திறமை மதியா சமூகம் - Subash Mukhopadhyay
சுபாஷ் முகோபாத்யாய்... இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா...? இவர் யாரென அறிந்திருக்கிறோமா...? உலகம் இன்றும் பல திறமை கொண்ட இரத்தினங்களைக் குப்பையில் கொட்டி வீணடித்துக் கொண்டிருக்கிறது. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கைக்கு திமிர் எனப் பெயர் சூட்டி - வதைத்துக் கொல்லத் திட்டமிட்டுக் காத்திருக்கும் இந்த உலகால் கொலை செய்யப்பட்ட ஒரு மருத்துவனின் கதை இது. சுபாஷ் முகோபாத்யாய் (1931 - 1981) சுபாஷ் முகோபாத்யாய் (Subash Mukhopadhyay) 16-01-1931 அன்று பீஹார் மாநிலம் ஹலாரிபாக் எனுமிடத்தில் பிறந்தார். படிப்பில் நன்கு விளங்கிய சுபாஷ், கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தார். 1955 ல் மருத்துவப் பட்டம் பெற்ற சுபாஷ், பட்டமேற்படிப்பைக் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அவர் எடுத்தத் துறைகள்: இனப்பெருக்க உடலியல் (Reproductive Physiology) மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியல் (Reproductive Endocrinology). சுபாஷ் மருத்துவத்துறையில் அதுவும் தான் பயின்ற இனப்பெருக்க உடலியல் - உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து - மருத்...