குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - Save Children
கடந்த ஞாயிறு அன்று முகநூலில் வந்த ஒரு செய்தி... குழந்தை காணவில்லை என. பெயர் ஹாசினி. புகைப்படத்தில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை. வயது 7.
பொதுவாக, குழந்தையைக் காணவில்லை என வரும் வதந்திகளைப் போல் இதையும் நினைத்து கடந்து சென்றிருந்தேன். ஆனால், நான் நம்பும் சிலரும் இந்தப் பதிவை பகிர, இது உண்மை என அறிந்து கொண்டேன். இந்த நிலையில் இன்று காலை கிடைத்த செய்தியில் 'குழந்தை ஹாசினி மாங்காடு அருகே இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.' என அறிந்தேன்.
பொதுவாக, குழந்தையைக் காணவில்லை என வரும் வதந்திகளைப் போல் இதையும் நினைத்து கடந்து சென்றிருந்தேன். ஆனால், நான் நம்பும் சிலரும் இந்தப் பதிவை பகிர, இது உண்மை என அறிந்து கொண்டேன். இந்த நிலையில் இன்று காலை கிடைத்த செய்தியில் 'குழந்தை ஹாசினி மாங்காடு அருகே இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.' என அறிந்தேன்.
ஹாசினி |
அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த செய்தி, என்னுள் பல கேள்வியை எழுப்பியது. இணையம் வளர்ந்து, சமூக வலைத்தளம் பல நாடுகளை இணைத்துள்ள இந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவது குறித்து இணையத்தில் ஏதாவது தகவல் கிடைக்குமா எனத் தேடிய போது, இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது.
காணாமல் போன குழந்தைகள், கிடைத்த குழந்தைகள் குறித்த தகவல்களை (புகைப்படம் உள்பட) அனைத்து காவல் நிலையங்களில் இருந்து சேகரித்து வெளியிடுகிறது இந்த வலைத்தளம். இந்த வலைத்தளம் தரும் தகவல்கள் இன்னும் எனை மேலும் திடுக்கிட வைத்தது.
- கடந்த 24 மணி நேரத்தில் காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை 15.
- ஒரு மாதத்தில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 91.
- கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போன குசந்தைகளின் எண்ணிக்கை 1780.
- இதில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1081 என்பது சிறிது ஆறுதலளிக்கும் தகவல். இருந்தும், குழந்தை காணாமல் போய், குழந்தை மீண்டும் கிடைக்கும் வரை பெற்றோர்களின் நிலைமை, காணாமல் போன குழந்தையின் நிலைமை போன்றவற்றை நினைத்தால் மனது பதறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலைமையை எப்படி அணுகுவது அல்லது இந்த அபாயத்தில் இருந்து நம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதை விட இப்படிப்பட்ட உலகில் தான் வாழ்கிறோம் என்பதை நினைத்தால் இன்னும் பயமாக உள்ளது.
குழந்தைகள் நல பொது தொலைபேசி எண் : 1098 (பத்து ஒன்பது எட்டு)
நான் சொல்லிக்கொள்ள விரும்பும் இன்னொரு கருத்து, தயவு செய்து காணாமல் போன குழந்தைகள் என சரிவர ஆராயாமல் வதந்திகள் பரப்ப வேண்டாம். முகநூலில் கிடைக்கும் லைக்குகள், ஷேர்களை விட ஒரு குழந்தையின் உயிர் மேலானது.
- கணபதிராமன்
True
ReplyDeleteHasini missed on sunday yesterday she found dead and burnt also.the person who did this abused her ...he staied in same apartment ....shameless creature....
ReplyDeleteகாணாமல் போனதை நானும் ஏதோ பத்தோடு பதினோறவது செய்தி என்று தான் தவிர்த்தேன்.
ReplyDeleteபின் அம்மழைலையின் காணாப்போன பிண்ணனியில் இருப்பவனின் செயல் அதிர்ச்சிக்குள்ளாகியது.
நீங்கள் மேற்கூறியபடி முகப்புத்தகத்தில் லைக் ஷேர் என்ற நோக்கில் அதனை ஆராயாது பதிவிட வேண்டாம் என்றே தோன்றுகிறது