விழிப்பா? கண்துடைப்பா? - Reverse Osmosis
அறிவியல் வளர்ச்சி என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்தி - வாழ்வை எளிதாக்கி - ஒரு சுமூகமான வாழ்சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறதா? வழமையாக, பெரிதும் சந்தைப் படுத்தப்படும் ஒரு பொருளைப் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல் இதுவே நமக்கு சாலச் சிறந்தது என வாங்கும் போக்கு இன்று அதிகமாகி உள்ளது. விழிப்புணர்வு என்ற பெயரில் ஆட்டுமந்தையாகி போயிருக்கும் இந்த தலைமுறையின் ஒரு சக ஆட்டின் பதிவு இது.
ஒரு இருபது வருடம் முன்பு, என் அன்னை கிணற்றில் இருந்தோ, அல்லது நமது உள்ளாட்சி நிருவாகங்கள் மூலம் நிறுவப்பட்ட பொதுக்குழாய் மூலமோ, குடிநீர் பிடித்து வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வீட்டுக்கு வீடு நீர்க்குழாய் இணைப்பு வந்துவிட்ட போதிலும், நம் மனதில் ஒருவித பயத்தை விதைத்து, அதை முதலீடாய் வைத்து நம்மிடம் செய்யப்படுவதே நீர் அரசியல். கிணற்றில் இருந்து நேராய் நீர் குடித்த நாளில் இல்லாத நோய்கள், அனைத்து விஷயத்திலும் சுத்தமாய் இருக்க நினைக்கும் ஒரு சமூகத்தில் வளரக் காரணம் என்ன? நாம் என்ன தவற விடுகிறோம்? பூடகங்கள் போதும் என நினைக்கிறேன். நேரே விஷயத்தின் உள் செல்வோம்.
எதிர் சவ்வூடுபரவல்:
நாம் இந்நாளில் அதிகம் கேள்விப்படும் ஒரு சொல் RO வாட்டர். இந்த RO என்றால் என்ன? Reverse Osmosis. Reverse என்பதற்கு எதிர் திசை எனப் பொருள் கொள்ளலாம் Osmosis? தமிழில், சவ்வூடு பரவல். சவ்வின் ஊடே பரவுதல். முதலில், சவ்வூடு பரவல் என்றால் என்ன என்பதைக் காண்போம். படத்தில் காட்டப்பட்டது போல், இரு வெவ்வேறு செறிவு (Concentration) உள்ள திரவங்கள் ஒரு பகுதி ஊடுருவு சவ்வினால் (Semi Permeable Membrane) பிரிக்கப்பட்டு இருப்பதாகக் கொள்வோம். இந்த இரு திரவங்களின் செறிவு ஒன்றாகும் வரை மீச்செறிவு திரவத்தை கரைக்க குறைச்செறிவு திரவம் சவ்வின் வழியே செல்வதே சவ்வூடு பரவல். இயற்கையாக தானாகவே நடக்கும் இதற்கு வெளிப்புற விசை (External Force) எதுவும் தேவை இல்லை. இன்னும் சொல்லப் போனால், நாம் குடிக்கும் குடிநீர் சவ்வூடு பரவல் மூலமே குடலில் இருந்து இரத்தத்தில் கலக்கிறது.
மீச்செறிவு திரவம் என்பது அசுத்த நீர் எனலாம். குறைச்செறிவு திரவம் சுத்தமான நீர் எனலாம். சவ்வூடு பரவல் மூலம் சுத்தமான நீர் அசுத்த நீருடன் கலக்கும். ஆனால், மீச்செறிவு திரவம் இருக்கும் பாகத்தில் வெளிப்புற விசை - அதிக அழுத்தம் தரும்போது, மீச்செறிவு திரவத்தில் உள்ள திரவம் மட்டும் குறைச்செறிவு திரவம் நோக்கிச் செலுத்தப் படுகிறது. இதுவே, எதிர் சவ்வூடு பரவல். பகுதி ஊடுருவு சவ்வின் வழி திரவம் மட்டுமே செல்ல முடியும். அசுத்தங்கள் குறைச் செறிவு பகுதிக்கு செல்வதில்லை. எனவே, அந்தப் பகுதியில் உள்ள நீர் மீச்செறிவு பகுதியில் உள்ள நீரை விட சுத்தமானதாக இருக்கும்.
மூன்று விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
1. TDS
2. சவ்வின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்பு
3. நீர் சேமிப்பு
- TDS (Total Dissolved Solids): நாம் அருந்தும் நீரில் கரைந்துள்ள கனிம - கரிம உப்புக்களின் செறிவு இவ்வாறு அழைக்கப்படுகிறது ஒரு காலத்தில் கிணற்றிலோ, குழாயிலோ நீரை எடுத்து செப்புக் குடத்தில் சேர்த்து வைத்து குடித்து சுகமாய் வாழ்ந்த நாட்களில் யாரும் இதுபற்றி நினைத்தது கூட கிடையாது. நம் வாழ்வின் முறை நமது பகுதியின் புவியியல் - இயற்கை சார்ந்தே அமைகிறது. என்று இயற்கையை மதியாமல், நம் வாழ்க்கை முறையை மற்றவரைப் பார்த்து மாற்ற நினைத்தோமோ அன்று துவங்கியது பிரச்சினை. பெரும்பாலும், RO நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் இந்த TDS என்பதையே அளவுகோலாக காட்டி நம்மிடம் விற்கப்படுகின்றன. நாம் குடிக்கும் நீரில் எவ்வளவு TDS இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தது யார் என்பதே இங்கிருக்கும் கேள்வி. நேற்று வரை நாம் குடித்திருந்த குடிநீர் யாரோ உலகின் ஒரு மூலையில் இருந்து போடும் ஒரு கருத்தரங்கின் மூலம் அசுத்த நீராய் மாறிப் போனது.
- சவ்வின் ஆயுட்காலம் மற்றும் பராமரிப்பு: எதிர் சவ்வூடு பரவலில் பயன்படுத்தப்படும் சவ்வின் ஆயுட்காலம் 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை. அதுவும் சரியாக பராமரிக்கப்பட்டால். அதன் பிறகு, சவ்வு மாற்றப்பட வேண்டும். மாற்றப்படாத சவ்வு உபயோகிக்கப் பட்டால், அதிக அழுத்தம் காரணமாக, சவ்வு சேதமடைந்து சவ்வின்வழி மீச்செறிவு பகுதியில் உள்ள உப்புக்கள் குறைச்செறிவுப் பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. உப்புக்கள் சவ்வின் படிந்து அடைப்பு ஏற்படுத்துவதால், குறைச்செறிவு பகுதிக்கு செல்லும் நீரின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளது.
- நீர்சேமிப்பு: நீர் சேமிப்பு பற்றி ஆயிரம் மேடைகள் போட்டு பேசும் நாம் வீட்டில் நமக்கு கிடைக்கும் நீரில் 60 சதவீதத்தை சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆம். நல்ல நிலையில் உள்ள RO அமைப்பு கூட, தான் எடுத்துக் கொண்ட நீரில் 50 - 60 விழுக்காடு நீரை கழிவுநீர் என்ற பெயரில் வெளியேற்றுகிறது. குடிக்க நீர் கிடைக்காமல் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சுத்தம் என்ற பெயரில் கிடைத்த நீரில் 60 விழுக்காடு நீரை சாக்கடையில் விடும் நாம் எவ்வித கொடுமையானவர்கள். போன பகுதியில் கூறியது போல, சவ்வின் தரம் குறையும் போது கழிவாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும்.
இவ்வாறு வீடுதோறும் RO அமைப்புகள் நிறுவுவதில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சவ்வு மாற்றுதல், பராமரிப்பு செலவு என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகையில் பெரும்பங்கு அந்த நிறுவனத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்கிறது. இவ்விதம் இருக்கையில், நாம் உபயோகித்து வந்த நீர் நன்றாக இருந்தாலும், அதை சுத்தம் செய்து குடிப்பதே சுகாதாரம் என்றக் கருத்தினை மக்கள் மனத்தில் ஆழமாக விதைத்து பணத்தை அறுவடை செய்கிறது இந்த நிறுவனங்கள். விளம்பரம் கண்டு - சற்றும் ஆராயாமல் - தொழில்நுட்ப சொற்கள் கேட்டு இவையே சிறந்தவை என நம்பிய ஆட்டுமந்தை மக்களில் ஒருவனாய் நானும் இருக்கிறேன்.
சொல்லியவை அனைத்தும்
சொல்ல வேண்டியவை
எனக் கருதியதால்
சொல்லப்பட்டவை.
- கணபதிராமன்
Nice explanation ganapathy!!!, you made me think of school physics 😆😆😆 Tamil food system also teaches clerly which is best water to drink and how to purify it?... river or rain or well or ootru, no. It says to collect water in morning from bannana leaf or get any water and boil to reduce it till 3/4, then add dried zinger, pom jaggery to pure it. Thank you, keep doing!!!
ReplyDeleteசொல்லியவை அனைத்தும்
ReplyDeleteசொல்ல வேண்டியவை
எனக் கருதியதால்
சொல்லப்பட்டவை. Kavithaiii Kavithaiii👌👌👌
சொல்லியவை அனைத்தும்
ReplyDeleteசொல்ல வேண்டியவை
எனக் கருதியதால்
சொல்லப்பட்டவை. Kavithaiii Kavithaiii👌👌👌
சட்டென்று தெளிவடைந்தது
ReplyDeleteஇது தான் வரைமுறை என்று....nice....
தெளிவான விளக்கம் அருமையான விழிப்புணர்வு பதிவு....தற்போது RO குடிநீரை மாதக்கணக்கில் உட்கொண்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என who கூறுகின்றனர்
ReplyDelete