பிப்ரவரி 18 - ஒரு நாள் இரு சிறப்பு February 18
நான் ஏற்கனவே எழுதியது போல ஒரு சில நாட்கள் பல வகைகளில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. இன்றைய தினமும் அவ்வாறே. இன்று நாம் மறந்த ஒரு சிறந்த தலைவனின் பிறந்த தினம். முதன் முதலாய் வானஞ்சல் (Airmail) சேவை துவங்கிய தினம். இரண்டும் இன்றைய பதிவாய். ம. சிங்காரவேலர் பொதுவுடைமைவாதி, சிந்தனைச் சிற்பி, வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், புரட்சியாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமைக் கொண்ட இவரை இன்று பலர் மறந்தே போய்விட்டோம் என்பது மறக்கமுடியாத உண்மை. ம. சிங்காரவேலர் 18.02.1860 ஆம் ஆண்டு மீனவக் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலு பள்ளிப் படிப்பு முதலே படிப்பில் சிறந்து விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்த இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1907 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராய் பதிந்த இவர், தன் வாழ்நாளில் பேராசைக்காரர்களுக்கோ, பணம் கொண்டு அடக்குமுறை செய்பவர்க்கோ வாதாடியதில்லை. வழக்கறிஞராய் சம்பாதித்ததில் பல புத்தகங்கள் வாங்கி தன் வீட்டிலே சுமார் 20000 புத்தகம் கொண்ட நூலகம் அமைத்திருந்தார். வெள்ளையனை எதிர்ப்பதில் ...