Posts

திறந்திடு - Open it - சிறுகதை தமிழாக்கம்

Image
திறந்திடு... (Open It) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) (கதைக்காலம்: 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்) மதியம் 2 மணிக்கு அம்ரித்ஸரை விட்டுக் கிளம்பிய அந்த சிறப்பு ரயில், முகல்பூராவை அடைய எட்டு மணிநேரம் ஆனது. பல பயணிகள் வழியிலேயே கொல்லப்பட்டிருந்தனர்... பலர் படுகாயமுற்றிருந்தனர்... சிலர் காணாமல் போயிருந்தார்கள்... அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிராஜுதீன் கண் விழித்தபோது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன்னைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உளக்கொதிப்பில் இருக்கும் ஒரு பெருந்திரளை அவன் கண்டான். தான் எங்கு இருக்கிறோம் என்று அறியாத அவன், இப்போது புழுதி நிறைந்த வானை வெறித்துப் பார்க்கலானான். அந்த முகாம் முழுதும் பல குரல்கள், கூச்சல்கள் நிறைந்திருந்தன. ஆனால், நம் சிராஜுதீனுக்கு அவை யாவும் காதிலே விழவில்லை. யாராவது அவனைப் பார்த்தால், ஏதோ ஆழமாக, உன்னிப்பாக யோசிப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். இருந்தாலும், அவனுடைய மனது எதையும் நினைக்காதிருந்தது, ஒரு காலி பாத்திரம் போல... புழுதி நிறைந்த வான...

குளிர் சதை - Cold Flesh - சாதத் ஹசன் மண்ட்டோ (தமிழாக்கச் சிறுகதை)

Image
குளிர் சதை (Cold Flesh) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) ஈஷர் சிங் அறைக்குள் நுழைந்ததும், கல்வந்த் கௌர் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவளுடைய கூரிய கண்கள் அவனை உற்றுப் பார்த்தன. ஈஷர் கதவை அடைத்தான். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஒரு புரியாத அச்சமூட்டும் அமைதி அந்த நகரத்தையே பற்றிக்கொண்டது போலிருந்தது. கல்வந்த் கௌர் கட்டிலில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்தாள். ஈஷர் சிங் தன்னுடைய மனத்திலோடும் புதிர்களை - அவனுடைய கதையைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியவன், கையில் ஒரு கத்தியைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். சில நொடிகள் அமைதியாக, அந்த இரவின் ஒலியின்மைக்குப் போட்டியாய்க் கழிந்தன. வெறுப்பூட்டிய அந்த அமைதியை கல்வந்த் கௌர் கலைத்தாள். படுக்கையின் நுனி வரை வந்து அமர்ந்தவள், தன் கால்களை ஆட்ட கால் கொலுசுகள் சிணுங்கின. ஈஷர் சிங் அப்போதும் ஒன்றும் பேசாமலே நின்றிருந்தான். கல்வந்த் கௌர் நல்ல உடல்வாகுள்ள பெண், அகன்ற இடுப்பு, பெரிய பரந்த மார்பு, கூரிய விழிகள், சாம்பல் நிறத்தில் சற்று பெரிய உதடுகள்... அவளுடைய தாடையின் வடிவமே அவள் வலிமையான பெண் என்பதை உறுதிபடுத்தியது. தன்னுடைய ந...

அழகிளவேனில் - தமிழாக்கம் Autumn

Image
ஜுன் 27 1880 அன்று பிறந்த ஹெலன் கெல்லர் எழுதிய Autumn என்ற கவிதையின் தமிழாக்கம்...  ஹெலன் கெல்லர் (ஜூன் 27 1880 - ஜூன் 1 1968) அழகிளவேனில்   அடடா, இவ்வுலகில் பெருமை கொண்ட  மாசிலா அழகிளவேனிலவள்... அவளெங்கிலும் அழகும் இதமும் நிறைந்திருக்க... மரங்கொண்ட சாலையின் இருமருங்கும் பச்சை நிறமணிந்த இலைகளால் ஒளிர அதோ அந்தக் காடுகளின் பெருமிதம்  துளிர்விடும் இலைகளால் ததும்பிட பாறைகளும் வேலிகளும் கூட  செடி கொடியோடு ஊதாப்பூ சுமந்து நிற்க ஒளியும் நிழலும் ஒருங்கே இணைந்து நயப்புண்டாக்க பொன்னும் சிவப்பும் ஊதா நிறமும் விழிகளை மயக்கிட ஐயமென்றெனக்கில்லை இது கடவுளின் கைவண்ணமே... மலைகளோ பொன்னிறத்தால் மின்ன அங்கு குமளியும் குழிப்பேரி மரங்களும் தங்கநிறக் கனிகளின் நிறைதாளாது நிலனோக்கி வளைந்திருக்க மஞ்சள் மலர்கள் மலர்ந்தொருபுறம் மலையை பொன்னிறத்தால் தலையாட்டித் தாலாட்ட காட்டு முந்திரிப்பழங்களோ  இளங்கதிரொளியில் நிறைந்தாட அங்கு தெற்கு நோக்கிச் செல்லும் பறவைகள் விடுதியில் சன்னமான குரலில் உரையாடும் பயணிகள் ...

முகிலும் அலையும் - கவிதை தமிழாக்கம் (Clouds and Waves)

Image
முகிலும் அலையும் (ரவீந்திரநாத் தாகூரின் கவிதை - எனது தமிழாக்கம்) அன்னையே,  கார்முகிலில் வாழ்வோர் எனையழைத்தே "காலையெழுந்து அந்நாள் முடியும்வரை விளையாடிக் களித்திருப்போம். தங்கவிடியலோடும் விளையாடுவோம்... வெள்ளிநிலவொடும் விளையாடுவோம்..." என்றனர்... "ஆனால், எவ்விதம் நான் உங்களிடம் வரமுடியும்?" என்றே வினவினேன்... "புவியின் முனைக்கு வந்து இருகரமுயர்த்தி வானோக்கு...  நீயும் முகில்களால் எடுத்துக் கொள்ளப்படுவாய்" என்றனர். "என் அன்னை எனக்காக வீட்டில் காத்திருப்பாளே, அவளை விடுத்து எங்ஙனம் வருவேன்?" எனக் கேட்க சிரித்து மிதந்து நகர்ந்தது முகில்கூட்டம்... ஆனால், எனக்கு அதைவிட இனிய விளையாட்டுத் தெரியும் அன்னையே... அதில் நான் முகில்... நீ நிலவு... என் இருகரம் கொண்டு உனையணைப்பேன்... நம் வீட்டுக்கூரையாக  நீலவானிருக்கும்... கடலலையில் வாழ்வோர் எனையழைத்தே... "காலை முதல் இரவு வரை  நாங்கள் பாடிடுவோம் எங்கு கரையேறுவோம்  என்றறியாது பயணப்படுவோம்..." என்றனர். "ஆனால், எவ்விதம் நான் உங்க...

குருவிக்கூடு - Sparrow Nest சிறுகதை

Image
சென்னை நகரம்... இரவுகளில் சோடியம் ஆவி விளக்கின் மஞ்சள் நிறவொளியிலும், பகலில் மஞ்சள் மலர்கள் உதிர்ந்த சாலைகளிலும் மிளிரும் நகரம்... இந்த நகரை இந்த அளவுக்கு உருவாக்கி, அதற்கு எந்தவித பலனும் எதிர்பாராமல் தன்னை இப்போதும் அந்த ஊரின் அங்கமாகவே நினைத்துக் கொண்டிருப்பவர்களில் இந்த திடீர் காலனி மக்களும் அடங்குவர்.  திடீர் காலனி... நீங்கள் கூட கடந்து சென்றிருக்கலாம்... நகரின் முதுகெலும்பாக ஊடாக ஓடும் அண்ணா சாலையின் கிளையாகப் பிரியும் பல சாலைகளில் ஒன்றான கிரீம்ஸ் சாலையின் ஒரு புறத்திலிருந்து கூவம் ஆறு வரை விரிந்து கிடக்கும் இந்த காலனி... வெளியிலிருந்து பார்ப்பவர்களின் பார்வையிலும், ஹிண்டு பத்திரிக்கையில் 'லெட்டர் டு தி எடிட்டர்' பகுதியில் எழுதுபவர்க்கும் இவர்களின் கூடி வாழும் வாழ்வியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்... பெரும்பாலும் காலில் சக்கரமில்லாத குறையாக எதற்காகவென்று தெரியாமல் ஓடும் பலருக்கும் நின்று கவனிக்கக்கூட - ஏன் அவர்கள் பார்வையில் இப்பகுதி சென்னை மாநகரிலேயே இல்லாதது போல் இருக்கும்...  அன்று திடீர் காலனியில் சலசலப்பும் பரபரப்பும் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலும...

கொதிகலன் - Boiling Vessel சிறுகதை

Image
கொதிகலன் 2006 ஜாம்ஷெட்பூர்... ஊரில் ரயில் நுழையும் போதே நம் நாசிக்குள் இரும்பின் வாடை அடிக்கும் ஊர்... இரும்பு நகரம்... ஒரு தொழிற்சாலையைச் சுற்றியெழுந்த ஊர்... ஜார்க்கண்ட் மாநிலத்தில், அனைத்து மாநிலத்தில் இருந்தும் ஆட்களைப் பார்க்கவல்ல ஊர்... சுந்தர் இந்த ஊருக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது.  இதற்கு முன், அவன் வளைகுடா நாட்டில் பணிபுரிந்த போது கூட அவனுக்கு ஹிந்தியோ, அந்த ஊர் மொழி அரபியோ பயன்படுத்தத் தேவை மிகக் குறைவாய் இருந்தது... இந்த ஊருக்கு வந்தபோது தன்னைச் செவிடனாகவும், ஊமையாகவும் உணர்ந்தான். ஊரின் நடுவே இருந்த இரும்பாலையின் தன்னக மின்நிலையத்தில் கொதிகலன் நிறுவுதலுக்காக வந்திருந்தான். இதை அவன் என்கிட்ட சொன்னப்ப நானும் கேட்டேன், "என்னமோ சொன்ன? ஆனா என்ன சொன்னன்னு தான் புரியல" என்று. சிரிச்சுக்கிட்டே "Boiler installation in Captive Power Plant"னு சொன்னான். இவ்ளோ தமிழ் தெரிஞ்சவனுக்கு ஹிந்தி தெரியாது போனதால், இந்த ஐந்து மாதங்களின் முதலிரண்டு வாரம் மிகக் கொடுமையாய் உணர்ந்தான். இருப்பினும், அவனது குழுவில் இருந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துள...

தாய்மொழிப் போற்றுதும் - Celebrate Mother Language

Image
தாய்மொழிப்  போற்றுதும் இன்று உலகத் தாய்மொழி நாள்... ஐக்கிய நாடுகள் மன்றம் பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துக் கொண்டாடுகிறது.  ஏன் தாய்மொழி?  மொழி அறிவு அல்ல... அது கருத்துத்தொடர்புக்கான ஒரு கருவி. ஆனால், ஒரு கருவியைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை சரிவர பயன்படுத்தலும் கைகூடும். ஒரு மொழி அறிவு அல்ல எனினும் குறைந்த அளவு மொழியறிவு இங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சுமார் 5 மாதங்கள் முதல் குழந்தையின் செவியுணர் திறன் துவங்கி விடும். அவைக் கேட்கும் சொற்களே அக்குழந்தையின் மூளையின் மொழியறிவுக்காக இருக்கும் பகுதியில், கட்டுமானக் கற்களாய் அடுக்கப்படும். வயிற்றில் இருக்கும் போதும், பிறந்த பின்பும் தான் கேட்கும் ஒவ்வொரு புதிய சொற்களையும் மூளை தானாகப் பதிவு செய்கிறது. இவ்வாறாக, ஒரு குழந்தை தான் கேட்டச் சொற்களைக் கொண்டு, எவ்வித இலக்கணமும், ஆசிரியரும் இன்றி தானே பேச எத்தனிக்கும் மொழியே தாய்மொழி.  இந்தத் தாய்மொழி மூலம் கற்றிடில், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. யார் தன் தாய்மொழியில் மிகவும் வலிமையுள்...