின் தெய்வங்கள்
சனங்களின் தெய்வங்கள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
- திருக்குறள்
இந்தப் பதிவு எழுதக் காரணமாயிருந்த - எழுதத் தூண்டிய என் நண்பன் குமரேசனின் சிலப் புகைப்படங்களுக்கு நன்றிகள் கோடி...
நமது கிராமங்களில் ஊருக்கு வெளியே - ஏரிக்கரையில் - வாய்க்கால் அருகே - சிலக் கல்லை நட்டு - வெட்டருவாள் மீசையுடனோ பூசிக்கப்படும் சிலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். காவல் தெய்வமென்றும் - இரவில் சென்றால் அடித்து விடும் என்றும் கதை கேட்டு பயந்திருக்கலாம்.
புகைப்படங்கள்: குமரேசன் |
தமிழ்நாட்டில் இப்போது காவிரிப் பிரச்சனை இருப்பது போன்று அந்தக் காலங்களிலும் நீர்ப் பிரச்சனை இருந்தது உண்மையே. கிராமங்களுக்கு இடையே வாய்க்கால் பிரச்சனை - கண்மாய்ப் பிரச்சனை என ஊரில் கலவரம் கூட நிகழ ஏதுவான பதற்றமான சூழலிலேயே இருந்து வந்தனர் நம் முன்னோர்.
இந்நிலையில், ஊரின் பாதுகாப்புக்காகவும், நீர்நிலை மற்றும் விவசாயத்தைக் காக்கவும், ஊரின் சில வீரர்கள் முன் வந்தனர். இரவில் ஏரி, கண்மாய், வாய்க்கால், வயல்வெளிகளைக் காவல் புரிந்து வந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலோ, மற்ற ஊரினர் தாக்க வந்தாலோ தன் ஊரார் உடமைக் காப்பதும் அதற்கெனத் தன்னுயிர் நீப்பதும் இவர்களாகத் தான் இருக்கும்.
புகைப்படம் : கூகுள் |
வாழ்ந்த போது தன் குடும்பமாக தன் ஊரையே பாவித்து காவல் வீரனாக வலம் வந்த இவர்களை ஊரார் தம் வீட்டுப் பிள்ளையாகவேக் கண்டனர். இந்தக் காவல் பணியில் உயிர் நீத்த வீரனை எல்லைக் காவல் தெய்வமாகவும் போற்றத் துவங்கினர்.
உளவியல் ரீதியாக, நம் மனம் செய்யும் மாயமிது... இதுவரை ஊரைக் காத்துவந்த வீரனின் மரணம் தந்த பயம் - ஊரைக் காக்க வேண்டிய கட்டாயம் - ஊராரை இவ்விதம் யோசிக்க வைத்திருக்கலாம். இறந்தவன் ஆன்மா ஊரை இன்றும் காப்பதாகவும் - ஏரிக்கரை, நீர்நிலைகளில் உலவுவதாகவும் - இரவில் சென்றால் அடித்து விடும் என்றும் கதைகள் தோன்றலாயின.
இவ்விதம் தன்னை நம்பிய சனங்களின் துயர்தீர உயிர் தந்தவர்கள் சனங்களின் தெய்வங்கள் ஆயினர். ஊர் மக்களுக்காக உயிரைக் கொடுத்தவர்கள், ஊரார் நன்மைக்கு தெய்வமாக நின்று இன்றும் ஊரைக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று இவர்களைக் கையில் வீச்சரிவாளுடன் - முறுக்குமீசையுடன் காணும் போது, பயமில்லை - மனம் நிறைய மரியாதையே தோன்றுகிறது... தன் இன்னுயிரைத் தந்து, ஊர் நிலத்தை - நீர் நிலைகளை - விவசாயத்தைக் காத்த காத்தவராயன்கள் - முனியப்பன்கள் - முனீஸ்வரன்கள் - கருப்பண்ணசாமிகள் அனைவருக்கும் நன்றியுடன்....
கணபதிராமன்
அருமை யானா பதிவு ....புகைப்படம் அருமை யிலும் அருமை
ReplyDeleteநம்முடன் கல்லூரியில் பயின்ற குமரேசனின் புகைப்படங்கள்....
ReplyDeleteசெம.. நல்ல பதிவு
ReplyDeleteசெம.. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி...
Delete