2016 ஊனமுற்றோர்க்கான ஒலிம்பிக்ஸ் - 2016 Paralympics

இன்று ரியோவில் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்க உள்ளன. நம் நாட்டின் சார்பாக 19 போட்டிகளில் கலந்து கொள்ள 16 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் 13 ஆண்கள், 2 பெண்களும், அம்பெய்தலில் ஒரு பெண்ணும், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சலில் தலா ஒரு ஆணும் போட்டியிட உள்ளனர்.

பொதுவாகவே, கிரிக்கெட் தவிர வேறெதற்கும் கவனம் தராத நம் நாட்டில், விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் தலையீடுகளை சமாளித்து - நாட்டிற்காக மட்டுமல்லாமல் - 'ஊனம் உடலில் மட்டுமே மனதில் அல்ல' என மன ஊனம் படைத்த பலருக்குப் பாடமாய் தம்மை முன்னிறுத்தி நிற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி தன்னம்பிக்கைக்குத் தலைவணங்குகிறேன்.

இந்திய அணி - ரியோ பாராலிம்பிக்ஸ் 2016

அம்பு எய்தல்:
பூஜா - அம்பு எய்தல்
உலகத் தர வரிசையில் 5 ஆம் இடம்
தடகளப் போட்டிகள்:

ஓட்டப் பந்தயம்:

அன்குர் தாமா - 1500மீ ஓட்டம்

உயரம் தாண்டுதல்:
மாரியப்பன் தங்கவேலு - உயரம் தாண்டுதல்
வருண் சிங் பாட்டி - உயரம் தாண்டுதல்
ஷரத் குமார் - உயரம் தாண்டுதல்

ராம் பால் - உயரம் தாண்டுதல்
ஈட்டி எறிதல்:
தேவேந்திர ஜஜரியா - ஈட்டி எறிதல்

சுந்தர் சிங் குர்ஜார் - ஈட்டி எறிதல்

ரிங்கு - ஈட்டி எறிதல்

ரன்பீர் நரேந்தர் - ஈட்டி எறிதல்

சந்தீப் - ஈட்டி எறிதல்

வீரேந்தர் தண்கர் - ஈட்டி எறிதல் / குண்டு எறிதல்
தடி எறிதல் / தட்டு எறிதல்:
அமித் குமார் - தடி எறிதல் / தட்டு எறிதல்

தரம்பீர் - தடி எறிதல்

குண்டு எறிதல் (பெண்கள்):
தீபா மல்லிக் - குண்டு எறிதல்
தட்டு எறிதல் (பெண்கள்):

தட்டு எறிதல்
பளு தூக்குதல் (48கிலோ பிரிவு):
ஃபர்மான் பாஷா - பளு தூக்குதல்
துப்பாக்கி சுடுதல்:
நரேஷ் ஷர்மா - 10மீ / 50மீ (ப்ரோன்) / 50மீ (3 நிலை) துப்பாக்கி சுடுதல்
நீச்சல்:
 
சுரேஷ் நாராயண் - 50மீ ஃப்ரீ ஸ்டைல் / 50மீ பட்டர்ஃபிளை / 200மீ நீச்சல் 
இந்த உலகில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் கொண்டாடப் பட வேண்டியவர்கள் அல்ல; முயற்சி செய்பவர்களும் தான். பதக்கம் பெற்றால் மட்டும் ஜெய்ஹிந்த் கூறி கொண்டாடாமல், இவர்கள் தோற்றாலும் முயற்சிக்கு ஊக்கம் - திறமைக்கு அங்கீகாரம் தந்து இவர்களைப் போற்றுவோம்.

- கணபதிராமன்

Comments

  1. I agree machi, they should be motivated and the media should bring them to public...nice write up ganapathy, keep doing...👌👌👌

    ReplyDelete
  2. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு...Ganapathy wish success...🤗🤗🤗

    ReplyDelete
    Replies

    1. இந்த ரத்தினமும்
      இந்த மண்ணில்தான்
      புதைந்திருந்தது.
      தானாக முன்வந்து
      ஒளிவீசும் வரை
      காணாதது நம் தவறே.
      ரத்தினம் தங்கவேலுக்கு
      வணக்கம்... வாழ்த்து... மகிழ்ச்சி...!!!

      வெண்கல பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டிக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka