ஹார்வர்டில் தமிழ் இருக்கை - Tamil Chair in Harvard
ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்க தமிழ் இருக்கை (Tamil Chair) கொண்டு வருவதின் மூலம் நமது மொழியைக் காப்பாற்றி விட முடியுமா? இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்? இந்தக் கேள்விகளைக் களைந்து விட்டு உற்று நோக்கும் போது மனதில் எழும் முக்கியமான வினா "இங்கு எத்தனைப் பேருக்கு 'ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்' அமையப் போகவிருக்கும் தமிழ் இருக்கைப் பற்றித் தெரியும்?" தெரிந்து கொள்வோம்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்:
1636 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மாஸ்சூஸட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது. பல துறைகளில் தன் பாடத்திட்டங்களில் சுய ஆய்வு மூலம் மென்மேலும் தன்னைத் தானே மெருகேற்றி இன்று உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனமாக ஹார்வர்ட் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், கலை, மொழியியல் முதலான துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நமது தமிழுக்கென்று ஒரு இருக்கை - ஒரு துறை அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பல தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு திரட்டி பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
தமிழ் மொழியை நாமே தொடர்பு மொழியாகவோ (Communication Language) தொழில்நுட்ப மொழியாகவோ (Technical Language) ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஹார்வர்டில் அமையவிருக்கும் இந்த இருக்கையினால் தமிழில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச அளவில் தமிழுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். சங்கக்கால நூல்கள் மீது சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு நமது வரலாற்றினை உலகறிய செய்ய முடியும். பல தொழில்நுட்ப கலைச் சொற்கள் (Technical Glossary) தமிழிலும் வர வாய்ப்புள்ளது.
இரு தமிழ் மருத்துவர்களான திரு. விஜய் ஜானகிராமன் மற்றும் திரு. சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த முயற்சி உலகெங்கும் அள்ள தமிழர்களால் ஆதரவு தரப்பட்டு வருகிறது. ஹார்வர்டில் தெற்காசிய படிப்புகள் துறையில் பணியாற்றி வரும் திரு. ஜோனாத்தன் ரிப்ளி (Mr. Jonathan Ripley) இந்தத் தமிழ் இருக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார்.
ஜோனாத்தன் ரிப்ளி, தமிழ் இருக்கைக்கு ஆதரவாக ஆற்றிய சொற்பொழிவு மற்றும் அவர் தமிழ் பயிற்றுவிக்கும் காணொளிகள் இதோ உங்கள் பார்வைக்கு.
தமிழ்நாட்டில் முனைவர் ஆறுமுகம் முருகன் அவர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த முயற்சியில் நானும் சிறு பங்களிப்பு அளித்துள்ளேன் என்ற பெருமிதத்துடன், இந்தப் பதிவைப் படிக்கும் சிலரும் தங்களால் இயன்ற உதவியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
- கணபதிராமன்
மேலும் விபரங்களுக்கு மற்றும் நிதி உதவி அளிக்க இணைப்பை சொடுக்கவும்.
Valga Tamil valarga Tamil
ReplyDeleteநன்றி...
DeleteI am proud of u ...
ReplyDeleteNice Ganapthy 🤗🤗🤗
ReplyDelete