Posts

என்றாவது ஒரு நாள் - Someday in Future

Image
"என்றாவது ஒரு நாள், நீ நல்ல நிலமைக்கு வருவடா... கவலைப்படாதே" சுந்தரோட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார். சுந்தருக்கு அப்பாவின் இந்த ஆறுதல் சொல் கூட சிறு கோபத்தையும், கோபம் கொள்வதற்காக குற்றவுணர்வையும் ஒருசேரத் தந்தது. அமைதியாகவே இருந்தான். பொறியியல் கல்லூரிப் படிப்பு 2002ல் முடித்து இரு ஆண்டுகள் முடிந்திருந்தும், இன்னும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஊதியம் பெறும் பணி கிடைக்கவில்லை. வெளிநாடு செல்வதற்கும் முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த முயற்சியில், மும்பையில் நடந்த நேர்முகத் தேர்வில், அவனுடன் வந்த மூன்று நண்பர்களுக்கு துபாயில் வேலை கிடைக்க, சுந்தருக்கு வழக்கம் போல் கிடைக்கவில்லை... அதற்குத் தான் அப்பா அவனை ஆறுதல் செய்து கொண்டிருந்தார். மௌனமாக அன்று இருந்துவிட்டு, அடுத்த நாள் மேட்டூருக்குக் கிளம்பினான். தொலைபேசியில் கூட, சில நாட்கள் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்த்திருந்தான். செய்தித்தாள்களிலும், முகமைகள் மூலமும் விளம்பரங்கள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிதையே முழுத்தொழிலாகக் கொண்டிருந்தான். அனல்மின்நிலையத்தில் வேலை செய்தாலும், இரு ஆண்டுகளில் நுட்பங்கள் பல கற்றிருந்த...

உழைச்சு சம்பாதிங்கடா...! - Work and Earn...!

Image
இரு நாட்களாக, முகநூல், ட்விட்டர், வாட்ஸாப் செய்லிகள் வாயிலாக, ஒரு காணொளியும், அதற்கு ஒரு முன்னுரையும் பரவலாகி வருகிறது. பொண்ணு எடுத்தா இப்படி ஒரு வீட்லெ பொண்ணு எடுக்கணும்👇👇👇 அந்தக் காணொளியில் "பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த" என்று எம்ஜிஆருக்கு டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிக்கொண்டிருக்க, ஒரு திருமண இணையர் முன் செல்ல, அவர் பின் அந்த பெண் வீட்டார் செய்த சீதனப்பொருட்கள் வரிசையாக அணி வகுக்கின்றன. இதைப் பகிரும் யாருக்கும் நம் நாட்டில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமுதாய நோயான இந்த வரதட்சணைக் கொடுமையைப் பற்றிய சிறு குற்றவுணர்வு கூட இருப்பதில்லை... யாரோ வீட்டில் நிகழ்வது போலவும், இப்படி நமக்குக் கிடைக்கவில்லையே எனப் பொறாமைக் கொள்வது போலவும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பெண்ணை மணம் புரிவதற்கு பணம், பொருள் பெறுவது என்பது அந்த ஆணை என்னவாக மாற்றுகிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் கிடைக்கும் காசுக்கு வாயைப் பிளக்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? சரிப்பா, அந்தக் காணொளியை பகடி / எள்ளல் செய்வதற்காக பகிர்ந்திருக்கலாம் அல்லவா? என நீங்கள் கேட்கலாம்... ஆனால், காண்போரிடம் ஏன் இப...

இன்சுலினும் இன்றைய நாளும் - Insulin and Today Jan 11

Image
இன்றைய சூழலில் நிறைய பேர ஆட்டிப்படைக்கும் ஒரு நோயின்னா, அது நீரிழிவு நோய் தான்... இன்னிக்கும் இந்த நோய்க்கும் ஒரு தொடர்பு இருக்கு... அப்படியா...? நீரிழிவுன்னா செல்லமாக, சர்க்கரை நோய் எனவும் சொல்றாங்களே... அதான? அது என்னப்பா சக்கரை நோயி...? அதுக்கு முதல்ல, நம்ம உடம்புல நாம சாப்பிடுறது எப்படி செரிமானம் ஆகுதுன்னு தெரியணும்... சரி... எங்க செரிமானம் ஆகத் தொடங்குதுன்னு தெரியுமா? இது தெர்யாதா எனக்கு? வயித்துல... அதான் இல்ல... வாயிலயே ஆரம்பிச்சுடும்... வாய்ல எச்சியிலே நிறைய என்சைம்ங்க இருக்கு... அது நம்ம மெல்லும் போது, சாப்பாட்டோட சேர்ந்து செரிமானத்தை வாயிலயே ஆரம்பிச்சுடும்... அதனால தான் நல்லா மென்னு சாப்புடுடான்னு அம்மா சொல்லுவாங்க... அப்புறம்... வாயிலேந்து உணவுக்குழல் வழியா இரைப்பைக்குப் போகும் சாப்பாடு... ஒரே நேரத்துல அப்படியே இறங்காது... கவளம் கவளமாத்தான் இறங்கும்... இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்து, நம்ம சாப்பிட்ட சாப்பாட்ட உடைத்து கரைக்கும்... அமிலமா? நம்ம வயித்துலயா? ஆமா... மேலக் கேளு... வாயில சுரந்த எச்சிலும், இரைப்பையில இருக்கும் என்சைம்களும் சேந்து கூழாயிரு...

விரலுக்கு விழி தந்தவன் - Louis Braille

Image
நீங்கள் உங்கள் வீட்டு முகப்பறையில் ஓர் இரவுப் பொழுதில், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், மின்சாரம் இல்லாமல் போனால் - திடீரென உங்கள் சூழல் இருண்டு போனால் ஒரு மணித்துளியேனும் பதறுவீர்கள் அல்லவா? ஆனால், எந்நேரமும் இருளையேக் கண்டு கொண்டிருப்போர் பற்றி என்றேனும் நினைத்திருக்கிறோமா? நினைத்திருப்பினும், அவர்தம்அன்றாட வாழ்வுதனை மேம்படுத்த உதவும் முறைகளைப் பற்றி அறிந்திருக்கிறோமா? அவர்களும் இன்று கல்வி கற்க - எழுதப்படிக்க ஏதுவான ஒரு எழுத்துமுறையை உருவாக்கிய ஒரு மேதையின் பிறந்தநாள் இன்று... இவரது பிறந்தநாளை உலகப் பார்வையற்றோர் கல்வி நாளாக உலகமேக் கொண்டாடட்டும்... வாருங்கள், இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். கூவ்ரே எனும் சிற்றூர்... பிரான்சின் பாரீஸ் நகரிலிருந்து 20 மைல்கள் கிழக்கே அமைந்துள்ள ஊர்... இந்த ஊரில் வசித்த சைமன் ரீன் - மோனிக் பிரெய்ல் இணையருக்கு 4 ஜனவரி 1809 அன்று நான்காவது மகனாகப் பிறந்தான் லூயிஸ் பிரெய்ல். லூயிஸ் பிரெயில் (4.1.1809 - 6.1.1852)  சைமன் ரீன் தனக்குச் சொந்தமான 3 ஹெக்டேர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார். தோல் பொருட்கள் கொண்டு க...

தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher

Image
மயிலை சீனி வேங்கடசாமி தமிழாலே ஒன்னாணோம்னு சொல்லிக் கொள்ளும் நாம் முன்னால் நம் வரலாற்றினைச் சரியாகத் தரவுகளுடன் புரிந்து கொண்டுள்ளோமா? தரவுகள் இல்லாமல், சாதீயம், பரம்பரை, மதம் எனப் பலப்பிரிவுகளால் பிரிந்து - ஒருதலைப்பட்சமாக வரலாற்றைத் திரித்து வைத்திருந்த வேளையில், தரவுத்தேடி - நாடு முழுதும் சென்று - களப்பணியாற்றி - ஆய்ந்து - பல ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மூலம், தமிழின் தொன்மையை உலகுக்கு - ஏன் தமிழருக்கே காட்டிய மயிலை சீனி வேங்கடசாமியின் 117 வது பிறந்தநாள் இன்று... மயிலை சீனி வேங்கடசாமி (16.12.1900 - 8.5.1980) டிசம்பர் 16, 1900 அன்று மயிலை சீனிவாசன் எனும் சித்த வைத்தியர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார், வேங்கடசாமி. முதல் அண்ணன் தந்தையைப் போல் சித்த மருத்துவத்தில் நாட்டம் கொள்ள, இரண்டாம் அண்ணன் கோவிந்தராசனோ, தமிழ்ப்பற்று கொண்டு கவியெழுதலானார். திருக்குறளின் காமத்துப்பாலின் 250 குறள்தனை நாடகவடிவாய் எழுதினார். மேலும், மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்ணனின் தமிழ் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய வேங்கடசாமிக்கும் தமிழின் தொன்மையான அனைத்தையும் தேடிப்படிக்க எண்ணம்...

அன்றும் இன்றும் பெண்கள் - Women Then and Now

Image
வசூல்ராஜா படத்தில், "அந்தப் பொண்ணு என்னை டாக்டர்னு நெனச்சிக்கிட்டு இருக்கு, அத்தப் போயி கெடுக்க சொல்றியா?" எனக் கமல் கேட்க, பிரபு சொல்வார் "அதான் கல்யாணம் ஆயிடுதில்ல, அப்புறம் எப்படி கெடுக்கிறதாகும்?" என்பார். இதை நகைச்சுவை என எண்ணி நானும் ஒரு காலத்தில் சிரித்திருக்கிறேன். ஆனால், பெண்ணின் உணர்வுகள், வலிகள் என்றும் உணரப்படாமல் நகைச்சுவையாகவே கடந்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும், பெண்ணை ஆண் என்பவன் தன் அடிமையாக - தன் உடைமையாகவே பார்த்து வந்துள்ளான். குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம் எனப் பலவிதமாக பெண்கள் தங்கள் உரிமையைச் சொல்லக் கூடத் தெரியாதவளாகவும், மீறிச் சொல்லினால் அவளின் ஒழுக்கம், நெறி ஆகியவற்றை மாற்றிப் பேசப்படுவதை தாங்க முடியாதவளாகவும் இருக்க வைக்கப்பட்டிருக்கிறாள்... இந்த நிலை, கல்வியினால், பட்டறிவினால், வெளியுலகத் தொடர்பினால், படிப்பினால் சிறிது மாறினாலும் கூட, அதை ஏற்க முடியாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளை அடக்கி வைக்கவே பார்க்கிறது. சுமார் 128 ஆண்டுகள் முன்பு, நிகழ்ந்ததற்கும், இன்று நிகழ்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால், நாம் வளர்ச்சி அட...

கனவைத் துரத்தியவள் ருக்மாபாய் - Rukhmabhai

Image
கல்வி ஒரு பெண்ணுக்கு எவ்விதம் மனஉறுதியைத் தருகிறது, போராடும் குணத்தைத் தருகிறது என்பதற்குத் தகுந்த தரவாகத் திகழ்ந்த ருக்மாபாயின் பிறந்தநாள் இன்று... யாரிந்த ருக்மாபாய்? நமது பள்ளிப்பாடங்களில் அலங்கரித்து எழுதப்பட்டுள்ள - 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முரசிட்டுக் கூறிய பால கங்காதர திலகர், இந்தப் பெண்ணின் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றார் என்றால் நம்புவீர்களா? நமது பள்ளிப்பாடங்கள் ஒருதலைப்பட்சமானவை என்பதை உணர வைத்த தருணம், ருக்மாபாயைப் பற்றி படித்த நேரங்கள்... ருக்மாபாய், ஜனார்த்தன் பாண்டுரங்கர் - ஜெயந்திபாய் ஆகியோருக்குப் புதல்வியாய் 22 நவம்பர் 1864 அன்று பிறக்கிறார். இவரது எட்டாவது வயதில் பாண்டுரங்கர் இறக்க - அவர் பெயரில் இருந்த சொத்து அனைத்தையும் ருக்மாபாய் பெயரில் மாற்றி எழுதுகிறார் ஜெயந்திபாய். வீட்டில் இருந்த படியே, இலவச சர்ச் மிஷன் நூலகத்தின் புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்கிறார் ருக்மா. தனது 11வது வயதில், தாதாஜி பிகாஜி என்ற 19 வயது இளைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தாதாஜியின் அன்னை சிறிது காலத்தில் இறந்துவிட, தாதாஜி அவரது தாய்மாமனான நாராயண் வீட்டுக்குச் ச...