என்னைப்போல் ஒருவன் - குறள் கதை
என்னைப்போல் ஒருவன்
ஒரு காலத்தில் பூங்கா நகரம் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருந்த பெங்களூரின் ஒயிட்பீல்ட் சாலையின் போக்குவரத்து நெரிசலின் நடுவே எனது காரும் இருந்தது. என்னதான் காற்றுப்பதனி குளிர்க்காற்றை முகத்தில் அறைந்தாலும், வீணாகும் ஒவ்வொரு நொடியும் என்னுள்ளே பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. 'எங்கிருந்துடா இத்தனை பேரு வந்தீங்க?' என்று மனம் ஒரு புறம் சொல்லிக் கொண்டிருக்க, அதுவே மறுபுறம் 'டிஎல்லா இருந்த வரைக்கும் பைக்ல தானே வந்த, மேனேஜர் ஆனதும் கார் வாங்குனல்ல, உனக்கு இது வேணும்' என்றது. அலைபேசியை எடுத்து ஜனாவை அழைத்தேன். இரு ட்ரிங்களுக்குப் பிறகு, அழைப்பை எடுத்த ஜனா "இளங்கோ, சொல்லுங்க" என்றார்.
"ஜனா, நான் செம்ம ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன். Project testingலேந்து வந்துடுச்சா? Evening clientகிட்ட பேசணும். தெரியும்ல"
"நான் நேத்தே testing teamக்கு அனுப்பிட்டேன். நான் followupனு கேட்டா ஏதோ மாமியாரைப் பாத்த மருமகளைப் போல மூஞ்சக் காட்டுறாங்க"
சிரித்துக் கொண்டே, "நான் பாத்துக்குறேன், ஜனா" என்று அழைப்பைத் துண்டித்த நொடி, அலைபேசி திரையில் மின்னஞ்சல் அறிவிப்பு வந்து நின்றது. அதைத் தள்ளிவிட்டு, testing teamல் இருக்கும் செந்திலுக்கு அழைத்தேன்.
"என்ன இளங்கோ, இப்பத்தான் மெயில் போட்டேன், உடனே அடிக்குறீங்க, பாத்துட்டீங்களா?"
"இல்ல, செந்தில், ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன். இன்னும் வரவே இல்ல, ஆமா, project தேறுமா, testing OK தானே?"
"மெயில் பாத்திருந்தா, நீங்க கால் செஞ்சிருக்கத் தேவையே இருந்திருக்காது. ஏன் ஜனா இப்படி ஆனான்னு தெரியல. Such a great talented fellow, இந்த projectல ஜனா தான் வேலை பாத்தான்னு என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல. ஏதோ மனசே இல்லாம வேல பாத்த மாதிரி இருக்கு. Sorry to say this, இளங்கோ"
"ஓகே, செந்தில். நான் ஜனாகிட்ட பேசுறேன். மெயில் அவனுக்கு cc இருக்குல்ல?"
"இருக்கு, இளங்கோ"
"Thanks செந்தில்"
அழைப்பைத் துண்டித்ததும், எங்கிருந்து கலைந்ததோ, போக்குவரத்து சீராக, அடுத்த ஐந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்திருந்தேன். 6வது தளத்தில் இருந்த அலுவலகத்தில் நுழைந்த நான் நேராய் ஜனார்த்தனின் இடத்திற்குச் சென்று, "ஜனா, என் கேபினுக்கு வா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். எனது அறையில் நுழைந்து எனது கணினியைத் துவக்கிய போது, கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் ஜனா.
"வா, ஜனா, sit down"
"இளங்கோ, செந்தில் மெயில் பாத்தேன். எல்லாமே சரி செஞ்சுடுறேன். I don't know how this happened. Gimme two hours, I'll fix this, trust me" என்றான் ஜனா.
"Trust எல்லாம் இருக்கு, ஜனா. ஆனா, நீ வேற ஏதோ personal problemல இருக்கியா? You look so stressed these days, man. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு."
சில நொடிகள் அமைதியாக இருந்தான் ஜனா. "It's nothing, இளங்கோ, நான் போயி வேலைய முடிக்கிறேன்" என்று எழுந்தான்.
"ஜனா, sit down, நான் என்ன மத்த மேனேஜர் போலத் தான் என்னோட டீமை treat செய்யுறனா? I'm concerned. If you have any problem, just tell me, man, என்னால முடிஞ்ச அளவுக்கு ஏதாவது help செய்யுறேன், speak out, I say"
"என்ன சொல்றது, மனசு ஒன்னு சொல்லுது, மூளை வேற சொல்லுது. வாழ்க்கை software போல testing, debugging, fixingனு இருக்குறது இல்லல்ல, நடக்குற சிலதெல்லாம் irreversibleஆக இருக்கு" என்று நிறுத்தினான்.
"I'm all ears. இன்னும் நீ என்ன problemனு சொல்லத் தொடங்கவே இல்ல"
"எல்லாம் இந்த கல்யாணத்துக்கு அப்புறம் தான், இளங்கோ. யார் பக்கம் நிக்குறதுன்னு மனசு குழம்புது."
"எல்லா வீட்டுலயும் அப்படித்தான், ஜனா"
"இல்ல, ஏதோ நான் மட்டும் வேணும், ஆனா என் அப்பா அம்மா வேணாம்ங்குறது போல நடந்துக்குறா, ஆனா, அவ வீட்டுல இருந்து யாராச்சும் வந்தா மட்டும் விழுந்து விழுந்து கவனிக்குறது, சில நேரம் என்னையே அறியாம கோவப்ப்பட்டுக் கத்திடுறேன். நான் supportive ஆக இருந்த நேரத்துல பேசுனதெல்லாம் மறந்துடுவா, ஆனா, நான் கத்துனது மட்டும் நாளுக்கு நாப்பது தடவை சொல்லிக் காட்டுறா. I don't know what to do"
"ஏதோ உனக்கு மட்டும் இந்த problem இருக்குன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா, ஜனா?"
"...."
"இது நம்ம society நம்ம மேல குடுக்குற pressureனால நடக்குறது. இப்ப சொல்றப்ப கூட, என் அப்பா, அம்மா, அவங்க வீட்ல இப்படித் தானே சொன்ன? ஏன், உன் மனைவியோட அப்பா அம்மா உனக்கு மாமா, அத்தை இல்லையா?"
"அப்ப நான் தான் problemஆ?"
"இல்ல, அதெப்படி நான் சொல்ல முடியும், ஜனா, இங்க குடும்பம் அப்படிங்கிற system அவ்ளோ கடினமானதாத் தான் இருக்கு. Very complicated. திடீர்னு ஒருத்தன் கையில் புடிச்சுக் குடுத்து, இவன் தான் உன் குடும்பம்னு சொன்னா, அதை அவங்க மனசு ஏத்துக்கிறதுக்கு எவ்ளோ தடுமாறும்னு நாம புரிஞ்சுக்க மறுக்கிறோம். இப்படித்தான் எப்பவும் நடந்துட்டு இருக்குன்னு அவங்களை அமைதியாக்க முயற்சி செய்யுறோம். ஆனா, சிலர் இவர்களும் நம்ம குடும்பம்னு உணர்வதற்கு ஆகுற காலத்துக்குள்ள மொத்த உறவுகளும் அடிச்சு, இனிமே சேரவே முடியாதுங்குற எடத்துக்குப் போயிடுறாங்க."
"என்னென்னமோ சொல்றீங்க, இளங்கோ, இப்ப நான் என்ன செய்யணும்?"
"உங்க மனைவி என்னெல்லாம் செய்யக்கூடாதுன்னு நெனக்கிறீங்களோ, அத நீங்க அவங்களுக்குச் செய்யக் கூடாது."
"புரியல"
"முதல்ல அவங்களோட நம்பிக்கையச் சம்பாதிங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆகி எவ்ளோ ஆண்டாச்சு?"
"Two and half years"
"இதுல எந்த functionனு இல்லாம எத்தனை தடவை உங்க மாமனார் வீட்டுக்குப் போயிருக்கீங்க?"
"...."
"நெனச்சேன். அவங்க எத்தனை தடவை இங்க உங்களைப் பாக்க வந்திருக்காங்க?"
"அவங்க தான் இவளுக்கு சளி புடிச்சாக் கூட வந்திடுறாங்களே?"
"பாருங்க, ஜனா. என்கிட்டயே இப்படி பேசுறீங்க, உங்க மாமா, அத்தைகிட்ட எப்படி பேசுவீங்க, அவங்க பொண்ணை உங்ககிட்ட கொடுத்துட்டதால அவங்க உங்க குடும்பத்துக்கு அடிமையும் கிடையாது. கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்காக உங்க மனைவி அவரோட பொண்ணுன்னு இல்லாம போயிடுமா? In fact, you also became their family. You should feel them as your family and she should feel your parents as her family. அப்படி இருந்தா தானே எல்லாம் வாழ்க்கை நல்லாருக்கும். ஆனா, அது தானா உணரணும்."
"ஆனா, அவ அப்படி நெனக்கலயே"
"நீங்க?"
"...."
"ஜனா, ஒரு relationshipங்கிறது love and trust based ஆ இருக்கணும். கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிற ஒரே காரணத்துனால namesakeஆ இருக்கக் கூடாது, சளி புடிச்சாக் கூட வந்திடுறாங்கன்னு சொல்றியே, சளி புடிச்சா உன்கிட்ட சொல்லாம ஏன் அவங்க அம்மாகிட்ட சொல்றாங்க? சரி, வந்தவங்ககிட்ட எத்தனை தடவை முகம்பாத்து சிரிச்சுப் பேசிருக்கீங்க?"
"என்னோட parentsகிட்டயும் அப்படித்தானே அவளும் நடந்துக்குறா"
"இதான் problem, ஜனா. திடீர்னு ஒரு பொண்ணை அவங்க வீட்டுலேந்து பிரிச்சுக் கூட்டி வந்து இருக்கச் சொல்றோம். அந்தப் பொண்ணை வீட்டுல இருக்க எல்லா வேலையும் செய்யச் சொல்றோம். ஆனா, அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க மட்டும் மாட்டோம். இல்லயா? நீயே இந்தக் கம்பெனில வந்து சேரும் போது, பழைய கம்பெனிக்கும், இங்கயும் உள்ள working environment difference பாத்து தனியா அமைதியாத் தானே இருந்த? First, win her trust. அவ உங்க அப்பா அம்மாக்கு மதிப்பு கொடுக்காம கொடுமை செய்யுறான்னு சொல்றீங்க, ஆனா, நீங்களும் அதையே தான் செய்யுறீங்கன்னு அவங்க நினைக்குற மாதிரி நடந்துக்கிட்டா எப்படி ஜனா?"
சில நேரம் அமைதியாக இருந்த ஜனாவிடம், "ஜனா, இப்படி செய்யுறதால உன் அப்பா, அம்மாவ விட்டுக் கொடுக்குறதாவோ, இந்த ego clashல தோத்துப் போறதாகவோ நெனக்காதே, you are winning your life. Very few people could do that. ஆனா, உடனே எல்லாம் சரியாகிடும்னும் நினைக்காதே, முன்னாடி சொன்னது தான், உங்க மனைவி என்னெல்லாம் செய்யக்கூடாதுன்னு நெனக்கிறீங்களோ, அத நீ அவங்களுக்குச் செய்யக் கூடாது. ஓகேயா?" என்றேன்.
"சரி, I'll try. ஏதோ கொஞ்சம் தெளிவாகி இருக்கு. Thanks, sir."
"ஏற்கனவே சொல்லிருக்கேன்ல, நம்ம டீம்ல இந்த sir சொல்றதெல்லாம் வேண்டாம்"
"ஓகே, இளங்கோ, ஒரு சின்ன obligation"
"என்ன சொல்லு ஜனா?"
"என்னோட மாமனார் வீட்டுக்குப் போகணும், ஒரு மூனு நாள் லீவ் கிடைக்குமா?" என்ற ஜனாவை முறைக்க, "முதல்ல இந்த project coding முடிக்கிறேன், அப்புறமா project family" என்று எழுந்தான் ஜனா. அவனைப் பார்க்கும் போது, ஏதோ சில ஆண்டுகளுக்கு முன், என்னைப் பார்ப்பது போலவே இருந்தது.
- முடிவிலி
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான். (206)
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: தீவினையச்சம்
பிறர் தனக்குச் செய்யக் கூடாது என்று நினைக்கும் தவறுகளை நாம் பிறர்க்கும் செய்யக் கூடாது.
சிறப்பு 👌
ReplyDeleteமிகச் சிறப்பான பதிவு தோழர்
ReplyDelete