வில் ரோஜர்ஸ் கூற்றுக்கள் - Quotes of Will Rogers
வில் ரோஜர்ஸ் - யார் இவர்?
வில் ரோஜர்ஸ் - Will Rogers (1879 - 1935) |
அமெரிக்க நடிகர்
நகைச்சுவையாளர்
வானொலி பேச்சாளர் / செய்தித்தாளில் எழுதுபவர்
உலகத்தை மும்முறை வலம் வந்தவர்
சமூக அரசியல் விமர்சகர்
ஆனால், இவரைப் பற்றியதல்ல இந்தப்பதிவு.
இவர் கூறிய பல மேற்கோள் / கூற்றுக்கள் (Quotes) இன்று நடக்கும் விஷயங்களுக்கும் பொருந்தி வருகிறது. இதை நினைத்து வியப்பதா? வருந்துவதா? முதலில் தெரிந்து கொள்வோம்....
- இங்கே மூன்று வகை மனிதர்கள் உள்ளனர். முதல் வகை, படித்துக் கற்றுக் கொண்டவர்கள். இரண்டாவது வகை, உலகத்தை உன்னிப்பாக உற்று நோக்கி தெரிந்து கொள்பவர்கள். மூன்றாவது வகை, மின்வேலியில் மூத்திரம் இருந்து தான் புரிந்துகொள்ள வேண்டும்.
- எது செய்தித்தாளில் வருகிறதோ அது மட்டுமே எனக்குத் தெரியும். என் அறியாமைக்கு இதுவே சாட்சி.
- நல்ல முடிவுகள் அனுபவத்தால் கிடைக்கும். அனுபவங்கள், பல கெட்ட முடிவுகளால் கிடைக்கும்.
- விளம்பரம் ஒரு கலை. மக்களிடம் இல்லாத பணத்தை தங்களுக்குத் தேவையில்லாததிற்காக செலவு செய்ய வைக்கும் கலை.
- அரசியலில் உண்மையைப் புகுத்தினால், அரசியலே இருக்காது.
- [அமெரிக்க] வாக்காளர்களின் குறைந்த நினைவுத்திறனே அரசியல்வாதிகளை இன்னும் பதவியில் வைத்துள்ளது.
- அழுக்கடைந்த விரல் நகங்களும், தூய்மையான புத்தியுமே நாட்டின் இன்றைய தேவை.
- நிலங்களை வாங்குங்கள். அவர்கள் இப்போது அதைத் தவிர வேறெதுவும் தயாரிக்கவில்லை.
- நாட்டிலேயே மிகச் சிறந்த வேலை செய்யும் மனிதன் துணை அதிபர் தான். அவர் செய்ய வேண்டியதெல்லாம் தினசரி காலையில் எழுந்து 'அதிபர் நன்றாக இருக்கிறாரா?' எனக் கேட்க வேண்டியது தான்.
- [தேர்தலில்] ஒரு முட்டாளும் அவனது பணமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
- சூது ஆடாதீர்கள். நீங்கள் சேமித்த பணத்தை பங்குச் சந்தையில் போடுங்கள். அதன் மதிப்பு அதிகமாகும் வரை காத்திருந்து விற்றிடுங்கள். மதிப்பு அதிகமாகவில்லையா? பங்கு வாங்காதீர்கள்...!
- தங்களுக்குப் பிடிக்காதவரின் கவனத்தை ஈர்க்க, தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை, தங்களிடம் இல்லாத பணத்தை செலவழிக்கிறார்கள் பலரும்.
- அடுத்தவரின் உரிமையை மதிப்பளிக்க கற்றுக் கொள்ளாத வரை, நாம் உண்மையான நாகரீகத்தை அடைய முடியாது.
- நாகரீகம் முன்னேறி விடவில்லை எனக் கூற முடியாது. அவர்கள் ஒவ்வொரு புதிய போரின் போதும் புதிய முறையில் உங்களைக் கொல்வார்கள்.
- மரணத்திற்கும் வரிகளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவெனில், மரணம் ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் இன்னும் மோசமாவதில்லை.
- எல்லாம் மாறி விட்டது. மக்கள் நகைச்சுவையாளனை தீவிரமாகவும், அரசியல்வாதியை நகைச்சுவையாகவும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
- நான் நகைச்சுவையை உருவாக்குவதில்லை. அரசை உற்று நோக்கி உள்ளதை சொல்லுகிறேன், அவ்வளவே...!
- நீ சரியான பாதையிலேயே இருந்தாலும், ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் எல்லோராலும் முந்திச் செல்லப் படுவாய்.
Comments
Post a Comment