Posts

அக்கா - குறள் கதை

அக்கா...! - முடிவிலி இன்று ஒரு நாலு மாசமாவே என்னோட காலையும், மாலையும் அவளைச் சுத்தியே வந்துகிட்டு இருக்கு. அவ நடந்து போயி அந்த இன்போசிஸ் பஸ்ல ஏறுறது, திரும்பி பக்கத்துல இருக்க அவளோட ப்ரெண்டு கூட பேசுறது. ஏன், நின்ன இடத்துலேந்து தலையை மட்டும் நீட்டி, தன்னோட கம்பெனி பஸ் வந்துடுச்சான்னு எட்டிப் பாக்குறதுன்னு எல்லாமே எனக்கு slowmotionல  நடக்குறது போலவே இருக்கும். எத்தனை முறை பாத்தாலும், அவ கண்ணு, அதுக்கு அளவா வில்லு மாதிரி புருவம், அந்த புருவத்துல வந்து படியுற நாலே நாலு முடின்னு கவிதைங்க அவ. நாலு மாசமா பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். அவளுக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்? எந்த நடிகர் பிடிக்கும்? என்ன கலர் பிடிக்கும்? இப்படி எல்லா டீடெயிலும் தேடிக் கண்டுபுடிச்சாச்சு. ரெண்டு மாசம் முன்னாடி, அப்பப்ப முறைச்சுப் பாக்குற பார்வை கூட இப்ப குறைஞ்சுருக்கு.  என்னடா இவன், இந்தப் பொண்ணு பின்னாடி சுத்துறதையே fulltime வேலையா வச்சிருப்பான் போலயேன்னு நீங்க நினைக்குற mindvoice எனக்கே கேட்குது. நான் விவேக், ஒரு தனியார் கம்பெனில நல்ல வேலையில இருக்கேன். ஒரே மாதிரி ஓடிக்கிட்டு இருந்த இயந்திர...

எதுக்கு? - குறள் கதை

எதுக்கு? என்றைக்கும் வகுப்பு முடிந்து உற்சாகமாக வரும் ஜீவா, இன்று ஏதோ சிந்தித்துக் கொண்டு வருவதைப் பார்த்தாள் யாழினி. தான் பணிபுரியும் அதே பள்ளியில் ஜீவாவும் படித்து வருகிறான். ஜீவாவின் பள்ளி நேரம் முடிந்து மேலும் ஒரு மணிநேரம் யாழினிக்கு வேலை இருக்கும். ஜீவாவும் வகுப்பிலிருந்து வந்து ஆசிரியர் அறையில் அமர்ந்து அன்றைய வீட்டுப்பாடங்களை எழுதுவது வழக்கம்.  "என்னடா ஏதோ வலுவா யோசிச்சுகிட்டே வர்ற?" என்றாள் யாழினி, "ஒன்னுமில்லம்மா" என்று ஒப்புக்குச் சொன்னவன், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான். பெற்றோர்க்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக வீட்டுப்பாடங்கள் பற்றிய குறிப்பினைக் கணினி மூலம் எழுதி அனுப்புவதில் யாழினி முனைந்திருந்தாள். தன் வேலை முடிவதற்கும், பணி நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. யாழினியின் கணினிக்கு மேலே இருந்த கடிகாரத்தின் மணி முள் ஐந்தின் அருகே நிற்க, நிமிட முள் பன்னிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.  அருகே யாழினி வந்து நின்றது கூடத் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த ஜீவாவைக் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, "பெரிய மனுசா, வாடா போலாம்...

அப்பா, ஒரு கதை சொல்றியா? - குறள் கதை

Image
அப்பா, ஒரு கதை சொல்றியா? "அப்பா..." எனது மகனின் அறையின் விளக்கை அணைக்கப் போகுமுன், அவன் குரல் கேட்டுத் திரும்பினேன். "டேய் ஜீவா, தூங்கலயா நீயி" "அப்பா, ஒரு கதை சொல்றியாப்பா?" ஜீவா கேட்க, அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த யாழினி சிரித்துக் கொண்டே உள்ளே வந்து ஜீவாவின் அருகே அமர்ந்தாள். அவனை அப்படியே தூக்கித் தன் மடியில் அமர வைத்துக் கொண்டு, "அப்பாவுக்குக் கதையெல்லாம் சொல்ல வராதுடா" என்று சொல்லியபடி, என்னைப் பார்த்து, "என்ன சுந்தர், சர்தானே?" என்றாள் கேலியாக.  "ஆமாடா, நீ அம்மாக்கிட்டயே கதை கேட்டுக்கோ" என்றேன்.  "அப்பா, ப்ளீஸ்பா, ஒரே ஒரு கதை" என்ற ஜீவா, யாழினியின் வாயில் கைவைத்து மூடியபடி, "இனி அம்மா ஒன்னும் சொல்லாம நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னான். இருவரும் சிரிக்க, உடன் யாழினியும் சிரித்தாள். யாழினியின் அருகே நான் அமர, அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஜீவாவின் கால்களை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டு கதையைச் சொல்லத் துவங்கினேன்.  "கதை சொல்றேன். ஆனா, இப்படியெல...

எப்போது? - குறள் கதை

Image
எப்போது? "தம்பி, எத்தனை பேரு?" இந்த கேள்வியும், இந்த கேள்விக்கு அடுத்துவரும் வரிசையா வரும் கேள்விகளும் கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்து விட்டிருந்தது. "ரெண்டு பேரு தான்மா, நான், என்னோட wife"   "பசங்க இல்லையா?" நல்ல வேளை இந்தக் கேள்விய என் மனைவி கேக்கல. "இல்லம்மா, மேரேஜ் முடிஞ்சு ஒன்னரை ஆண்டு தான் ஆகுது" "முதல்ல அம்மான்னு கூப்பிடாதீங்க, சரி, லவ் மேரேஜா? அரேஞ்சுடா?" இதுவரை இந்தக் கேள்வியை வேறெங்கும் கேட்டதில்ல. 'இது புதுசாருக்கே!' என்று நினைத்துக் கொண்டு, "லவ் மேரேஜ் தான், ஏங்க இதுக்கும், வாடகை வீட்டுக்கும் என்னங்க தொடர்பு இருக்கு?" என்றேன். "இருக்குங்க, அரேஞ்சுடு மேரேஜ்னா, ரெண்டு வீட்டுலேந்தும் எப்பவும் உறவுக்காரவுக வந்துக்கிட்டே இருப்பாங்க, லவ் மேரேஜ்னா அது இருக்காது" 'நான் லவ் மேரேஜ் செஞ்சதுக்கு இப்படி ஒரு பலன் இருக்கா?' என்று நினைத்துக் கொண்ட நான், "அதெப்படிங்க, ரெண்டு வீட்டிலும் லவ்வுக்கு ஒத்துக்கிட்டாங்கன்னா, அடிக்கடி உறவினர்கள் வந்து போவாங்க இல்லயா?" என்றேன். என்னைப் பா...

ஆழி - குறள் கதை

ஆழி   அன்று எங்கும் தன் நீல நிறத்தைப் பரப்பி, பரந்து விரிந்து கிடந்த கடலை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கடல் மட்டும் அலைபாயவில்லை, என் மனமும் தான். எங்கிருந்தோ ஒரு அலை வந்து என் காலின் நுனியைத் தொட்டுச் சென்றது. இன்று  சமூக வலைதளங்களில் இன்று என் பெயர் தான் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இன்று எனக்கு நடக்க இருக்கும் பாராட்டு விழா. எந்த ஊரில் என் உழைப்புக்கு அடையாளம் மறுக்கப்பட்டதோ, அடையாளம் என்ன இல்லாத வேலை செய்கிறேன் என இழிவு சொல்லப்பட்டதோ, அதே ஊரில் இன்று எனக்குப் பாராட்டு விழா. மனதில் என்றோ அடித்துக் கொண்டிருந்த அலை இன்று அமைதியாகவே இருந்தது.  "டாக்டர் சார்" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான செந்தில் நின்றிருந்தார்.  "சொல்லுங்க, செந்தில்" "சார், இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரோக்ராம் துவங்கிடும், உங்க கூட யாராவது வந்திருந்தா அவங்களை முன்வரிசைல உட்கார வைக்கத் தான் கூப்பிட்டேன். உங்க மனைவி, பையன் ரெண்டு பேருக்கும் முன் வரிசையில் இடம் கொடுத்தாச்சு. வேற சிலர் யாரும் இருக்காங்களா?...

உன்னால தான் குரு - குறள் கதை

Image
உன்னால தான் குரு - முடிவிலி இந்தக் கதையின் முந்தைய பகுதியைப் படிக்க ( bit.ly/kural0131 ) காவல்துறை ஆணையர் அலுவலகம் காலையிலேயே தனது பணிகளில் முடுக்கிவிடப்பட்டிருந்த அந்த காலை வேளையில், அருள் அந்தக் கட்டிடத்தின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். உடலில் ஒரு millimeter கூட ஊளைச்சதை இல்லாத உடல்கட்டு, Tuck-in செய்யபட்ட சட்டை, aviator RAY-BAN கண்ணாடி, அருளைக் காண்பவர்கள், சில நொடிகள் நாமும் இவனைப் போல் ஆக முடியாதா எனப் பெருமூச்சு விட வைப்பவன். அங்கே இருந்த காவலரிடம், "Commissionerஐப் பார்க்கணுமே, அவர்கிட்ட ஏற்கனவே appointment வாங்கிட்டேன்." என்றான் அருள். "நீங்க சார்?" என்ற காவலரிடம் சட்டைப்பையிலிருந்து தன்னுடைய visiting cardஐ எடுத்துக் கொடுத்து, "அருள், Private Investigator" என்றான். "அப்படி உட்காருங்க சார், தகவல் சொல்லிடுறேன். கூப்பிடுவாங்க" என்றார் காவலர். கால்மணி நேரத்தில், காவல்துறை ஆணையர் கந்தசாமி முன் அமர்ந்திருந்தான் அருள். "சொல்லுங்க, Mr. அருள், How is everything?"...

உழுத நெலம் - குறள் கதை

Image
உழுத நெலம் "மகேந்திரா, வேலை ஒன்னு இருக்கு, ஊரு வரைக்கும் போயிட்டு வருவோம்." அலைபேசியின் வழி வந்த பரதனின் குரல் மகேந்திரனை வியப்பில் ஆழ்த்தியது.  "என்னடா, இருக்கியா? பதிலே காணோம்" என்று மீண்டும் கேட்ட பரதனுக்கு, "இருக்கேன் அண்ணா, என்ன திடீர்னு ஊருக்கு?" என்றான் மகேந்திரன். "ஏன் துரை காரணம் சொன்னா தான் வருவீகளோ? ரெடியா இரு, நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் பரதன். பரதன், மகேந்திரன் இருவரும் அவர்களது ஊரான சிறுவயல்பட்டியை விட்டு வந்து பத்து ஆண்டுகள் இருக்கும். பணி நிமித்தமாக சென்னை வந்து சேர்ந்த பிறகு, மாதமொரு முறை என்று ஊருக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், இப்போது தேவையிருந்தால் மட்டும் சிறுவயல்பட்டிக்குச் செல்வதென்றாகி விட்டது. ஊரில் இவர்கள் வரவை என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா தமயந்திக்கும், அப்பா ஆனந்தத்திற்கும் இவர்கள் இப்போது வருவது தெரியாது. மகேந்திரன் தனது அலைபேசியை வைத்த இடத்தில் அருகில் இருந்த புகைப்படத்தில் மணக்கோலத்தில் மகேந்திரனும், கவுசியும் நிற்க, பரதனும் செல்வியும...