Posts

இருமை வகை - திருக்குறள் கதை

Image
இருமை வகை இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (23) சுந்தர்... நான் அவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சில நேரம் அவனைப் போல இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியுமா என்று தோன்றும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் அவனிடம் தன் துயரங்களை - சிக்கல்களை - இடர்களைச் சொல்லி இருப்பார்கள். எல்லா சிக்கல்களுக்கும் அவனிடம் விடை இருக்குமா? அவனுக்கே தெரியாது. ஆனால், விடை தேடி வந்தவர்கள் எப்படியும் ஒரு நிம்மதியோடு செல்வார்கள்... அது தான் சுந்தர். ஒரு நாள் அவனிடம் கேட்டே விட்டேன். "டேய், சுந்தர்... உன்ன பாத்தா செம்ம பொறாமையா இருக்கு மச்சான்..." சுந்தர் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை... கண்ணை மட்டும் சுருக்கிப் பார்த்தபடி, " ஏன்டா அப்படி சொல்ற...?" "ஏன்னா…. நீ எப்பவும் மகிழ்ச்சியா இருக்க...? காசு பணம் பத்திகூட நீ கவலைப்பட்டு பாத்ததில்ல... உன்னை மாதிரி நிறைய பேர எனக்கே தெரியும். ஆனா, நீ உன்கிட்ட இருக்குற மகிழ்ச்சிய மத்தவங்களுக்கும் தந்துகிட்டு இருக்க...? எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது..." "நீயே பதில் சொல்லிட்டு நீயே கேள...

துப்பார்க்குத் துப்பாய - குறள் கதை குறள் 12

Image
அனைவருக்கும் வணக்கம். என்னை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்வையும் தொட்டுச் செல்கிறேன். நானின்றி அமையாது இவ்வுலகு. ஒவ்வொரு மொழியிலும் எனக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. என்னுடைய ஒவ்வொரு வடிவத்திற்கும் கூட வெவ்வேறு பெயர்கள் உண்டு. அத்தனை வடிவங்களிலும் எனக்குப் பிடித்த வடிவம் மழை. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள் - அப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கு எனது மழை வடிவத்தில் தான் எவ்வளவு பெருமகிழ்ச்சி! இந்த ஒரு காரணம் போதும், எனக்குப் பிடித்த என் வடிவம் மழை என்பதற்கு. இல்லையா? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? எனக்குத் தெரிந்தவர்களில், என்னை மிகவும் நம்புகிறவர்களுள் ஒருவன், கருப்புசாமி. தனக்குத் தெரிந்த ஒரே வேலையை உயிரைக் கொடுத்து செய்பவன். உலகம் நன்றாக உண்பதற்காக மண்ணில் புரள்பவன். நிறைய நிலம் வைத்து, ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் இலாபம் ஈட்டுபவன் அல்ல, ஐம்பது குழி நிலத்தைப் போக்கியம் எடுத்து உழவு செய்பவன். உழவன். அவனுடையது அழகான சிறிய குடும்பம். அவன் மனதையும், நிலையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கையமைக்கும் அவன் மனைவி - தேன்மொழி, கவிதையாய்க் கொஞ்சு...

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

Image
இன்று வாழ்வின் எல்லா நாளையும் போல கடத்தி விடலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், காலையில் எழுந்ததில் இருந்தே, என்னையே அறியாமல் ஒரு இனம்புரியா உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. நான் தமிழ்ச்செல்வன்... என்னோட அப்பா அம்மா எப்படி இந்த பெயர் வைத்தார்கள்... அவர்களுக்கு நான் என்னவாக வருவேன் என நான் பிறக்கும் போதே தெரிந்திருந்ததா...?? "தமிழ், காபி... ஒரு அஞ்சு நிமிசத்துல இட்லி ரெடி ஆயிடும்..." என்று என்னோட கையில காபி குவளையைக் கொடுத்துட்டுப் போகிறாளே...? இவள் தான் வளர்மதி. என் மனைவி. என்னை முழுதும் புரிந்தவள். கையில் கொடுத்திருந்த காபியின் சூடு, ஆவியாக காற்றில் கரைந்து கொண்டிருக்க, நான் ஆவிக்கும், காற்றுக்கும் இடையே ஆன ஏதோ ஒரு புள்ளியில் நோக்கியபடி, அப்படியே அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து "இட்லி ரெடி..." என்று வந்தவள், கையில் அப்படியே இருந்த காபியையும், சிலை போல் அமர்ந்திருந்த என்னையும் பார்த்து, அருகில் வந்து என் கையருகே நின்று, "தமிழ்..." என்று கைகளைப் பிடித்தாள்.  "சொல்லும்மா..." என்றேன், எங்கோ இருந்த நினைவின் கயிறு அறுந்தவனாக....

திறந்திடு - Open it - சிறுகதை தமிழாக்கம்

Image
திறந்திடு... (Open It) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) (கதைக்காலம்: 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்) மதியம் 2 மணிக்கு அம்ரித்ஸரை விட்டுக் கிளம்பிய அந்த சிறப்பு ரயில், முகல்பூராவை அடைய எட்டு மணிநேரம் ஆனது. பல பயணிகள் வழியிலேயே கொல்லப்பட்டிருந்தனர்... பலர் படுகாயமுற்றிருந்தனர்... சிலர் காணாமல் போயிருந்தார்கள்... அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிராஜுதீன் கண் விழித்தபோது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன்னைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உளக்கொதிப்பில் இருக்கும் ஒரு பெருந்திரளை அவன் கண்டான். தான் எங்கு இருக்கிறோம் என்று அறியாத அவன், இப்போது புழுதி நிறைந்த வானை வெறித்துப் பார்க்கலானான். அந்த முகாம் முழுதும் பல குரல்கள், கூச்சல்கள் நிறைந்திருந்தன. ஆனால், நம் சிராஜுதீனுக்கு அவை யாவும் காதிலே விழவில்லை. யாராவது அவனைப் பார்த்தால், ஏதோ ஆழமாக, உன்னிப்பாக யோசிப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். இருந்தாலும், அவனுடைய மனது எதையும் நினைக்காதிருந்தது, ஒரு காலி பாத்திரம் போல... புழுதி நிறைந்த வான...

குளிர் சதை - Cold Flesh - சாதத் ஹசன் மண்ட்டோ (தமிழாக்கச் சிறுகதை)

Image
குளிர் சதை (Cold Flesh) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) ஈஷர் சிங் அறைக்குள் நுழைந்ததும், கல்வந்த் கௌர் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவளுடைய கூரிய கண்கள் அவனை உற்றுப் பார்த்தன. ஈஷர் கதவை அடைத்தான். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஒரு புரியாத அச்சமூட்டும் அமைதி அந்த நகரத்தையே பற்றிக்கொண்டது போலிருந்தது. கல்வந்த் கௌர் கட்டிலில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்தாள். ஈஷர் சிங் தன்னுடைய மனத்திலோடும் புதிர்களை - அவனுடைய கதையைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியவன், கையில் ஒரு கத்தியைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். சில நொடிகள் அமைதியாக, அந்த இரவின் ஒலியின்மைக்குப் போட்டியாய்க் கழிந்தன. வெறுப்பூட்டிய அந்த அமைதியை கல்வந்த் கௌர் கலைத்தாள். படுக்கையின் நுனி வரை வந்து அமர்ந்தவள், தன் கால்களை ஆட்ட கால் கொலுசுகள் சிணுங்கின. ஈஷர் சிங் அப்போதும் ஒன்றும் பேசாமலே நின்றிருந்தான். கல்வந்த் கௌர் நல்ல உடல்வாகுள்ள பெண், அகன்ற இடுப்பு, பெரிய பரந்த மார்பு, கூரிய விழிகள், சாம்பல் நிறத்தில் சற்று பெரிய உதடுகள்... அவளுடைய தாடையின் வடிவமே அவள் வலிமையான பெண் என்பதை உறுதிபடுத்தியது. தன்னுடைய ந...

அழகிளவேனில் - தமிழாக்கம் Autumn

Image
ஜுன் 27 1880 அன்று பிறந்த ஹெலன் கெல்லர் எழுதிய Autumn என்ற கவிதையின் தமிழாக்கம்...  ஹெலன் கெல்லர் (ஜூன் 27 1880 - ஜூன் 1 1968) அழகிளவேனில்   அடடா, இவ்வுலகில் பெருமை கொண்ட  மாசிலா அழகிளவேனிலவள்... அவளெங்கிலும் அழகும் இதமும் நிறைந்திருக்க... மரங்கொண்ட சாலையின் இருமருங்கும் பச்சை நிறமணிந்த இலைகளால் ஒளிர அதோ அந்தக் காடுகளின் பெருமிதம்  துளிர்விடும் இலைகளால் ததும்பிட பாறைகளும் வேலிகளும் கூட  செடி கொடியோடு ஊதாப்பூ சுமந்து நிற்க ஒளியும் நிழலும் ஒருங்கே இணைந்து நயப்புண்டாக்க பொன்னும் சிவப்பும் ஊதா நிறமும் விழிகளை மயக்கிட ஐயமென்றெனக்கில்லை இது கடவுளின் கைவண்ணமே... மலைகளோ பொன்னிறத்தால் மின்ன அங்கு குமளியும் குழிப்பேரி மரங்களும் தங்கநிறக் கனிகளின் நிறைதாளாது நிலனோக்கி வளைந்திருக்க மஞ்சள் மலர்கள் மலர்ந்தொருபுறம் மலையை பொன்னிறத்தால் தலையாட்டித் தாலாட்ட காட்டு முந்திரிப்பழங்களோ  இளங்கதிரொளியில் நிறைந்தாட அங்கு தெற்கு நோக்கிச் செல்லும் பறவைகள் விடுதியில் சன்னமான குரலில் உரையாடும் பயணிகள் ...

முகிலும் அலையும் - கவிதை தமிழாக்கம் (Clouds and Waves)

Image
முகிலும் அலையும் (ரவீந்திரநாத் தாகூரின் கவிதை - எனது தமிழாக்கம்) அன்னையே,  கார்முகிலில் வாழ்வோர் எனையழைத்தே "காலையெழுந்து அந்நாள் முடியும்வரை விளையாடிக் களித்திருப்போம். தங்கவிடியலோடும் விளையாடுவோம்... வெள்ளிநிலவொடும் விளையாடுவோம்..." என்றனர்... "ஆனால், எவ்விதம் நான் உங்களிடம் வரமுடியும்?" என்றே வினவினேன்... "புவியின் முனைக்கு வந்து இருகரமுயர்த்தி வானோக்கு...  நீயும் முகில்களால் எடுத்துக் கொள்ளப்படுவாய்" என்றனர். "என் அன்னை எனக்காக வீட்டில் காத்திருப்பாளே, அவளை விடுத்து எங்ஙனம் வருவேன்?" எனக் கேட்க சிரித்து மிதந்து நகர்ந்தது முகில்கூட்டம்... ஆனால், எனக்கு அதைவிட இனிய விளையாட்டுத் தெரியும் அன்னையே... அதில் நான் முகில்... நீ நிலவு... என் இருகரம் கொண்டு உனையணைப்பேன்... நம் வீட்டுக்கூரையாக  நீலவானிருக்கும்... கடலலையில் வாழ்வோர் எனையழைத்தே... "காலை முதல் இரவு வரை  நாங்கள் பாடிடுவோம் எங்கு கரையேறுவோம்  என்றறியாது பயணப்படுவோம்..." என்றனர். "ஆனால், எவ்விதம் நான் உங்க...