உழைச்சு சம்பாதிங்கடா...! - Work and Earn...!
இரு நாட்களாக, முகநூல், ட்விட்டர், வாட்ஸாப் செய்லிகள் வாயிலாக, ஒரு காணொளியும், அதற்கு ஒரு முன்னுரையும் பரவலாகி வருகிறது.
பொண்ணு எடுத்தா இப்படி ஒரு வீட்லெ பொண்ணு எடுக்கணும்👇👇👇
அந்தக் காணொளியில் "பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த" என்று எம்ஜிஆருக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிக்கொண்டிருக்க, ஒரு திருமண இணையர் முன் செல்ல, அவர் பின் அந்த பெண் வீட்டார் செய்த சீதனப்பொருட்கள் வரிசையாக அணி வகுக்கின்றன.
இதைப் பகிரும் யாருக்கும் நம் நாட்டில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமுதாய நோயான இந்த வரதட்சணைக் கொடுமையைப் பற்றிய சிறு குற்றவுணர்வு கூட இருப்பதில்லை... யாரோ வீட்டில் நிகழ்வது போலவும், இப்படி நமக்குக் கிடைக்கவில்லையே எனப் பொறாமைக் கொள்வது போலவும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பெண்ணை மணம் புரிவதற்கு பணம், பொருள் பெறுவது என்பது அந்த ஆணை என்னவாக மாற்றுகிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் கிடைக்கும் காசுக்கு வாயைப் பிளக்கும் இவர்களை என்னவென்று சொல்வது...?
சரிப்பா, அந்தக் காணொளியை பகடி / எள்ளல் செய்வதற்காக பகிர்ந்திருக்கலாம் அல்லவா? என நீங்கள் கேட்கலாம்... ஆனால், காண்போரிடம் ஏன் இப்படி ஒரு வீட்டில் பெண் எடுக்க வேண்டும் எனக் கூற வேண்டும்... இதைப் பார்க்கும் ஆண்களிடத்தில் திருமணம் என்பது பணம் பொருள் கிடைக்கும் நிகழ்வு எனப் பதிய வைப்பதிலும், பெண்கள் / பெண்கள் வீட்டினர் மனத்தில் இது தான் நமது சமூக நிகழ்வு - இதில் தவறெதும் இல்லை, மேலும், இதைச் செய்தால் மட்டுமே நமது பெண்ணுக்குத் திருமணம் நிகழும் என்ற எண்ணத்தை விதைப்பதாய் உள்ளது... ஏதோ பணம் தருவது மட்டும் தான் வரதட்சணை என்றும், பொருளாக வாங்குவது சமூகத்தில் அவரவர் கௌரவத்தை நிலைநாட்டுவது போலவும் நடந்து கொள்வதை என்னவென்று சொல்லி நோவது?
வசதி படைத்த சிலர் தன் மகள் இன்னொரு வீடு சென்று இதுவரை பட்ட வசதிகள் இல்லாமல் வருந்தக் கூடாதே எனத் துவங்கிய இந்தப் பழக்கம், இன்று இதுதான் ஒரு மணவாழ்விற்கே அடிப்படை என்பது போல் இயல்பான ஒன்றாக மாறிப்போனதின் காரணம் சமூகமான நாம் தானே...
Grand, Luxury wedding போன்ற சொற்கள் கொண்டு, திருமணம் என்பதனை ஒரு நாள் சாதனையாக, மற்றவர்களிடத்தில் நமது செலவழிக்கும் திறனைச் சொல்லும் விதமான நிகழ்வாக மாற்றி வைத்துள்ளோம். இனியும் சிறிதாவது சிந்திப்போம்...
வாழ்வு முழுதும் நம்முடன் இணைப்பயணியாக பயணிக்கப்போகும் ஒருவரை அவர் கொண்டு வரும் பொருள் கொண்டோ, அவர் பெற்றோரின் செலவழிக்கும் திறன் கண்டோ, தெரிவு செய்யும் முறையை என்று நாம் விட்டொழிக்கப் போகிறோம்...?
காணொளிக்கு எதிர்காணொளியாக ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை இங்கே இடுகிறேன்...
இனிமேலாவது உழைச்சு சம்பாதிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்...
- கணபதிராமன்

Comments
Post a Comment