இருமை வகை - திருக்குறள் கதை
இருமை வகை
பெருமை பிறங்கிற்று உலகு. (23)
சுந்தர்... நான் அவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சில நேரம் அவனைப் போல இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியுமா என்று தோன்றும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் அவனிடம் தன் துயரங்களை - சிக்கல்களை - இடர்களைச் சொல்லி இருப்பார்கள். எல்லா சிக்கல்களுக்கும் அவனிடம் விடை இருக்குமா? அவனுக்கே தெரியாது. ஆனால், விடை தேடி வந்தவர்கள் எப்படியும் ஒரு நிம்மதியோடு செல்வார்கள்... அது தான் சுந்தர்.
ஒரு நாள் அவனிடம் கேட்டே விட்டேன். "டேய், சுந்தர்... உன்ன பாத்தா செம்ம பொறாமையா இருக்கு மச்சான்..."
சுந்தர் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை... கண்ணை மட்டும் சுருக்கிப் பார்த்தபடி, " ஏன்டா அப்படி சொல்ற...?"
"ஏன்னா…. நீ எப்பவும் மகிழ்ச்சியா இருக்க...? காசு பணம் பத்திகூட நீ கவலைப்பட்டு பாத்ததில்ல... உன்னை மாதிரி நிறைய பேர எனக்கே தெரியும். ஆனா, நீ உன்கிட்ட இருக்குற மகிழ்ச்சிய மத்தவங்களுக்கும் தந்துகிட்டு இருக்க...? எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது..."
"நீயே பதில் சொல்லிட்டு நீயே கேள்வி கேட்குற...?" என்றான் சுந்தர்.
"என்னடா சொல்ற...? புரியலையே..."
"நீ தான் சொன்னியே மகிழ்ச்சிய மத்தவங்களுக்குத் தர்றேன்னு... அதான் காரணம்... "
"இருந்தாலும், யார் என்ன சிக்கலை எடுத்துக்கிட்டு வந்தாலும், உன்கிட்டேந்து போகும் போது ஒரு வித நிம்மதியோட போறாங்களே... அது எப்படி...?"
"நண்பா... அது ஒன்னுமே இல்ல... பெரும்பாலும் நமக்கு வர்ற சிக்கல்கள் எல்லாத்துக்குமே நல்லது கெட்டது என ரெண்டா தான் பாக்குறோம்... இன்னொன்னு நமக்கு மட்டும் தான் எல்லாம் நடப்பதாக நினைச்சிக்கிறோம்... உலகத்துல பெரிய நிலைக்கு வந்தவங்க நிறைய பேரோட வாழ்க்கைய பாத்தா, அவங்க நிலையை அடையுறதுக்கு, நிறைய உழைப்பு, பெரும் போராட்டம் செஞ்சுருப்பாங்க. ஆனா, நமக்கு அவங்க வெற்றி தான் தெரியும்... அவங்களே தோத்து போயிருந்தா, அவங்க தோல்வி தான் தெரியும்... அந்த வெற்றியையும் தோல்வியையும் அவங்க கொண்டாடி இருப்பாங்களான்னு தெரியாது... ஆனா இந்த ரெண்டுக்கும் நடுவுல இயல்பான வாழ்வைக் கொண்டாடியிருப்பாங்க... அவங்களோட புகழை உலகமே சொல்லும்... ஆனா அவங்க இயல்பாகவே இருப்பாங்க..."
"யப்பா டே... உன்கிட்ட நான் என்ன கேட்டேன்... நீ என்ன சொல்லிட்டு இருக்க...?"
சிரித்துக் கொண்டான் சுந்தர். "ஹா ஹா... சொல்றேன் கேளுடா... இங்கயும் வெற்றி - தோல்வி, மகிழ்ச்சி - துயரம், நல்லது - கெட்டது என எல்லாத்தையும் ரெண்டா பாக்குறோம்... என்கிட்ட வர்றவங்க கிட்ட, இந்த ரெண்டு மட்டுமே எல்லாம் இல்ல... வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவுல முயற்சின்னு ஒன்னு இருக்கு... அது வெற்றிய விட அழகானது... மகிழ்ச்சிக்கும் துயரத்துக்குக்கும் நடுவுல இயல்புன்னு ஒன்னு இருக்கு... அதையும் மகிழ்வாக எடுத்துக்கலாம். நல்லது கெட்டது இந்த ரெண்டுக்கும் நடுவுல தான் இந்த வாழ்வே இருக்கு... அதை கொண்டாடலாம்..."
சற்று இடைவெளி விட்டு, மேலும் தொடர்ந்தான்...
"இங்க எதுவுமே பைனரியா இல்லடா... 0 இல்ல 1 இப்படி சொல்ல... இது ரெண்டுக்கும் நடுவுல எத்தனையோ எண்கள் இருக்கு... 0.1, 0.001, 0.12, .9998 இப்படி சொல்லிக்கிட்டே போலாம்... முடிவே இல்லாம... இதே போல தான் நாம வெற்றி தோல்வி என ரெண்டா நினைப்பதற்கு நடுவுலயும் முடிவே இல்லாமல் பல வாய்ப்புகள் இருக்கு... பல மகிழ்ச்சிகள் இருக்கு... முடிவிலியாக..."
சொல்லி முடித்திருந்தான் சுந்தர்... இப்போதும் ஒரு புன்சிரிப்பின் சிறு துளி அவன் முகத்தில்.
"உண்மையா உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா..." என்றேன்.
"அப்படி எல்லாம் சொல்லாதடா... நானும் உன்னப்போல தான்..." என்று என் தோளில் கைப்போட்டு, சிரித்தான்... அதே புன்சிரிப்பு.
"நீ அப்படி நினைக்கலாம்... ஆனா, உன்கிட்ட எதையும் சொல்லலாம்... அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு தான் எல்லோரும் பேசுறாங்க... என் நண்பன் இப்படின்னு நினைக்கிறப்ப செம்ம மகிழ்ச்சியா இருக்குடா..."
"என்கிட்ட தன்னோட சிக்கலை எடுத்துட்டு யாரும் வரதில்லடா... அவங்களை அப்படி நான் பாக்கறதுமில்ல... அவங்களுக்குத் தேவை அந்த சிக்கலை அவங்களே போக்கிக் கொள்ள ஒரு துணை... அது நானா இருப்பதற்கு நான் முயற்சி செய்யுறேன்... அதுக்கு நான் படிச்ச பலரோட வாழ்க்கையப் போல, ரெண்டுக்கும் நடுவுல இருக்குற வாழ்க்கைய - இயல்பைக் கொண்டாட சொல்றேன்... அவ்வளவு தான்..." இயல்பாக சொன்னான் சுந்தர்.
"நண்பேன்டா...." என்று சுந்தரின் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டேன். இப்போது அவனுடைய புன்சிரிப்பு என் முகத்திற்கும் பரவியிருந்தது.
- முடிவிலி

குறள் விளக்கம்:
நன்மை, தீமை என இரண்டாக பார்க்கப்படும் எல்லாவற்றின் வகை தெரிந்து, அறம் போற்றி வாழும் பெரியோர்களின் புகழ், பெருமையினை இந்த உலகம் போற்றி மகிழும்.
Nandru ....miga nandru....
ReplyDeleteஅருமையான கதை 👌🏾👌🏾
ReplyDelete👌👌
ReplyDelete