திக்குதல் விழிப்புணர்வு நாள் - Stuttering Awareness Day
ஒருவர் கூற வரும் கருத்தை விட அதை எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தான் கூற வேண்டிய வார்த்தைகளை விழுங்கியோ, திக்கியோ சொல்வதை கேலி செய்தும், அவர் மனம் புண்படுவதைக் கண்டு மகிழ்ந்தும் இருக்கிறோம். இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இவ்வாறு அவரின் குறையை எள்ளி நகையாடுவது அவர் தன்னைத் திருத்திக் கொள்வதற்கே, அவர் நலனுக்கே எனக் கூறிக் கொள்வது. உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் (22 அக்டோபர்) இந்த திக்குவாய் பிரச்சினை என்பது, வார்த்தைகளின் முதலில் சிரமப்பட்டு ஆரம்பிப்பது, சொற்றொடரின் நடுவே விட்டு விட்டு பேசுவது, தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்ப திரும்ப சொல்வது, ஒரே சொல்லை சொற்றொடருக்கு நடுவே பலமுறை வேகமாக சொல்வது, பேசும்போது அர்த்தமற்ற அசைகள் (ஒலிகள்) எழுப்புவது (ஆ... ம்ம்... ஹ..), இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்குப் புதிதான மொழியைப் பழகும் போது, நிச்சயம் அனைவரும் திக்கி தான் பேசுவோம். இதற்கு காரணம், நாம் பேசும் போது நமது மொழியில் இருந்து புதிய மொழிக்கு மனதிற்குள் மொழியாக்