Posts

Showing posts from 2017

தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher

Image
மயிலை சீனி வேங்கடசாமி தமிழாலே ஒன்னாணோம்னு சொல்லிக் கொள்ளும் நாம் முன்னால் நம் வரலாற்றினைச் சரியாகத் தரவுகளுடன் புரிந்து கொண்டுள்ளோமா? தரவுகள் இல்லாமல், சாதீயம், பரம்பரை, மதம் எனப் பலப்பிரிவுகளால் பிரிந்து - ஒருதலைப்பட்சமாக வரலாற்றைத் திரித்து வைத்திருந்த வேளையில், தரவுத்தேடி - நாடு முழுதும் சென்று - களப்பணியாற்றி - ஆய்ந்து - பல ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மூலம், தமிழின் தொன்மையை உலகுக்கு - ஏன் தமிழருக்கே காட்டிய மயிலை சீனி வேங்கடசாமியின் 117 வது பிறந்தநாள் இன்று... மயிலை சீனி வேங்கடசாமி (16.12.1900 - 8.5.1980) டிசம்பர் 16, 1900 அன்று மயிலை சீனிவாசன் எனும் சித்த வைத்தியர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார், வேங்கடசாமி. முதல் அண்ணன் தந்தையைப் போல் சித்த மருத்துவத்தில் நாட்டம் கொள்ள, இரண்டாம் அண்ணன் கோவிந்தராசனோ, தமிழ்ப்பற்று கொண்டு கவியெழுதலானார். திருக்குறளின் காமத்துப்பாலின் 250 குறள்தனை நாடகவடிவாய் எழுதினார். மேலும், மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்ணனின் தமிழ் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய வேங்கடசாமிக்கும் தமிழின் தொன்மையான அனைத்தையும் தேடிப்படிக்க எண்ணம்...

அன்றும் இன்றும் பெண்கள் - Women Then and Now

Image
வசூல்ராஜா படத்தில், "அந்தப் பொண்ணு என்னை டாக்டர்னு நெனச்சிக்கிட்டு இருக்கு, அத்தப் போயி கெடுக்க சொல்றியா?" எனக் கமல் கேட்க, பிரபு சொல்வார் "அதான் கல்யாணம் ஆயிடுதில்ல, அப்புறம் எப்படி கெடுக்கிறதாகும்?" என்பார். இதை நகைச்சுவை என எண்ணி நானும் ஒரு காலத்தில் சிரித்திருக்கிறேன். ஆனால், பெண்ணின் உணர்வுகள், வலிகள் என்றும் உணரப்படாமல் நகைச்சுவையாகவே கடந்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும், பெண்ணை ஆண் என்பவன் தன் அடிமையாக - தன் உடைமையாகவே பார்த்து வந்துள்ளான். குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம் எனப் பலவிதமாக பெண்கள் தங்கள் உரிமையைச் சொல்லக் கூடத் தெரியாதவளாகவும், மீறிச் சொல்லினால் அவளின் ஒழுக்கம், நெறி ஆகியவற்றை மாற்றிப் பேசப்படுவதை தாங்க முடியாதவளாகவும் இருக்க வைக்கப்பட்டிருக்கிறாள்... இந்த நிலை, கல்வியினால், பட்டறிவினால், வெளியுலகத் தொடர்பினால், படிப்பினால் சிறிது மாறினாலும் கூட, அதை ஏற்க முடியாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளை அடக்கி வைக்கவே பார்க்கிறது. சுமார் 128 ஆண்டுகள் முன்பு, நிகழ்ந்ததற்கும், இன்று நிகழ்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால், நாம் வளர்ச்சி அட...

கனவைத் துரத்தியவள் ருக்மாபாய் - Rukhmabhai

Image
கல்வி ஒரு பெண்ணுக்கு எவ்விதம் மனஉறுதியைத் தருகிறது, போராடும் குணத்தைத் தருகிறது என்பதற்குத் தகுந்த தரவாகத் திகழ்ந்த ருக்மாபாயின் பிறந்தநாள் இன்று... யாரிந்த ருக்மாபாய்? நமது பள்ளிப்பாடங்களில் அலங்கரித்து எழுதப்பட்டுள்ள - 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முரசிட்டுக் கூறிய பால கங்காதர திலகர், இந்தப் பெண்ணின் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றார் என்றால் நம்புவீர்களா? நமது பள்ளிப்பாடங்கள் ஒருதலைப்பட்சமானவை என்பதை உணர வைத்த தருணம், ருக்மாபாயைப் பற்றி படித்த நேரங்கள்... ருக்மாபாய், ஜனார்த்தன் பாண்டுரங்கர் - ஜெயந்திபாய் ஆகியோருக்குப் புதல்வியாய் 22 நவம்பர் 1864 அன்று பிறக்கிறார். இவரது எட்டாவது வயதில் பாண்டுரங்கர் இறக்க - அவர் பெயரில் இருந்த சொத்து அனைத்தையும் ருக்மாபாய் பெயரில் மாற்றி எழுதுகிறார் ஜெயந்திபாய். வீட்டில் இருந்த படியே, இலவச சர்ச் மிஷன் நூலகத்தின் புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்கிறார் ருக்மா. தனது 11வது வயதில், தாதாஜி பிகாஜி என்ற 19 வயது இளைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தாதாஜியின் அன்னை சிறிது காலத்தில் இறந்துவிட, தாதாஜி அவரது தாய்மாமனான நாராயண் வீட்டுக்குச் ச...

பில் கொடுங்க... ஏன் இந்த அட்வைஸ்? - Give me Bill, not advice

Image
உணவக முதலாளிகளே...! உங்கள் உணவகத்திற்கு வருபவர்களிடத்தில் மெனு கார்டு கொடுங்க... அவங்க கேட்ட உணவு கொடுங்க... சாப்பிட்டு முடிச்சா பில் கொடுங்க... ஏன் இலவசமாக உங்கள் கருத்தைத் திணிக்கிறீங்க....? ----- சில நாட்கள் முன்பு அண்ணா நகர் ஹாட் சிப்ஸ் உணவகத்திற்கு போயிருந்தேன்... அங்கு மேசையில் வைக்கப்பட்ட தாளில் இருந்த ஒரு ஆங்கில வாசகம் என்னைக் கவனத்தை ஈர்த்தது... மேலோட்டமாக பார்த்தால், ஒரு சராசரியான வாசகமாகவும், அது ஒரு சைவ உணவகமாதலால் அப்படி எழுதியிருக்கலாம் என்றே இருந்தாலும், அதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை... இது தான் அந்த வாசகத்தின் தமிழாக்கம்... யானையின் வலிமை ஒட்டகத்தின் உறுதி குதிரையின் அழகு - இவை அனைத்தும் சைவம். இதைப் படித்ததும் எனக்குள் நினைவுக்கு வந்தது ஒரு திருக்குறள்... வள்ளுவர் அதனை உவமையாகச் சொல்லியிருந்தாலும், இங்கு நேரடியாகவே அதன் பொருள் எடுத்துக்கொள்ளலாம்... பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். பரியது - பருத்தது (பருத்த உடலுடையது) கூர்ங்கோட்டது - கூர்மையான தந்தம் உடையது ஆயினும் யானை வெரூஉம் - அஞ்சும் புலி தாக்குறின் - தாக்...

யாருங்க சொந்தம் - சிறுகதை short story 5

"என்னங்க... டீ..." குரல் கேட்டதில் செய்தித்தாளில் இருந்து முகம் தூக்கிப் பார்த்தார் சுந்தரின் அப்பா. நின்றபடி கையில் இருந்த செய்தித்தாளில் இருந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்தாள் அம்மா.  'போன வருட 7/11 தாக்குதலினால் வேலைவாய்ப்புகள் சரிவு' உள்ளுக்குள்ளே, தனது மகன் சுந்தரைப் பற்றி சிறுகவலை எழ, மனைவியின் முகக்குறி கவலை கண்டு, தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவாறு " சுந்தர் எங்கே?" என்றார் அப்பா. "அவனோட ஃபிரண்ட் வீட்டுக்கு... ம்... விஜய் வீட்டுக்குப் போயிருக்கான். ஏதோ இண்டர்வியூ இருக்காம். சென்னையில. அது பத்தி விசாரிக்கப் போயிருக்கான். வரும்போது அப்படியே ட்ரெயின் டிக்கெட் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னான். நான் கொஞ்சம் காசு கொடுத்தேன்." "ஆமா. கேட்டாக் கொடு. என்கிட்ட கேட்க கூச்சப்படுறான். நாட்டுல ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல... இவன் என்ன செய்வான்...? இந்த வேலையாச்சும் கிடைச்சா நல்லா இருக்கும். ஒருநாள் அவன் நல்லா வருவான் பாரு..." " இத அவன்கிட்ட சொல்லலாம்ல... ரெண்டு பேருக்கு நடுவுல என்கிட்ட சொல்றீங்க...?" என கிச்...

பன்னாட்டு நட்பு நாள் - International Friendship Day

Image
அன்னையர் நாள், தந்தையர் நாள் போன்று இந்த நட்பையும் ஒரு நாளில் அடைத்து விட முடியாது. எனினும், சில அடையாளங்கள், சில கொண்டாட்டங்கள் நம் வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக நிலைத்திடக் கூடியது. அவ்வாறான, ஓர் கொண்டாட்டமே ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று (இன்று) கொண்டாடப்படும் பன்னாட்டு நட்பு நாள்.  ஜே சி ஹால் - ஹால்மார்க் நிறுவனர் முதலில், நட்புக்கு என்று ஒரு நாள் கொண்டாடத் துவங்கியது 1930 ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள். ஹால்மார்க் வாழ்த்து அட்டை நிறுவன உரிமையாளர் திரு ஹால் தனது நிறுவன வாழ்த்து அட்டை விற்பனை அதிகரிக்க ஆகஸ்ட் 2 ஆம் நாளை நட்பு நாளாக அறிவித்தார். முதலில், நட்புக்காக கொண்டாடப்பட்டாலும், பின்னர் அது வியாபாரத்திற்காக அவரால் கையாளப்பட்ட உத்தி (business Gimmick) என விமர்சனங்களுக்கும் உள்ளானது. 1935 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று தேசிய நட்பு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின், அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகநாடுகளும் கொண்டாடத் துவங்கின. 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தல...

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள் - World Day to Combat Desertification and Drought

Image
இன்று பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத்தில் உலகை - இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் - சுயநலமாய் சுரண்டி தின்னாமல் நம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியான இடமாக இந்த புவியை விட்டு செல்ல வேண்டிய கடமை உள்ள அனைவருக்கும் முக்கியமான நாள்.  ஜூன் 17 - உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்.  1994 முதல் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் இதற்கான பல விழிப்புணர்வு முகாம்களும் நிகழ்வுகளும் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேசுபொருள் தலைப்பாக கொண்டு அதன் அடிப்படையில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதன்படி இந்த வருட பேசுபொருள்: நிலச்சீரழிவும்  மக்கள் இடம்பெயர்வும் (Land Degradation and Migration) இன்று நம் நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற தலைப்பு தான், அல்லவா?  இன்று மக்கள் பணிக்காக வேறு நாடுகளுக்கு அல்லது நகரம் நோக்கி இடம்பெயர முக்கிய காரணிகளில் ஒன்று - நிலச்சீரழிவு. வெகு காலமாக ஆற்றுமணல் அள்ளுதல், கால்வாய் பராமரிப்பின்மை, நீர் மேலாண்மையின்மை, நெகிழிப் பயன்பா...

ஒதுக்கீடு - Reservation

சுயநிலை விளக்கம்: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதப்பட்டது அல்ல... அவ்வாறு புண்பட்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக செய்த கொடுமையின் குற்ற உணர்ச்சியாக இருக்குமே தவிர, இந்தப் பதிவினால் இருக்காது. நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவன் மங்கள் பாண்டே எனவும் அவனே 1857 சிப்பாய் கலகத்துக்குக் காரணம் எனவும் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்... உண்மை அதுவல்ல... கங்கையில் குளித்து விட்டு கரையேறிக் கொண்டிருந்த பாண்டேயின் மீது மோத வந்த ஒரு தலித் சிறுவனைக் கடிந்து "நீ தொட்டால் தீட்டு... மீண்டும் குளிக்க வேண்டும்..." என்றான் பாண்டே... பதிலாய் அந்த சிறுவன் கேட்ட கேள்வியே நம் விடுதலைக்கு வித்திட்டது... அந்த சிறுவன் கேட்டான்  "மாட்டுக் கொழுப்பு தடவிய தோட்டாவினை வாயால் கடித்து துப்பாக்கியில் பயன்படுத்தும் நீ, பிராமணனா? நான் தொட்டால் தீட்டா?" இந்தக் கேள்வியால் பாண்டேயினுள் எழுந்த சாதிப்பற்றினால் தான் சிப்பாய் கலகம் துவங்கியது. எப்படியோ, இந்திய விடுதலைக்கு வித்திட்ட அந்த முகம் தெரியாத சிறுவனுக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். ஒதுக்கீடு ...

க்ரிய்னர்ட் "ஆந்த்ராக்ஸ்" தீவு - Gruinard Island

Image
ஆழிசூழ் உலகிற்கு ஆழியால் அச்சமில்லை அறிவு சார் உலகோர் அழிவுக்கு உழைத்தால் அறிவுக்கோர் அர்த்தமில்லை. - கணபதிராமன் போன நூற்றாண்டு பல அறிவியல் ஆராய்வுகளில் உலகை முன்னேற்றி இருந்தாலும், அழிவு வேலைகளையும் செய்யத் தவறவில்லை. அவ்விதம், அறிவியல் சோதனை முயற்சி என்ற பெயரில் ஒரு தீவு சுமார் 48 ஆண்டுகள் மனித நடமாட்டமே இல்லாமல் போனது பற்றியே இன்றையப் பதிவு.  ஐக்கிய அரசில் (United Kingdom) அங்கமாய் இருக்கும் ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் அமைந்துள்ள ஒரு தீவு க்ரிய்னர்ட் தீவு. சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தத் தீவு குறித்து 16 ஆம் நூற்றாண்டில் டீன் மன்றோ என்பவர் "மிகுந்த மரங்கள் நிறைந்த வளமையான தீவு" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மனித நடமாட்டமே இல்லாத - யாரும் செல்ல அஞ்சக்கூடிய இடமாக உள்ளது.  க்ரிய்னர்ட் தீவு, ஸ்காட்லாந்து  இரண்டாம் உலகப் போரின் போது, தான் வெல்வதற்குத் தன்னால் இயன்ற பல வழிகளை கையாண்டன அப்போரில் பங்கு கொண்ட நாடுகள். துப்பாக்கி, தோட்டாக்கள், டாங்குகள் மட்டுமல்லாமல் வேதியியல் ஆயுதம் முதல் அணு ஆயுதம் வரை உபயோகிக்கப்பட்ட போர் அது. இ...

காணொளிகள் கைவசத்தில் - Videos at your hands

Image
இன்று ஏப்ரல் 23 - முதன் முதலாக நம் அனைவருக்கும் அறிமுகமான யூடியுப் வலைத்தளத்தின் முதல் காணொளி பதிவேற்றப்பட்ட நாள். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, யூட்யுப் நிறுவனர்களில் ஒருவரான ஜாவேத் கரீம் "me at the zoo" என்ற காணொளியைப் பதிவேற்றி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று நம் வாழ்வின் ஒரு அம்சமாக மாறிவிட்ட இந்த வலைத்தளத்தைப் பற்றி ஒருசிலத் தகவல்கள் இன்றைய வலைமலராக... ஸ்டீவ் சென் (Steve Chen), சாட் ஹர்லி (Chad Hurley), ஜாவேத் கரீம் (Javed Karim) ஆகிய இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்தது இந்த யூடியுப்.  தைவான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டீவ் சென் , பங்களாதேஷ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாவேத் கரீம் மற்றும் அமெரிக்கரான சாட் ஹர்லி ஆகியோர் Pay-Pal நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த போது, தங்களுள் உதித்த ஒரு புதிய யோசனையே இன்று உலகம் முழுதும் பயன்படுத்தும் யூடியுப் வலைத்தளம்.  ஸ்டீவ் சென்  ஜாவேத் கரீம்  சாட் ஹர்லி  2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இதற்கென தனி வலைமுகவரி பதிவு செய்தனர்.  அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டியை ட்யுப் (Tube) என ...

உலக புவித்தாய் நாள் 'ஏப்ரல் 22' - International Mother Earth Day

Image
மனிதர்கள் நாம் மட்டுமல்லாமல், நாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல உயிர்களுக்கு உணவு தந்து - உறைவிடமாய் இருந்து வருவது நம் புவித்தாய்.  ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஏப்ரல் 22 இன்று உலக புவித்தாய் நாளாக கொண்டாடுகிறது. உயிர் வாழ தகுதியுள்ள இந்தப் புவியில், மனிதனோடு, வாழும் அத்தனை உயிர்களுக்கும், தாவரங்களுக்கும் இந்த புவித்தாய் உரிமை உடையவளாய் இருக்கிறாள் என்பதை கூறும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த வருடத்தின் பேசுபொருள் " சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அறிவு - Environmental & Climate Literacy ".  கல்வியறிவு - விழிப்புணர்வு இவையே நம் முன்னேற்றத்திற்கு வழிகோலும். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் மட்டுமல்லாது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது,  நாம் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளும், இயற்கையை விட்டு அகன்று செல்லும் ஒவ்வொரு அடியும், இப்புவியில் நமது வாழ்வை நாம் கடினமாக்க, நமக்கே செய்து கொள்ளும் வினை என்பதை நாம் உணர வேண்டும்.  ஆறுகள் ஆண்டாண்டு காலம் கொண்டு சேர்த்த வளமிக்க மண...

புரட்சிக் கவிஞனுக்கு வீரவணக்கம் - Salute to Revolutionary Poet

Image
கனகசபை சுப்புரத்தினமாய் இருந்தவன், தமிழ்ப்பற்று கொண்டு - தமிழர்கள் மீது திணிக்கப்படும் காழ்ப்புணர்வு கொண்டு - வீறு கொண்டு - மொழியையே ஆயுதமாக்கி - கவிதையால் சாட்டை சுழற்றி - புரட்சிக்கவிஞனாய் மாறினான். அவனுடைய நினைவு நாளான இன்று பாரதிதாசன் கனக சுப்புரத்தினத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். பாரதிதாசன் (29.04.1891 - 21.04.1964) இன்று அவர் கவிதை சிலவற்றை இணையம் வழி எடுத்துப் படித்த போது, இதுவரை இந்த கவி ரத்தினங்களை படிக்காமல் இருந்துள்ளோம் என என்னுள் தோன்றிய குற்ற உணர்வின் வெளிப்பாடே இவ்வார்த்தைகள்:   காதல் - புரட்சி - நாட்டுப்பற்று - மொழிப்பற்று - சமகால அரசியல் என பலவகைகளில் தன கருத்துகளை காலத்தால் அழியா கவியாய் செதுக்கிய பாரதிதாசனை நாம் இன்னும் சரியாய் படிக்கவில்லை; அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. சுப்பிரமணிய பாரதியை விட அதிகம் படிக்கப்பட வேண்டியவன் பாரதிதாசன். அவரின் கவிதைகளில் சில இதோ நம் அனைவருக்காக...! பெண்களால் மட்டுமே சமுதாய மாற்றம் நிகழ முடியும் என்பதை தீர்க்கமாக நம்பிய பாரதிதாசன் பெண் குழந்தைகளுக்கு எழுதிய தாலாட்டு பாடல்... பாடல் என்னவோ க...