தமிழ் எண்கள் - Tamil numerals

தமிழ் எழுத்துக்களைப் போல் மிகப் பழமையானது தமிழ் எண்ணுருக்கள். இன்று வழக்கொழிந்து போனாலும் அல்லது மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதன் பழமைக்குச் சான்றாக இருப்பது இதன் சுழியற்ற எண்முறையே. (zero less numeral system)

ஆனால், 10, 100, 1000 ஆகியவற்றிற்கு தனியே எண்ணுருக்களும் இருந்தன. 1825 ஆம் ஆண்டு 'கணித தீபிகை' எனும் நூலின் மூலம் பயன்பாட்டு எளிமைக்காக சுழி (Zero) சேர்க்கப்பட்டது. 

தமிழ் கற்றுக் கொள்ளாமல் இருந்தால் மொழி அழிய வாய்ப்புள்ளது எனக் கூறும் மொழியறிஞர்களின் கூற்று உண்மை என்பதற்கு இன்று வழக்கொழிந்த தமிழ் எண்களே சாட்சி.

இது வாழ்விற்கு ஒவ்வாது என ஒதுக்காமல் தமிழ் எண் முறையையும் தெரிந்து வைப்பதில் எவ்வித நட்டமும் இல்லை என நினைக்கிறேன். ரோமன் எண்கள் தெரிந்த அளவுக்குக் கூட தமிழ் எண் முறை தெரியாமல் இருப்பது எவ்வித நியாயம்?

இன்றும் மும்பை பேருந்துகளில் எண்கள் மராத்தியில் எழுதப்பட்டிருக்கும். அரேபிய நாடுகளில், சீருந்து பதிவு எண்கள் அரபிய எண்களிலேயே எழுதப்பட்டிருக்கும். நாம் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், தெரிந்து வைத்துக் கொள்வோம் என்பதற்கே இந்தப் பதிவு.













பழைய தமிழ் எண்கள் இடம் சார்ந்து (positional system - decimal placement) எழுதப்படாமல், எழுத்தால் எழுதும் போது இடம் குறைய சுருக்கமாக எழுதுவதற்கே(abbreviation system) பயன்பட்டது. இந்த முறை தற்போது பயனில்லாமல் இருப்பதற்கு காரணம் இதன் எளிமையின்மையே. எடுத்துக்காட்டாக, 1248 என்ற எண்ணைத் தமிழ் எண்முறையில் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

1248        ௲ ௨௱ ௪௰ ௮ 

                 ௲ - ஆயிரம்
                 ௨௱ - இருநூறு
                 ௪௰ - நாற்பது
                 ௮ - எட்டு 

பூஜ்யம் / சுழியம் தமிழ் எண்களில் இணைக்கப்பட்ட பின்னர் இடம் சார்ந்த தமிழ் எண்முறை பின்பற்றப்பட்டது. 

1248          ௧௨௪௮
7800          ௭௮௦௦

இன்று வழக்கொழிந்து போயிருந்தாலும், தெரிந்து வைத்திருப்போம் நம் தமிழ் எண்களை.

- கணபதிராமன்

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka