சிவராம் ராஜ்குரு - Shivaram Rajguru
சிவராம் ராஜ்குரு ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்து - தனது பதின்ம வயதுகளில் நாட்டில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறையையும் கண்டு வேதனையுற்று - தனது 22ஆம் வயதில் நாட்டுக்காக தன் இன்னுயிரையும் ஈந்த இளைஞன் சிவராம் ராஜ்குருவின் பிறந்தநாள் இன்று. என்னுடைய பள்ளிக்காலத்தில் - நாடகத்தில் நானிட்ட வேடங்களில் ஒன்று ராஜ்குரு. அப்போது கூட ராஜ்குருவை பகத் சிங்கின் உடன் வரும் கதாபாத்திரமாகவேத் தெரியும். ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொருக்குள்ளும் ஒரு நெருப்பு இருந்த்தையும் - தாய்நாட்டின் விடுதலையை மட்டும் எண்ணிப் பல விதத்தில் போராட எத்தனித்த துணிச்சலையும் சரிவரப் பதிவு செய்ய மறந்த வரலாற்றையும், நினைத்துக் கொள்ள மறந்த நம்மையும் நொந்து கொள்வோம். சிவராம் ராஜ்குரு மஹாராஷ்டிரா மாநிலம் கேத் எனும் இடத்தில் 24 ஆகஸ்ட் 1908 அன்று பிறந்தவர் சிவராம் ராஜ்குரு. சிறுவயது முதல் ஆங்கிலேயரின் அடக்குமுறை கண்டு வளர்ந்த ராஜ்குரு, தன் கல்லூரிக் காலத்தில் தன்னைப் போல் நாட்டுக்குப் போராடத் துடிக்கும் சக இளைஞர்களான பகத் சிங், சுக்தேவ் தாபர் போன்றோருடன் இணைந்தார். லாகூரின் நேஷனல் கல்லூரியில்...