இரத்தம் அறிவோம்...! Know about Blood
இரத்தம் அறிவோம்...! பள்ளியில் மிகவும் விரும்பிப் படித்த உயிரியல் பாடத்தில் இன்னும் மறந்திடாத சில பகுதிகளையும் - நான் கல்லூரியின் போது, எங்கள் கல்லூரியின் இரத்த தான சங்கத்தில் செயலாற்றிய போதும் - சிலரின் அவசரத் தேவைக்கு இரத்ததானம் செய்த போதும் - நான் கற்ற சில விஷயங்களைப் பகிர்கிறேன்... பொதுவாக, நமக்குச் சில சந்தேகங்கள் எழக்கூடும்... எவ்விதம் நம் இரத்தம் வகைப்படுத்தப் படுகிறது? இரத்த வகைக்குப் பின்னேக் கூறப்படும் +ve மற்றும் -veக்கு என்ன அர்த்தம்? யாருக்கு யார் இரத்தம் கொடுக்கலாம்? இந்த இரத்த வகைகள் கண்டறிந்தது யார்? யார் universal donor? யார் universal acceptor? இரத்தம் கொடுத்தால் நம் உடலில் இரத்தம் குறையுமா? கேள்விகள் போதும்.... விடைகளைத் தேடுவோம்... இரத்தம் பரிமாற்றலின் வரலாறு: 17 ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் இருந்தே இந்த இரத்தப் பரிமாற்றம் பற்றிய ஆய்வுகள் - ஆராய்சிகள் துவங்கி விட்டன. முதலில், சில விலங்குகளின் இரத்தம் கொண்டு துவங்கிய இந்த ஆராய்ச்சி சில மதங்களின் கட்டுப்பாடு காரணம், ஆராய்ச்சிகள் இடையில் தொய்வடைந்தது. ஆங்காங்கே, அரச குடும்பத்தினருக்கு மட்டும் இரத்...