உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள் - World Day to Combat Desertification and Drought

இன்று பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத்தில் உலகை - இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் - சுயநலமாய் சுரண்டி தின்னாமல் நம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியான இடமாக இந்த புவியை விட்டு செல்ல வேண்டிய கடமை உள்ள அனைவருக்கும் முக்கியமான நாள். 
ஜூன் 17 - உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள். 

1994 முதல் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் இதற்கான பல விழிப்புணர்வு முகாம்களும் நிகழ்வுகளும் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேசுபொருள் தலைப்பாக கொண்டு அதன் அடிப்படையில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதன்படி இந்த வருட பேசுபொருள்: நிலச்சீரழிவும் மக்கள் இடம்பெயர்வும் (Land Degradation and Migration)

இன்று நம் நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற தலைப்பு தான், அல்லவா? 

இன்று மக்கள் பணிக்காக வேறு நாடுகளுக்கு அல்லது நகரம் நோக்கி இடம்பெயர முக்கிய காரணிகளில் ஒன்று - நிலச்சீரழிவு. வெகு காலமாக ஆற்றுமணல் அள்ளுதல், கால்வாய் பராமரிப்பின்மை, நீர் மேலாண்மையின்மை, நெகிழிப் பயன்பாடு மற்றும் நில, நீர் மாசுபாடு எனப் பல காரணங்களால் நமது நிலங்களின் வளத்தை மெல்ல சீரழிக்க நாமே காரணமாக இருக்கிறோம். எந்த இடத்தில் நிலம் சீரழிவு அடைகிறதோ, அங்கு உள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் நகரம் நோக்கியோ மற்ற நாடுகளுக்கோ இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். 

இன்று மீத்தேன் / ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமல்ல, வெகு காலமாய் காவேரி முதலான பல ஆறுகளில் அள்ளப்பட்டு வந்த மணலினால் கூட நிலச்சீரழிவு மெல்ல இங்கு நடந்து வந்துள்ளது. பணம் கிடைக்கிறது என சுயநலமாய் இயற்கையை சுரண்டி நிலத்தைக் கெடுக்கும் கொடுமையை மடமை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. 
மணல் அள்ளி சுரண்டப்பட்ட வறண்ட காவேரி (மாயனூர் தடுப்பணை அருகே)
இந்த செயற்கைக்கோள் புகைப்படம் கரூர் அருகே மாயனூர் பகுதி காவேரி ஆறு. இந்த இடம் மட்டுமல்ல, கரூர் துவங்கி நாகை மாவட்டம் கொள்ளிடம் வரை இதே நிலை தான் காவேரிக்கு. 

இதை எல்லாம் தடுப்பது அரசின் வேலை எனத் தட்டிக்கழிக்காமல், எங்கெல்லாம் இயற்கை சமன்பாடு சீர்கேடுகிறதோ, அங்கே குரல் எழுப்புவோம். நகரமாக்கலின் ஒரு பகுதியாக மரங்களை வெட்டி விட்டு இன்று விதைப்பந்து வீசிக் கொண்டிருக்கிறோம். 


உலகின் எந்தப் பகுதியின் நிலத்தையும் வீணாக்கி அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க செய்யும் எதையும் எதிர்த்து குரல் கொடுப்போம். 

இந்த உலகம் நம்முடையது மட்டுமல்ல இன்னும் வரும் பல தலைமுறைக்கும் சொந்தமானது. அவர்களுக்கு சிறந்த ஒரு இடமாக இதைத் தந்து செல்லும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. நிலம் சீரழிந்து பாலையாக மாறுவதைக் கண்டிப்போம். 

இயற்கையைப் போற்றுவோம். இயற்கையோடு வாழ்வோம்.
நிலம் வளமானதாய் இருந்தால், வேலை, வாய்ப்புக்கள், வாழ்வு தானே வரும். 

- கணபதிராமன் 

Comments

  1. Save the planet...great initiative..

    ReplyDelete
  2. Every one should think of it, but I don't think individual has time to think about all these, they want to solve some how and move on... example Bore well drill 500 feet to 1000 plus is normal now a days, they are not aware at all about it is fossil water which cannot be regenerated once the water is sucked. There is no method now to push the water back to bore during rain time... some of the people they are already moving towards water source area for future safely... good initiative though we should be united in safegarud nature for future

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka