'இடதையும் 'போற்றுவோம்...! let's support left too...
'இடதையும்' போற்றுவோம்...!
இன்று இடதுகைப் பழக்கமுடையவர்களின் தினம்.... World lefthanders day... ஆகஸ்ட் 13.
பொதுவாக, நம்மிடையே ஒருவிதக் கெட்டப் பழக்கமுண்டு. நம்மை விட வித்தியாசமான ஒருவரை ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கலாம். ஆனால், அவரை ஏளனப்படுத்தி - ஒரு தாழ்வு மனப்பான்மையை அவர் மனத்தில் விதைத்து - அவரை மாற்றி - மாறாமல் போனால் ஒதுக்கி வைத்து - அடுக்கிக் கொண்டேப் போகலாம் நாம் செய்யும் சித்திரவதைகளை... இதில் அவர் நலனுக்காகவே செய்தோம் எனப் பெருமை வேறு...!
முக்கியமாக, இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை இந்தச் சமூகம் நடத்தும் விதம்... முக்கியமாக, வீட்டிலும் பள்ளியிலும்.
வீடுகளில், ஒரு சிறு குழந்தை ஒரு பொருளை இடது கையால் எடுத்தால் கூட, "கெட்டப் பழக்கம், வலது கையால் எடு" என அதட்டி - அக்குழந்தையின் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை விதைக்கிறோம். எவ்விதம் ஒரு குழந்தை தன் தாய்மொழியை இயல்பாகக் கற்கிறதோ, அவ்விதமே இந்தக் கைப் பழக்கமும். இயல்பாகக் கற்க விடுங்கள். உங்கள் எண்ணங்களை அக்குழந்தையில் பரிசோதிக்க அவர்கள் சோதனைக்கூட எலிகள் அல்ல. நமது மூளையின் எந்தப் பகுதி அதிகம் உபயோகிக்கப் படுகிறதோ, அதன்படியே அமைகிறது இந்த இடதுகைப் பழக்கம்.
வீட்டில் இவ்விதம் எனில், பள்ளிகளில்.... ஆசிரியர் முதல் சக மாணவர் வரை அனைவராலும் ஏளனப்படுத்தப்பட்டு - ஒதுக்கப்பட்டு - "கழுவுறக் கையாலயா?", " லொட்டக் கை" என விமர்சிக்கப்பட்டு - தாழ்வு மனப்பான்மையால் வலதுகைக்குப் பழகி அதிலும் தோற்றுப் போனோர் பலர்.
வலது கையில் ஸ்ரீதேவி, இடது கையில் மூதேவி என மூடவழமைகளை நம் மூளையில் இருந்து துரத்தி - தூற்றாமல் ஏற்றுக் கொள்வோம் இடதுகைப் பழக்கமுள்ளவரை...!
மற்றவர் இகழ்ச்சியையும் மீறி - தன் மீது வைத்த நம்பிக்கையில் இன்றும் இடதுகை உபயோகிப்பவர்களுக்கும், பிறரினால் மனதளவில் பாதிக்கப்பட்டு - பிறருக்காக மாறி வாழ்வில் தன்னைத் தொலைத்த பலருக்கும் இந்த நாளை அர்ப்பணிக்கிறேன்.
- கணபதிராமன்
இடதுகைப் பழக்கம் கொண்டு வாழ்வில் வெற்றிக் கண்ட பலருள் சிலர்...
- பராக் ஒபாமா
- பில் கிளிண்டன்
- புரூஸ் வில்லிஸ்
- ஏஞ்சலினா ஜோலி
- சச்சின் தெண்டுல்கர்
- நிவின் போலி.... இன்னும் பலர்.....!!!!!!!
Thagavalkku nandri
ReplyDeleteநன்றிக்கு நன்றி....!!!
Deleteஅருமையான தகவல்
ReplyDeleteValthukal sir
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteநன்றி வசந்த்...
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete