கண்ணதாசன் நினைவு நாள் - In memory of Kannadasan

ஆலங்காய் வெண்ணிலவை 
அத்'திக்காய்' காயச் சொன்னவன்
எத்திக்கும் தன் பாடல்களை மட்டும்
விட்டுவிட்டு சென்று விட்டான்...!

அர்த்தமுள்ள இந்துமதம் போல்
இயேசு காவியமும் படைத்தவன்
தானே காவியமாய் மாறிப் போனான்...!

எங்கேயும் எப்போதும் 
சங்கீதம் சந்தோஷம் 
எனச் சொன்னவன் சடுதியில் 
நம்மை துக்கத்தில் விட்டுப் போனான்...!

கண்ணே கலைமானே என
ஆராரோ பாடி 
நம்மைத் தூங்க வைத்தவன்
தானும் தூங்கிப் போனான்...!

வாழ நினைத்தால் வாழலாம்
என்று சொல்லிவிட்டு
ஏனோ வாழ்வைத் துறந்து போனான்...!

கவிஞனுக்கு இன்று நினைவு நாள்...

கவிஞர் கண்ணதாசன் (24.06.1927 - 17.10.1981)



Comments

  1. நீங்கா நினைவுகளை நினைவு படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka