January 15 - ஜனவரி 15 ஒரு நாள் மூன்று விஷயங்கள்
ஜனவரி 15 - இன்று பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள். உழவுக்கு உதவிய உற்ற நண்பன் ஏர் இழுத்த ஏறுக்கு நன்றி கூறும் நாள். மாட்டுப்பொங்கல். நாம் உணவு உண்ண - தானியங்கள் காய்கறிகள் நமக்குக் கிடைக்க தமக்கேத் தெரியாமல் நமக்கு உதவும் மண்புழு, சிறு வண்டுகள் முதல் காளைகள் வரையிலான எல்லா உயிரினங்களுக்கும் இந்த நாளை அர்ப்பணிக்கின்றேன்.
இன்று மூன்று விஷயங்களைப் பற்றி சொல்ல நினைக்கிறேன்.
1. கோக கோலா:
கோக் என அழைக்கப்படும் கோக கோலா நிறுவனம் துவங்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் ஆகிறது. பெம்பர்டன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் உருவாக்கிய பானத்தில் கோகெய்ன் போதைப் பொருள் சிறிதளவு கலக்கப்பட்டிருந்தது. 1900ன் துவக்கங்களில் மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்த பானம் மற்றும் இந்த நிறுவனம் இன்றும் உலகை தன்வசப் படுத்திவைத்துள்ளது என்பதில் மிகையில்லை.
1912 ஆம் வருடம் தூய உணவு மற்றும் மருந்து சட்டம் இயற்றிய அமெரிக்க அரசு, கோக கோலா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது. அளவுக்கு அதிகமாக அபாயகரமான அளவுக்கு கேஃபீன் (Caffeine) இருந்ததே இதற்குக் காரணம். இன்றும் கோக கோலாவில் கேஃபீன் கலந்தே உள்ளது(!).
ஒரு வருடம் உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கோக கோலாவைத் தயாரிக்க சுமார் 270 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பாட்டில்கள், கேன்கள் தயாரிப்பையும் கணக்கில் கொண்டால் மொத்த தண்ணீர் செலவு 31000 பில்லியன் லிட்டர்.
முடிவு உங்கள் கையில்.
2. விக்கிப்பீடியா:
உலகத் தகவல் களஞ்சியம் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டதும் இன்று தான். 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இது முதலில் ஆங்கிலத்தில் மட்டும் தகவல் பக்கங்களைக் கொண்டிருந்த விக்கிப்பீடியா இன்று சுமார் 40 மில்லியன் வலைப்பக்கங்களை 250 மொழிகளில் கொண்டதாகவும் விளங்குகிறது. யார் வேண்டுமானாலும் தகவல்களை மாற்றக் கூடும் என்பதால் சில நேரங்களில் நம்பகத்தன்மையில் ஐயம் வரினும் விக்கிப்பீடியா உலகத் தகவல்களின் உறைவிடம் என்பது மிகையில்லை.
3. கேப்டன் 'சல்லி' சல்லென்பர்கர்:
2009 ஆம் ஆண்டு இன்றைய தினம் நியூயார்க் லா கார்டியா விமான நிலையத்தில் இருந்து வடக்கு கரோலினா டக்லஸ் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது US Airways 1549 விமானம். விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி சல்லென்பர்கர் மற்றும் துணை விமானி ஜெஃப் ஸ்கைல்ஸ் இருவருக்கும் அடுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் நிகழ்வுகள் - அவை தரவிருக்கும் அதிர்ச்சிகள், அவை கடந்து தாம் செய்யப்போகும் சாகசங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் பறவைக் கூட்டத்தால் தாக்கப்பட்டு இரண்டு இயந்திரமும் பழுதடைந்தது. இடது இயந்திரம் முற்றிலும் எரியவும் தொடங்கி இருந்தது.
விமானி சல்லென்பர்கர் |
தரைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட சல்லி, விமானத்தின் இரு இஞ்சின்களும் பழுதடைந்ததையும் பறக்கும் உயரத்தை இழந்துக் கொண்டிருப்பதாகவும் கூற, தரைக் கட்டுப்பாடு மீண்டும் லா கார்டியாவிலோ அல்லது டீடர்பரோவிலோ தரையிறங்க அனுமதித்தனர். ஆனால், விமானி சல்லென்பர்கர் ஹூஸ்டன் ஆற்றில் தரையிறக்க தீர்மானித்திருப்பதாக கூற தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல துணை விமானியும் அதிர்ந்து தான் போனார். ஆனால், விமானி சல்லி ஹூஸ்டன் ஆற்றில் இறக்கினார். ஒரு இஞ்சின் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதால் ஆற்றில் இறங்கிய பிறகும் வெகு நேரம் விமானத்தில் இருக்க முடியாத நிலையில் துரிதமாக செயல்பட்ட நியூயார்க் காவல்துறை மற்றும் மீட்புத்துறை விமானத்தில் இருந்து 150 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட அனைவரும் மீட்கப்பட்டனர். கடைசியாக விமானத்தை விட்டு வந்தது விமானி சல்லி தான்.
ஹூஸ்டன் ஆற்றில் விமானம் 1549 |
காப்பீட்டு நிறுவனம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board) இந்த நிகழ்வை மனிதத் தவறாகக் கருதி சல்லியின் மூது விசாரணை நடந்தது. தரைக் கட்டுப்பாடு விமான நிலையத்தில் இறங்க அனுமதித்தும் விமானத்தை ஆற்றில் இறக்கியது குறித்து குற்றச்சாட்டு தொடுத்தது. தனது பதிலில் சல்லி "இரு இயந்திரமும் செயலிழந்த நிலையில் பறக்கும் உயரம் குறையும் நேரத்தில் விமான நிலையம் அடைய முயன்றிருந்தால் அங்கு செல்லும் முன்னமே விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும். எனவே 155 உயிர்களைக் காப்பாற்றவே ஆற்றில் இறக்கினேன்." என்றார். கணிப்பொறி உருவகத்திலும் (Computer Simulation) அவரின் கூற்று நிரூபிக்கப்பட்டு குற்றச்சாட்டு முறியடிக்கப்பட்டது. விமானம் ஆற்றில் மூழ்கினாலும் 155 உயிரைக் காப்பாற்றிய கேப்டன் சல்லி அனைவராலும் National Hero எனப் புகழப்படுகிறார்.
Ganapathiraman open university ;-)
ReplyDeleteNice keep it up gans!
ReplyDeleteNice keep it up gans!
ReplyDeleteEncyclopedia....
ReplyDelete🤗