கமக்குராவின் பெரிய புத்தர் - The Great Buddha of Kamakura
The Great Buddha of Kamakura |
ஜப்பானில் உள்ள கமக்குரா (Kamakura) எனும் ஊரில் கொட்டுக்கு இன் (Kotuku In) எனும் கோவிலில் உள்ளது டாய்புத்ஸூ (Daibutsu) என்று ஜப்பானியரால் அழைக்கப்படும் பெரிய புத்தர் சிலை. 1233 ஆம் ஆண்டு மரத்தால் ஆன பெரிய புத்தர் சிலை அமைக்க முடிவெடுக்கப் பட்டது. புத்தத் துறவி ஜோக்கோ (Joko) மற்றும் இனாடா (Inada) போன்றோர் தலைமையில் பத்தாண்டுகள் கடும் உழைப்பு மற்றும் பொருட்செலவில் 1243 ஆம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. சிலையைச் சுற்றிலும் மரத்தாலான மண்டபமும் அமைக்கப்பட்டது. 1248 ஆம் ஆண்டு ஜப்பானில் அடித்த பெரும் புயலில் மண்டபமும், புத்தர் சிலையும் சேதம் அடைந்தன. பெரிதும் மனமுடைந்த ஜோக்கோ, மரத்தாலான புத்தர் சிலை இருந்த அதே இடத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்காத வண்ணம் வெண்கலத்தால் ஆன பெரிய புத்தர் சிலை நிறுவ விருப்பம் தெரிவித்தார். பெரும் நிதி திரட்டப்பட்டது. உடன் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
ஓனோ கோரேமோன் (Ono Goraemon) மற்றும் தான்ஜி ஹிசாடோமோ (Tanji Hisatomo) ஆகியோர் சிலை வடிவமைக்க, 30 பாகங்களாக வெண்கல சிலை அச்சு வார்க்கப்பட்டு, ஒன்றிணைக்கப் பட்டது. 1252 ஆம் ஆண்டு முழு வேலை முடிந்து அமைதியின் உருவாய் பெரிய புத்தர் வீற்றிருந்தார். வெளியில் தங்க முலாம் பூசப்பட்ட அந்தச் சிலையில் இன்று அதன் காதுப் பகுதிகளில் மட்டும் தங்கத்தின் சுவடுகள் காணப்படுகிறது. 43.8 அடி உயரம், 121 டன் எடை கொண்ட பெரிய புத்தர் சிலை, உள்ளீடற்றதாக அமைக்கப்பட்டது. சிலையின் பின்புறமாக உள்ளே செல்ல முடியும். ஒரு காலத்தில் 32 வெண்கல தாமரை இதழ்கள் கொண்டிருந்த சிலையின் அடிப்பகுதியில் இன்று ஐந்து இதழ்கள் மட்டுமே உள்ளது.
புயல், மழையால் சிலை பாதிக்கப்படாமல் இருக்க, சிலையைச் சுற்றிலும் மண்டபம் அமைக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு காலக்கட்டங்களில் இந்தக் கோயில் இயற்கை சீற்றத்தை சந்தித்தபடியே இருந்துள்ளது. 1334ல் பெருமழைப் புயலால் மண்டபம் சிதைந்து மீண்டும் சீரமைக்கப்பட்டது. 1369ல் மீண்டும் புயலால் பாதிக்கப்பட்ட மண்டபம் மீண்டும் கட்டப்பட்டது.
Great Buddha Construction Technique Explanation |
எத்தனை இயற்கை சீற்றம் கண்டாலும்
புயல் மழை கொண்டாலும்
நிலம் நடுங்கி குலுங்கினாலும்
இன்றும் அமைதியாய்
அமர்ந்திருக்கும் புத்தன்
புரியா புன்னகையொடு
பூவுலகிற்கு புதிரொன்றை
சொன்ன வண்ணம் இருப்பான்
-கணபதிராமன்
மந்திர புன்னகை என்றென்றும் நம் மனதில் இருக்கும் வண்ணம் சோதனையிலும் சாதனை செய்தார் ஜோகோ ....ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொல்லிய புத்தனை மட்டும் வெயிலும் மழையிலும் நனைய விட்டு விட்டார்கள் .புத்தரின் மந்திர புன்னகை இப்போது விளங்கியது ....நன்றி ராம் .
ReplyDelete