விரலுக்கு விழி தந்தவன் - Louis Braille
நீங்கள் உங்கள் வீட்டு முகப்பறையில் ஓர் இரவுப் பொழுதில், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், மின்சாரம் இல்லாமல் போனால் - திடீரென உங்கள் சூழல் இருண்டு போனால் ஒரு மணித்துளியேனும் பதறுவீர்கள் அல்லவா? ஆனால், எந்நேரமும் இருளையேக் கண்டு கொண்டிருப்போர் பற்றி என்றேனும் நினைத்திருக்கிறோமா? நினைத்திருப்பினும், அவர்தம்அன்றாட வாழ்வுதனை மேம்படுத்த உதவும் முறைகளைப் பற்றி அறிந்திருக்கிறோமா?
அவர்களும் இன்று கல்வி கற்க - எழுதப்படிக்க ஏதுவான ஒரு எழுத்துமுறையை உருவாக்கிய ஒரு மேதையின் பிறந்தநாள் இன்று... இவரது பிறந்தநாளை உலகப் பார்வையற்றோர் கல்வி நாளாக உலகமேக் கொண்டாடட்டும்... வாருங்கள், இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
கூவ்ரே எனும் சிற்றூர்... பிரான்சின் பாரீஸ் நகரிலிருந்து 20 மைல்கள் கிழக்கே அமைந்துள்ள ஊர்... இந்த ஊரில் வசித்த சைமன் ரீன் - மோனிக் பிரெய்ல் இணையருக்கு 4 ஜனவரி 1809 அன்று நான்காவது மகனாகப் பிறந்தான் லூயிஸ் பிரெய்ல்.
சைமன் ரீன் தனக்குச் சொந்தமான 3 ஹெக்டேர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார். தோல் பொருட்கள் கொண்டு குதிரைச் சேணம் (Saddle) செய்யும் தொழிலையும் வெற்றிகரமாக செய்து கொண்டிருந்தார். லூயிஸ் நடக்கத் துவங்கியிருந்த நாட்கள் முதலே, தந்தையின் தோல் தொழில்கூடத்தில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். சிறு ஆயுதங்கள் கொண்டு, பயமின்றி தன் தந்தை செய்வதைப் போல் செய்து காட்டுவதில் சைமனுக்கும் மகிழ்வே இருந்தது... ஆனால், விளையாட்டு வினையாகும் என்று சைமன்ரீனும், மோனிக்கும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்...
தனது மூன்றாவது வயதில், ஒரு விலங்குத் தோலில் துளையிடுவதற்காக, குத்தூசி (Awl) கொண்டு முயன்று கொண்டிருந்தான் லூயிஸ். தோலின் பின்னால், குத்தூசியை வைத்து, தன் முழுபலத்தையும் தோலில் வைத்து அழுத்த, குத்திய குத்தூசி தோலுக்கு மிக அருகில் இருந்த குழந்தை லூயிஸின் ஒரு கண்ணைப் பதம் பார்த்தது... உள்ளூர் மருத்துவர் முதலுதவி செய்து, பாரீஸுக்குக் கொண்டுச் செல்லும்படிக் கூற - பாரீஸ் மருத்துவர்களோ அடிபட்ட விழிக்குச் சரியான மருத்துவம் இல்லையெனக் கைவிரித்தனர். ஒரு விழிப் பார்வையிழந்தும், பல வாரங்கள் வலியில் துடித்தும் இருந்த லூயிஸின் நிலைமை மேலும் சிக்கலானது... சிம்பதடிக் ஆப்தால்மியா (Sympathetic Ophthalmia) எனச் சொல்லப்படும் பாதிப்பினால் (அதாவது, ஒரு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு மறுகண்ணுக்கும் பரவி பார்வை இழக்க நேரிடுவது) மறுகண்ணும் பார்வை மங்கத் துவங்கியது. முதலில், பார்வை இழந்ததையே உணராத லூயிஸ், பெற்றோரிடம் "ஏன் இன்னும் இருளாகவே உள்ளது?" எனக் கேட்பானாம்.
தனது ஐந்தாவது வயதில் முழுப்பார்வை இழந்திருந்த லூயிஸுக்குப் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் ஊக்கம் நிறையக் கிடைக்கப்பெற, தன் குறைபாடே மறந்துபோகும் வண்ணம் தன்னம்பிக்கையையும், மற்றச் சிறார்கள் போல் வாழத்தலைப்படுதலையும் மேற்கொண்டான் லூயிஸ். அவனை அழைத்துக்கொண்டு தனது கிராமத்தையேச் சுற்றுவார் சைமன். பார்வையற்ற லூயிஸ், மற்ற உணர்வுகள், காலடி எண்ணிக்கை, சூழலின் ஒலிகள் கொண்டே அந்த ஊரின் அனைத்துப் பகுதிகளும் அவன் மனதில் வரைபடமாய் பதிந்திருந்தது. தனது 10வது வயது வரை கூவ்ரேயில் படித்திருந்த லூயிஸ், தன் கல்வியைத் தொடர பாரீஸுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
லூயிஸின் அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் அவனுக்கு தேசிய பார்வையற்றோர் பள்ளியில் இடம்பெற்றுத் தந்தது. வேலண்டின் ஹாய் என்பவர் அவராகவே உருவாக்கி இருந்த எழுத்துமுறை கொண்டு அங்கு பார்வையற்றோர்க்கு கல்வி சொல்லித் தரப்பட்டது. ஈரமான காகிதத்தில் செப்பு கம்பிகளால் ஆன லத்தீன் மொழி எழுத்துக்களின் அச்சு அழுத்தப்பட்டு, சற்று மேலெழும்பிய அச்சினைக் கையினால் தடவ, மாணவர் படிக்கும் முறை அது. முதலில், இம்முறைக்குப் பழக லூயிஸ் கடினமாய் உணர்ந்தான். கையினால் தடவிச் சரியாக எழுத்தினை உணர்ந்து சொல்ல - அதனை வேலண்டின் ஹாய் பாராட்டுவார். ஆனால், மாணவர்கள் திருப்பி எழுதுவதற்கு இம்முறையில் வழியின்றி இருந்தது. மேலும், பாடங்கள் வெகு எளிதானதாகவும், ஆழமற்றும் இருந்தது, அறிவாற்றல் மிகுந்த லூயிஸ் பிரெய்லுக்கு இப்பாடமுறை மகிழ்வானதாக அமையவில்லை. ஆயினும், வேலண்டின் ஹாயின் முறையிலும் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான் சிறுவன் லூயிஸ்.
1821 ஆம் ஆண்டு, கேப்டன் சார்லஸ் பார்பியர் என்பவர் இரவிலும், இருளிலும் எதிரி அறியா வண்ணம் செய்திகளை வீரர்கள் அறிய தடித்தக் காகிதத்தில் துளையிட்டு எழுதும் சமிக்ஞை மொழியை உருவாக்கியிருந்தார். அவர் லூயிஸ் படித்த பள்ளிக்கு வருகைதந்த போது அவரிடம் அந்த எழுத்துமுறை பற்றி அறிந்து கொண்டான் லூயிஸ். அவரும் தனது எழுத்துமுறையை லூயிஸுக்குத் தந்துதவினார். 12 புள்ளிகள் கொண்டும், சில இடங்களில் சிறு கோடுகள் கொண்டும் இருந்த பார்பியர் முறையினை எளிமையாக்கி 1824 ஆம் ஆண்டு தனது எழுத்துமுறையை வெளியிட்டான் 15 வயது லூயிஸ் பிரெய்ல். 1822 ஆம் ஆண்டு வேலண்டின் ஹாய் இறந்து போக, அதன் பின் வந்தோருக்கு ஹாயின் எழுத்துமுறையே எளிதாகப் பட்டது. ஏனெனில், அவர்கள் பார்வையற்றோரின் நிலையில் இருந்து பார்க்கவில்லை. லூயிஸின் எழுத்துமுறை அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், ஐந்து ஆண்டுகள் உழைத்தான் லூயிஸ். 12 புள்ளிகள் என்பதனை 6 புள்ளிகளாகக் குறைத்து தனது இரண்டாவது எழுத்து முறையை வெளியிட்டார் 1829 ஆம் ஆண்டில். தனது படிப்பு முடிவடைய அங்கேயே ஆசிரியராகத் தொடர்ந்தான் லூயிஸ். வெறும் எழுத்துமுறையோடு நிற்காமல், இசையிலும் தனது புலமையை வெளிபடுத்தினான். ஆர்கன், செல்லோ போன்ற கருவிகளை வாசிப்பதும், இசையமைப்பதுமாக அவரது வாழ்வினைக் கழித்து வந்தார்.
1839 ஆம் ஆண்டு, சிறுகோடுகள் தன்னை நீக்கி, வெறும் ஆறு புள்ளிகள் கொண்டு - இன்றும் எல்லோராலும் எழுதப்படும் பிரெய்ல் முறையினை வெளியிட்டார் லூயிஸ் பிரெய்ல். இவரது முயற்சிகள் இவருக்கு மகிழ்வினைக் கொடுத்தாலும், அவர் இறக்கும் வரை அவற்றிற்கு சரியாக மதிப்பளிக்கப்படவில்லை.
பிரெய்ல் முறையில் எழுதுவதற்கு தனியான எழுதுபலகையும், குத்தூசியையும் பயன்படுத்தினார். தனது பார்வை போக்கிய குத்தூசியை வைத்தே புதிய எழுத்துமுறை தனை உருவாக்கினார் பிரெய்ல்.
பார்வையற்றோர் எழுதுவதை பார்வையுள்ளோரும் கற்கும்வகையில் டெகாபாயிண்ட் எனும் கருவியை உருவாக்கினார்.
சரியான அங்கீகாரம் இல்லாமலும், தனது பணியைக் கைவிடாது தொடர்ந்த லூயிஸின் உடல்நிலை எப்போதுமே கவலைக்கிடமாகவே இருந்தது. 29 வயது முதல் சுவாசக் கோளாறு மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட லூயிஸ், 16 ஆண்டுகள் இந்நோயினால் துன்புற்று, 6 ஜனவரி 1852 அன்று உயிர் நீத்தார்.
இவர் இறந்த பின்னரே இவருடைய எழுத்துமுறை பரவலாகத் துவங்கியது.
இன்று பலமொழிகளில் இவரது முறை மொழிபெயர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கவும் படுகிறது. உலகமெங்கும் இருக்கும் பார்வையற்றோர்களின் கல்விக்கனவை - அன்றாட வாழ்வினை எளிதாக்கி மேம்படுத்திய மேதையை வாழ்த்துவோம்.
என்றும் மறவாது நினைவில் கொள்வோம்.
- கணபதிராமன்

லூயிஸ் பிரெயில் (4.1.1809 - 6.1.1852) |

லூயிஸ் பிரெயில் உருவாக்கிய பிரெஞ்சு பிரெய்ல் எழுதுமுறை |
ஆங்கிலத்தில் பிரெய்ல் முறை |
1839 ஆம் ஆண்டு, சிறுகோடுகள் தன்னை நீக்கி, வெறும் ஆறு புள்ளிகள் கொண்டு - இன்றும் எல்லோராலும் எழுதப்படும் பிரெய்ல் முறையினை வெளியிட்டார் லூயிஸ் பிரெய்ல். இவரது முயற்சிகள் இவருக்கு மகிழ்வினைக் கொடுத்தாலும், அவர் இறக்கும் வரை அவற்றிற்கு சரியாக மதிப்பளிக்கப்படவில்லை.
பிரெய்ல் முறையில் எழுதுவதற்கு தனியான எழுதுபலகையும், குத்தூசியையும் பயன்படுத்தினார். தனது பார்வை போக்கிய குத்தூசியை வைத்தே புதிய எழுத்துமுறை தனை உருவாக்கினார் பிரெய்ல்.
பார்வையற்றோர் எழுதுவதை பார்வையுள்ளோரும் கற்கும்வகையில் டெகாபாயிண்ட் எனும் கருவியை உருவாக்கினார்.
சரியான அங்கீகாரம் இல்லாமலும், தனது பணியைக் கைவிடாது தொடர்ந்த லூயிஸின் உடல்நிலை எப்போதுமே கவலைக்கிடமாகவே இருந்தது. 29 வயது முதல் சுவாசக் கோளாறு மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட லூயிஸ், 16 ஆண்டுகள் இந்நோயினால் துன்புற்று, 6 ஜனவரி 1852 அன்று உயிர் நீத்தார்.
இவர் இறந்த பின்னரே இவருடைய எழுத்துமுறை பரவலாகத் துவங்கியது.
இன்று பலமொழிகளில் இவரது முறை மொழிபெயர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கவும் படுகிறது. உலகமெங்கும் இருக்கும் பார்வையற்றோர்களின் கல்விக்கனவை - அன்றாட வாழ்வினை எளிதாக்கி மேம்படுத்திய மேதையை வாழ்த்துவோம்.
என்றும் மறவாது நினைவில் கொள்வோம்.
லூயிஸ் பிரெய்ல் குறித்து நானெழுதிய வெண்பா |
- கணபதிராமன்
Comments
Post a Comment