பன்னாட்டு நட்பு நாள் - International Friendship Day
அன்னையர் நாள், தந்தையர் நாள் போன்று இந்த நட்பையும் ஒரு நாளில் அடைத்து விட முடியாது. எனினும், சில அடையாளங்கள், சில கொண்டாட்டங்கள் நம் வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக நிலைத்திடக் கூடியது. அவ்வாறான, ஓர் கொண்டாட்டமே ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று (இன்று) கொண்டாடப்படும் பன்னாட்டு நட்பு நாள்.
ஜே சி ஹால் - ஹால்மார்க் நிறுவனர் |
முதலில், நட்புக்கு என்று ஒரு நாள் கொண்டாடத் துவங்கியது 1930 ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள். ஹால்மார்க் வாழ்த்து அட்டை நிறுவன உரிமையாளர் திரு ஹால் தனது நிறுவன வாழ்த்து அட்டை விற்பனை அதிகரிக்க ஆகஸ்ட் 2 ஆம் நாளை நட்பு நாளாக அறிவித்தார். முதலில், நட்புக்காக கொண்டாடப்பட்டாலும், பின்னர் அது வியாபாரத்திற்காக அவரால் கையாளப்பட்ட உத்தி (business Gimmick) என விமர்சனங்களுக்கும் உள்ளானது.
1935 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று தேசிய நட்பு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின், அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகநாடுகளும் கொண்டாடத் துவங்கின.
1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோபி அன்னான் அவர்களால் உலக நட்பு நாள் தூதுவராக கார்ட்டூன் கதாபாத்திரமான வின்னி த பூ (Winnie the Pooh) தேர்ந்தெடுக்கப்பட்டது. தேனை விரும்பி உண்ணும் கரடியான இந்த பாத்திரம், கவிதையும் எழுதும். தன் நண்பர்களான டிக்கர் (புலி), கங்கா (கங்காரு), பிக்லெட் (பன்றி), இயோர் (கழுதை) ஆகியோருக்காக எதையும் செய்யும் கதாபாத்திரமான வின்னி த பூ (கரடி) உலக நட்பு தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான தேர்வு என அனைவராலும் ஏற்கப்பட்டது.

வின்னி த பூ மற்றும் நண்பர்கள் |
1997க்குப் பிறகு, உலக நாடுகள் முக்கியமாக ஆசிய நாடுகளில் நட்பு நாள் வெகுவாக கொண்டாடத் துவங்கப்பட்டது. வாழ்த்து அட்டைகள், மலர்கொத்துக்கள், நட்பு காப்பு (Friendship bands) என வணிக முறையாக கொண்டாடப்பட்டாலும், உலகின் வெவ்வேறு பாகத்தில் இருந்தாலும் சிறந்த நண்பர்கள் ஒருவரையொருவர் நினைத்துக் கொள்ள - தொடர்பு கொள்ள - தொலைபேசி மூலமாகவோ, இணையம் மூலமாகவோ வாழ்த்து பரிமாறிக் கொள்ள, பழைய நட்பின் நினைவுகளை அசை போட ஒரு தருணமாக இந்த நட்பு நாள் இருப்பது மிகையாகாது.
2011 ஆம் ஆண்டில் ஐ.நா சபை ஜூலை 30ம் நாளை நட்பு நாளாக அறிவித்தது. இருப்பினும், இன்னும் பல நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்றே நட்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று நட்பு நாள் கொண்டாடும் முறையில் ஆயிரம் மாற்றங்கள் வந்துவிட்டாலும், நட்பு என்றும் மாறாது.
நாமாக தேர்ந்தெடுக்கும்
உறவு நட்பு
நாம கேக்கலைன்னாலும்
உதவும் நட்பு
இன்பத்தை இரட்டிப்பாக்கும் நட்பு
துக்கத்தைக் கூட பாதியாக்கும் நட்பு
நமது உலகத்தை இன்னும் கொஞ்சம் அழகாக்கும் நட்பினைப் போற்றுவோம்.
நட்பு என்பதைப் புனிதமாக்காதீர்கள்...
புனிதமாவற்றிற்கு நாம்
எல்லை வகுத்து
வரைமுறை புகுத்தி விடுகிறோம்,
நம்மையும் அறியாமல்...
நட்பு என்பது வானம் போல்; எல்லை இல்லை அதற்கு....!
நட்பு என்பது இந்த அண்டம் போல்; முடிவே இல்லை அதற்கு...!!
உள்ளம் வாடும் வேளையில்
ஊக்கம் தந்து
உற்சாகம் கொள்ளச் செய்யும்
நட்'பூ'க்களுக்கு
நன்றியுடன்
நட்பு நாள் வாழ்த்துக்கள்...
- கணபதிராமன்
நன்றி நண்பரே
ReplyDeleteநன்று
Deleteநட்பு நாளன்று
நன்றி பகர்ந்த
நன்னன்பர்
நண்பருக்கு
நனி நன்றி...