Posts

Showing posts from 2018

பயணம் - குறள் கதை

Image
பயணம் என்ன தான் கை நிறைய காசு, வங்கியில் பணம், கடன் அட்டை இப்படின்னு ஆயிரம் வசதிகள் வந்தாலும், மனசு 'அடுத்து என்ன? அடுத்து என்ன?'ன்னு கேட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த மாதிரி ஒரு நேரத்துல இந்த தேடல் உணர்வு என்னுடைய இயல்பான 9 - 5 சுழற்சி வாழ்க்கையிலேந்து ஒரு சின்ன ஓய்வு எடுத்துட்டு, எங்கேயாவது போன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. நான் என் வீட்டோட வாசலின் படியில் உட்காந்திருந்தேன். என்னைத் தினமும் அலுவலகத்துக்குக் கூட்டிட்டுப் போகும் என் நண்பன், அவனோட பெரிய கண்ணை இமைக்காம என்னையே பாத்துட்டு இருந்தான். நான் அவனை செம்மையா ஓட்டுவேன். சில நேரம் வாழ்க்கையில ஏற்படுற வெறுப்பு, யார் யார் மேல வர்ற கோவம் எல்லாத்துக்கும் என்கிட்ட அடி வாங்குவான். ஆனா, ஒருமுறை கூட என்னைக் கைவிட்டதில்லை. எதிர்த்துப் பேசினது கூட இல்லன்னா பாத்துக்கோங்க. ஆனா, இந்த முறை பார்வையாலேயே 'என்னடா செஞ்சுகிட்டு இருக்க? கிளம்புடா...'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.  ஓ... உங்ககிட்ட நான் யாருன்னே அறிமுகப்படுத்திக்கல பாருங்க... நான் செல்வக்குமரன். சென்னையில ஒரு CGI நிறுவனத்துல Matte Artist மற்றும் Lead Pr...

போலீஸ் தாத்தா - குறள் கதை

Image
போலீஸ் தாத்தா பாலமலையின் மேலே கடந்து போன கருமுகில் எல்லாம் இன்னும் நகர்ந்து போய், கர்நாடகத்தில் நல்ல மழை பொழிந்ததால், அதிகப்படியான தண்ணீரைத் திறந்து விட்டிருந்தது கர்நாடகம். நாம் பேசும் மொழி, மாநிலம் ஆகிய வேறுபாடுகள் அறியாப் பொன்னியானவள், மேட்டூர் அணையில் தேங்கி, சிறிது ஓய்வெடுத்து 16 கண் மதகுகள் வழியே வழிந்து ஓடி வந்து கொண்டிருந்த வழியில் 16 கிலோமீட்டர் தள்ளி கிழக்குக்கரையில் இருந்தது கருப்பண்ணனின் சிற்றூர், மொலப்பாறை. ஊரில் நுழையும் போதே பச்சை விரித்த வயல்களும், உயர்ந்த தென்னைகளும் வரவேற்றன. ஊருக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த பேருந்து நிறுத்தம் வரை கேட்ட எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், ஊரில் மாரியம்மன் திருவிழா நடப்பதைச் சொல்லிக் காட்டியது.  கருப்பண்ணன் அந்த ஊரின் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக இருந்தார். காவல்துறையிலும், அந்த வட்டாரத்திலும் நல்ல பெயரை எடுத்திருந்தார். இதற்குக் காரணம், யாராய் இருந்தாலும், இனிமையாகப் பழகக்கூடிய அவரது குணம் தான். ஊரின் சிறுவர்கள் கூட, போலீஸ் தாத்தா என்றழைக்கும் அளவுக்கு அன்பான மனிதர். அப்படி அழைக்கும் சிறுவர்களிடம், "ஏலேய், ...

புன்னகை - குறள் கதை

Image
புன்னகை அடுக்ககங்கள்... எல்லை பெருகி வரும் பெருநகர வாழ்வில் பெருகி வரும் ஒன்று. ஒரு முகவரி எனினும் முகம் பார்க்காத பல முகங்கள், பார்த்தாலும் பொருளில்லாப் புன்னகைக்குக் கூட நேரமில்லாப் பலரைத் தன்னுள் அடைத்திருக்கும் இடம். இது போன்ற ஒரு அடுக்ககத்தில் தான் நானும் இருக்கிறேன். என் மகன் பழனியின் வீடு... வேலைக்குச் செல்லும் மகனும், மருமகள் செல்வியும், ரெசிடென்சியல் பள்ளியில் இருந்து மாதம் ஒரு முறை வீட்டுக்கு வரும் பேரன் செழியனும், பணியில் இருந்து ஒய்வு பெற்ற நானும், போன ஆண்டு இறந்து போன என் மனைவி மீனாளும் என அனைவரும் ஒற்றுமையாக ஒரு கூரையில் இருக்கலாம் என நினைத்து வாங்கிய வீடு இது. இதற்கு முன்பு வாடகை வீட்டில் இருந்த போது, என்ன தான் நமது வீடு போல் நாம் பார்த்துக் கொண்டாலும், வீட்டின் உரிமையாளரின் சில கட்டுப்பாடுகளுக்கும், சில பேச்சுக்களும் எனது மகன் மற்றும் மருமகளின் மனதை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது. அந்த காயங்களின் வலியை விட கடன் சுமை ஒன்றும் பெரிதல்ல என அவர்கட்குத் தோன்ற வாங்கிய வீடு இது. மூன்று படுக்கை அறைகளுடன் பெரிய வரவேற்பறை என 1300 சதுர அடியில் பரந்திருந்தது வீடு. பனிரெண்...

பாலுவாகிய நான் - திருக்குறள் கதை

Image
பாலுவாகிய நான் தெளிந்திருந்த வானத்தில் வெண்முகில் திட்டுதிட்டாய் விரவிக் கிடக்க, அப்போது முளைத்திருந்த விடிவெள்ளியின் மஞ்சள் கதிர்கள் அந்த முகிலின் ஒரு புறத்தை மஞ்சள் நிறம் கூட்டியிருந்த வானில் இருந்து கீழிறங்கி நான் இருக்கும் வீட்டின் கொல்லைப்புறத்தின் புல்வெளியில் அமர வந்த வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்தி விளையாடி களித்துக் கொண்டாடி மனம் திளைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கூட எனது செவி, வீட்டில் இருந்து சிறு குரலுக்குக் காத்து கொண்டிருந்தது. அவர்கள் எனக்கென்று ஒரு பெயர் வச்சிருக்காங்க. என்ன பொருளுன்னெல்லாம் தெரியாது. ஆனால், 'பாலு' என அவர்கள் கூப்பிட்டா, எங்கிருந்தாலும் ஓடிப் போயி அவங்க முன்னாடிப் போயி நிப்பேன்.  நான் இந்த வீட்டுக்கு வந்தபோது நான் கண்ணே திறந்து பார்க்கலைன்னு சொல்ல கேட்டிருக்கேன். ஆனால், இந்த வீட்டில் தான் முதலில் அன்புன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அவங்களோட தொடுதல்ல - தூக்கிக் கொஞ்சுதல்ல - எனக்கு உணவு கொடுக்குறதுல இன்னும் நெறைய... முதல்ல ரெண்டு பேர் தான் இருந்தாங்க... எனக்கு ஒரு பெயர் தானே... ஆனா, அவங்களுக்கு ரெண்டு பெயர் இருந்துச்சு, ...

மகிழ்ச்சி - குறள் கதை

Image
மகிழ்ச்சி கார்காலத்தின் காலைப்பொழுதில் தூறலினால் தன் வீட்டுத்தோட்டத்தின் மரங்களின் பசுமை நிறம் இன்னும் மெருகேறியிருந்ததைத் தன் வீட்டு மாடியிலிருந்த கண்ணாடியிட்ட சாளரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார், கதிரேசன். மழையின் இன்பக்குளியலில் நனைந்திருந்த மரங்களும், அந்த மரங்களில் இன்னிசை படித்துக் கொண்டிருந்த மைனாக்களும் அவர் மனதில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டிருந்தன. நேற்றை விட இன்று இரு ரோஜா மலர் மொட்டுகள் மழையில் நனைந்து முகிழ்ந்திருந்தன. தன்னை மறந்து நின்று கொண்டிருந்த கதிரேசனை நோக்கி கையில் பேசியை எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி. "என்னங்க... குமரன் சார் லைன்ல இருக்காரு..." பேசியை வாங்கிய கதிரேசன், "குமரன், நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் நலமா? ஆபீஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று கேள்விகளை அடுக்கினார். கதிரேசன், நான்கு மாதங்களுக்கு முன் தான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, தான் பிறந்த ஊரில் கட்டிய மாடி வீட்டிலும், பின்னே அமைத்துள்ள எழில் கொல்லையிலும் தன் ஓய்வு வாழ்வை மகிழ்வோடு கழித்து வருகிறார். மறுமுனையில், குமரன் "எல்லார...

அமிழ்து - திருக்குறள் கதை

Image
அமிழ்து கானல் நீர் நிறைந்த பாலையின் மீது போடப்பட்டிருந்த 6 வழிச்சாலையில் நூற்றி இருபதில் காற்றைச் சீறிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த பிராடோ. உள்ளே 'நான் தேடும் செவ்வந்திப்பூவிது' என ராஜா பாடிக் கொண்டிருக்க, தனக்குப் பிடித்த பாடல் எனினும் அதில் மனமொன்றாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. அந்த பாலை நாட்டின் வடக்கு மூலையில் இருந்த எண்ணெய் நிறுவனத்தில் பராமரிப்பு பணி ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளன்.   பிராடோவை ஓட்டிக்கொண்டிருந்த சரவணன், வெற்றி அமைதியாக வருவதைக் கவனித்து, "என்ன மச்சான்... உனக்காகத் தான் இந்த பாட்டே போட்டேன்... என்னமோ சொல்லுவியே, என்கௌண்டரா?" "ப்ச்... கௌண்டர் பாய்ண்ட்..." "ஆங், அதே தான்... அதெல்லாம் இந்த பாட்டுல இருக்குன்னு சொல்லுவ, இப்ப  என்னடான்னா இப்படி உம்முன்னு வர்ற...?"  "மனசு சரியில்லடா... ஏதோ சரியில்லன்னு தோணுது..." "ஞே... என்னடா உளர்ற...?" என சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெற்றியின் போன் சிணுங்கியது. பாடலின் ஒலியளவைக் குறைத...

கற்பென்னும் திண்மை - குறள்கதை

Image
ஆசிரியர் குறிப்பு: குறள்மொழியின் முதல் கதையான 'அகர முதல' கதையின் மாந்தர்களைக் கொண்டும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. அந்த கதையைப் படிக்க :   bit.ly/2QxWH1M கற்பென்னும் திண்மை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 'பகவன்' முதற்றே உலகு " மாணவர்களின் குரல் காற்றில் ஓங்கி ஒலிக்க, மேடையில் இருந்த தலைமை ஆசிரியர் முதலான அனைவரும் கைத்தட்டல் பரிசளிக்க, என் தமிழ்ச்செல்வன் முகம் பெருமிதத்தில் மலர்ந்திருந்தது. அவன் என் தமிழ்ச்செல்வன் என்பதிலேயே என் மனமும் துள்ளிக் குதித்தது.  பள்ளியில் இருந்து நானும் தமிழும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, என் மனமோ காலத்தில் பின்னோக்கி நடைபோட்டது...  அப்போது தான் எனக்கும் தமிழுக்கும் மணமாகி இரு ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வுக்குப் படித்து கொண்டிருந்த நேரம். தமிழும் ஒரு பாடமாக இருந்ததால், அதில் ஐயம் நீக்க எனக்கு உதவியாய் இருந்தது தமிழ் தான். என்னுடைய தேர்விற்குப் படிப்பதற்காக, திருக்குறளைத் திருப்பிக் கொண்டிருந்த நேரம், ஒரு குறளில் என் கவனம் குத்திட்டு நின்றது. ...

நோன்பு - திருக்குறள் கதை

நோன்பு தீபாவலி என்றாலே பட்டாசு, புத்தாடை என்றிருந்த அந்த சிறுவயது நினைவு மனதில் ஓடிக் கொண்டிருந்தது. காலையிலேயே புதுத்துணியிலிருந்து பட்டாசு வரை படையலில் வைத்து கும்பிட்டு விட்டு, தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு, புத்தாடை போட்டு, புது முறுக்கு, சுழியத்தை எடுத்துக் கொண்டு, பட்டாசு வெடித்து யார் வீட்டு முன்னால் அதிக குப்பை சேருமென்று போட்டி போட்டு வெடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவயதில் எனக்குத் தெரியாது... ஒவ்வொரு தீபாவலியிலும், அம்மா சாப்பிடுவதே இல்லை என்று... லட்சுமி வெடி, குருவி வெடி, அணு குண்டு என எல்லாம் வெடித்து முடித்த பிறகு, கடைசியில் ஊசிப்பட்டாசுக்கு மாறி இருப்போம். அப்பா புதுவேட்டி வெள்ளைச் சட்டையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பார். தீபாவலி அன்றும் எங்களுக்குச் சமையல், புது பலகாரம், இதெல்லாம் போக நோன்புக்கு அதிரசம் என நாள் முழுதும் அம்மாவுக்குச் சமையலறையிலேயே நேரம் போகும். அம்மா கையில் ஒரு கயிறு கட்டியிருப்பாள். மஞ்சள் நூலில் சிகப்பு முடிச்சு போட்டது போன்ற கயிறு...  "என்னம்மா கயிறு இது...?" எனக் கேட்டா...