Posts

திறமை மதியா சமூகம் - Subash Mukhopadhyay

Image
சுபாஷ் முகோபாத்யாய்... இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா...? இவர் யாரென அறிந்திருக்கிறோமா...? உலகம் இன்றும் பல திறமை கொண்ட இரத்தினங்களைக் குப்பையில் கொட்டி வீணடித்துக் கொண்டிருக்கிறது. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கைக்கு திமிர் எனப் பெயர் சூட்டி - வதைத்துக் கொல்லத் திட்டமிட்டுக் காத்திருக்கும் இந்த உலகால் கொலை செய்யப்பட்ட ஒரு மருத்துவனின் கதை இது. சுபாஷ் முகோபாத்யாய் (1931 - 1981) சுபாஷ் முகோபாத்யாய் (Subash Mukhopadhyay) 16-01-1931 அன்று பீஹார் மாநிலம் ஹலாரிபாக் எனுமிடத்தில் பிறந்தார். படிப்பில் நன்கு விளங்கிய சுபாஷ், கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தார். 1955 ல் மருத்துவப் பட்டம் பெற்ற சுபாஷ், பட்டமேற்படிப்பைக் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அவர் எடுத்தத் துறைகள்: இனப்பெருக்க உடலியல் (Reproductive Physiology) மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியல் (Reproductive Endocrinology).  சுபாஷ் மருத்துவத்துறையில் அதுவும் தான் பயின்ற இனப்பெருக்க உடலியல் - உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து - மருத்...

மனிதம் போற்றிய கணியன் - Kaniyan who praised humanity

மனிதம் போற்றிய கணியன் ஒரே பாடலில் - செய்யுளில் உலக ஒற்றுமை - சகோதரத்துவம் - வாழ்வின் நிதர்சனம் - இயற்கை நியதி - புகழ்ச்சி இகழ்ச்சி இல்லா நடுநிலைமை - மனிதம் இவ்வளவையும் கூற முடியுமா? எங்கள் சங்கக் கவி கணியன் பூங்குன்றனாரால் முடிந்திருக்கிறது. புறநானூற்றில் 192ஆம் செய்யுளாய்த் தொகுக்கப்பட்ட - கணியன் பூங்குன்றனாரால் பாடப்பட்ட "யாரும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செய்யுள் நான் மேற்கூறிய அனைத்தையும் தன்னுள்ளேக் கொண்டுள்ளது. புறநானூற்றில் பல செய்யுள்கள் மன்னனின் படைபலம் பற்றியோ - போர்திறம் பற்றியோ - ஈகைத்திறன் பற்றியோ இருக்க, யாரையும் புகழாமல் அதே நேரம் யாரையும் இகழாமலும், வாழ்க்கை நியதியையும், நிதர்சனத்தையும் கூறிய எங்கள் கவிக்கோமான் கணியன், பரிசிலுக்குப் பாடல் பாடியதில்லை என்பது கூடுதல் செய்தி. முக்காலமும் - எக்காலமும் உலக ஒற்றுமைப் போற்றும் இச்செய்யுளின் முதல் வரி ஐ நா சபையில் பொறிக்கப்பட்டுள்ளது.  இதோ அவர் பாடிய செய்யுளும், அதை எளிதாய் எழுத நானெடுத்த முயற்சியும்...  புறநானூறு (செய்யுள் - 192) பாடியவர் : கணியன் பூங்குன்றனார் திணை : பொதுவியல் திணை துறை : பொரு...

அன்னை தெரசா - Mother Teresa

Image
அன்னை தெரசா இவருக்கு அறிமுகம் சொல்ல அவசியமில்லை. அமைதியின் உருவாய் - கருணையின் வடிவாய் - பலர் வாழ்வின் விடிவாய் விளங்கிய எம் அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று.  இன்றைய மெசிடோனியா, அன்றைய ஒட்டாமான் பேரரசில் ஸ்கோப்யே (Skopje) எனுமிடத்தில் 25.௦8.1910 அன்று பிறந்தார் தெரசா. பெற்றோர் இட்ட பெயர் ஏக்னெஸ் கோண்ட்சே போயாட்ஸ்யூ (Albanian: Anjeze.Gonxhe Bojaxhiu, கோண்ட்சே என்றால் அல்பேனிய மொழியில் சிறுமலர் எனப் பொருள்) தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்த ஏக்னெஸ், தனது சிறு வயதிலேயே மதநெறி வாழ்வையும், கிறித்துவத் துறவையும் பின் தொடர விழைந்தார்.  ஏக்னெஸ் கோண்ட்சே போயாட்ஸ்யூ - சிறுவயதில் 1928 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஏக்னெஸ், அயர்லாந்து ராத்பர்ன்ஹாமில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் (Loretto Sisters) எனும் அமைப்பில் இணைந்தார். அங்கு ஆங்கிலம் கற்ற ஏக்னெஸ் 1929 ஆம்வருடம் இந்தியாவுக்கு வந்தார். டார்ஜிலிங்கில் கிறித்துவத் துறவறப் புகுநிலைப் பயிற்சியில் (novitiate) கலந்து கொண்ட  ஏக்னெஸ் 1931ம் வருடம் மாடக்கன்னியாகக் உறுதிமொழி ஏற்றார். ஏற்கனவே, ஏக்னெஸ் எ...

வானியலின் சிறந்த நாள் - Great day for astronomy

Image
வானியலின் சிறந்த நாள் வானியல் வரலாற்றில் ஆகச்சிறந்த நாள் இன்று. ஆகஸ்ட் 25. இரு பெரும் நிகழ்வுகள்... 25.08.1609 - இத்தாலிய அறிவியல் மேதை தான் உருவாக்கியத் தொலைநோக்கியைக் கொண்டு அறிவியல் உலகிற்கு வானியல் செயல் விளக்கம் செய்த நாள். 25.08.2012 - நாசாவின் வாயேஜர் 1 (voyager 1) விண்கலம் சூரியப் பரிதியைத் தாண்டி மீனிடைப் பரப்பில் பயணித்த நாள். இந்த இரு நிகழ்வுகளில் எதைப் பற்றி எழுதலாம் என யோசிக்கையில் இரண்டையும் எழுது என உள்ளம் கூற உவகை கொண்டு ஆரம்பிக்கிறேன். 1. கலீலியோ:  கலீலியோ கலீலி இத்தாலி நாட்டில் பிசா நகரத்தில் 15.2.1564 அன்று பிறந்தவர் கலீலியோ. சிறுவயது முதல் கிறித்துவ மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட கலீலியோ பாதிரியாராகப் போவதாக தந்தையிடம் கூற - தந்தையோ இவரை மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டார். பிசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த இவர் தன் கவனத்தை கணிதப் பாடத்தில் திருப்பலானார். மருத்துவப் படிப்பைப் பாதியில் நிறுத்தி கணிதம், இயற்பியல் குறித்து கற்கலானார்.  வெப்பமானி, திரவவியல் தராசு (Hydraulic Balance), தொலைநோக்கி (Telescope) என அறிவியலு...

சிவராம் ராஜ்குரு - Shivaram Rajguru

Image
சிவராம் ராஜ்குரு ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்து - தனது பதின்ம வயதுகளில் நாட்டில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறையையும் கண்டு வேதனையுற்று - தனது 22ஆம் வயதில் நாட்டுக்காக தன் இன்னுயிரையும் ஈந்த இளைஞன் சிவராம் ராஜ்குருவின் பிறந்தநாள் இன்று. என்னுடைய பள்ளிக்காலத்தில் - நாடகத்தில் நானிட்ட வேடங்களில் ஒன்று ராஜ்குரு. அப்போது கூட ராஜ்குருவை பகத் சிங்கின் உடன் வரும் கதாபாத்திரமாகவேத் தெரியும். ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொருக்குள்ளும் ஒரு நெருப்பு இருந்த்தையும் - தாய்நாட்டின் விடுதலையை மட்டும் எண்ணிப் பல விதத்தில் போராட எத்தனித்த துணிச்சலையும் சரிவரப் பதிவு செய்ய மறந்த வரலாற்றையும், நினைத்துக் கொள்ள மறந்த நம்மையும் நொந்து கொள்வோம்.  சிவராம் ராஜ்குரு மஹாராஷ்டிரா மாநிலம் கேத் எனும் இடத்தில் 24 ஆகஸ்ட் 1908 அன்று பிறந்தவர் சிவராம் ராஜ்குரு. சிறுவயது முதல் ஆங்கிலேயரின் அடக்குமுறை கண்டு வளர்ந்த ராஜ்குரு, தன் கல்லூரிக் காலத்தில் தன்னைப் போல் நாட்டுக்குப் போராடத் துடிக்கும் சக இளைஞர்களான பகத் சிங், சுக்தேவ் தாபர் போன்றோருடன் இணைந்தார். லாகூரின் நேஷனல் கல்லூரியில்...

ராதா கோபிந்த கர் - RG Kar

Image
ராதா கோபிந்த கர்  மருத்துவம் கொண்டு காசு பார்க்க நினைக்கும் இந்நாளில் - இந்நாட்டில், இவர் போன்ற சிலரும் இருந்திருக்கின்றனர் என்றெண்ணும்  போது திரு. ராதா கோபிந்த கர் மீது மரியாதை பல மடங்கு கூடுகிறது. யார் இவர்? என்ன செய்தார் இவர்? தான் கற்ற மருத்துவக் கல்வி இந்த நாட்டில் பலரும் கற்று - நாடு நோயின்றி வாழ நினைத்த ஒரு திருமகனின் - திரு. ராதா கோபிந்த கரின் பிறந்த நாள் இன்று.  23 ஆகஸ்ட் 1852 - மேற்கு வங்காளம் சாண்ட்ராகாச்சி எனும் ஊரில் தேவதாஸ் கர் என்ற மருத்துவரின் மகனாகப் பிறந்தார் ராதா கோபிந்தா. மருத்துவரின் மகன் என்பதால், வசதிக்குக் குறைவில்லை. கல்வி கற்பதில் தடையுமில்லை. பள்ளிப் படிப்பில் நன்கு கற்றுத் தேர்ந்த கோபிந்தா தந்தையைப் போல் மருத்துவம் பயில விழைந்தார்.  நுழைவுத்தேர்வில் வென்று கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ராதா கோபிந்தா, மருத்துவக்கல்லூரியில் ஆங்கிலேய மாணவர்களால் இந்தியமாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்ச உணர்வு - அதைக் கண்டும் காணாத ஆங்கிலேய மேலாண்மை போன்றவை கண்டு வருந்தினார். நாட்டின் நிதர்சன நிலை அவரின் தேச உணர்வையும் - தமக்குப் பி...

மெட்ராஸ் நாள் - Madras Day

Image
மெட்ராஸ் நாள் பல முகங்கள் - பல நிறங்கள் - சில குறைகள் இருந்தாலும் எந்நாளும் இளமையோடும் புதுமையாகவும் என்னை வியப்பில் ஆழ்த்தும் என் சென்னை மாநகரம்.  நிற்கக் கூட நேரமில்லாமல்  ஓடும் மனிதர்கள் -  இருப்பினும் ஏழு மணிக்குக் கிளம்பி  ஒன்பது மணி அலுவலகம் சேர்வார்.  தினமும் இதுவே வாடிக்கை எனினும்  குறையாய் சொல்லமாட்டார்.  முதல் வாய்ப்புக்கு வாய்ப்புத் தேடி  வந்த யாரும் நொந்ததில்லை.  என் சென்னைக்கு இணை இங்கு இல்லை.  - கணபதிராமன்   இன்று இந்தப் பதிவிற்குக் காரணம் பலருக்கும் தெரிந்ததே. இன்று மெட்ராஸின் பிறந்த நாள். - 377வது பிறந்த நாள்.  தம்மார்ல வேங்கடபதி எனும் விஜயநகர அரசரிடம் இருந்து பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் எனும் இரு பிரிட்டிஷ்காரர்கள் தற்போது ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் பகுதியை 1639 ஆம் ஆண்டு வாங்கிய நாள் இன்று. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி இந்திய நாட்டின் முதல் மாநகராட்சியாய் 1688 ஆம் ஆண்டு உருவாகியது. உலக வரிசையில் லண்டனுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மாநகராட்சி ...