Posts

மெய்ப்புலனார் - குறள் கதை

மெய்ப்புலனார் ஊரின் நடுவே இருந்த அந்த ஆலமரத்து மேடையைச் சுற்றித் தான் அன்று ஊரே கூடி இருந்தது. ஆலமரத்தின் அடியில் ஊர்மக்கள் கூடுவது உள்ளூர் வழக்குகளுக்கோ, ஊராட்சிக் கூட்டத்துக்கோ தானிருக்கும். ஆனால் அன்று இந்தக் கூட்டத்துக்குக் காரணம் இந்த இரண்டும் அல்ல. "என்னய்யா, இது இம்மாம் நேரமா இவரச் சுத்தி நின்னுட்டு இருக்கோம். கண்ணத் தொறந்து கூட பாக்க மாட்றாரே." என்று கூட்டத்தில் ஒரு பெரியவர் குரல் கொடுக்க, அதுவரை அங்கு நிலவியிருந்த அமைதி விலகி, சலசலப்பொலி பரவியது.  தொடர்ந்து கொண்டிருந்த முனுமுனுப்புகளுக்கு இடையே இன்னொருவனின் குரல் சற்று உயர்ந்து, "ஏப்பா, கொஞ்சம் பேசாம இருங்கப்பா, அவர் கண்ணை மூடி உட்கார்ந்திருக்குறதப் பாத்தா, கும்பிட்டுட்டு இருக்காரு போல. இந்த நேரத்துல இப்படி சலசலன்னு கத்திட்டு தொல்லை செஞ்சோம்னா, எதாச்சும் சொல்லிடப் போறாரு, செத்த அமைதியா இருங்கப்பா" என்று கூற, சலசலப்பு சற்று உயர்ந்து அமைதி ஆனது.  சில நொடிகள் கழித்து, மூடிய விழிகளைத் திறந்த மெய்ப்புலனார், தன் இருக்கை கூப்பி, சூழ்ந்துள்ள அனைவரையும் வணங்கினார். சுற்றி நின்ற கூட்டத்தில் அவருக்கு ...

உன்னைப் போல - குறள் கதை

உன்னைப் போல -முடிவிலி இதுவரை மழை பெய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம், மேற்கில் கொஞ்சம் முகில்கள் விலக, மாலை நேரத்து இளவெயில் சாளரத்தின் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து சாளரத்தின் கம்பியைப் பற்றிய புறா ஒன்று 'க்குருகும்... க்குருகும்...' என்று நின்ற இடத்திலேயே சுற்றி வந்தது. "டேய், தம்பி மாறா, அந்தப் புறாவ வெரட்டுடா" என்று வரவேற்பறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. "அம்மா, அது என்னம்மா செஞ்சது? அது பாட்டு பாடிக்கிட்டு இருக்கு. அதை ஏன்மா வெரட்டணும்?" "Window, Balcony எல்லாம் கழிஞ்சு வச்சுட்டுப் போயிடுது, நீயா துடைக்கப் போற? கேள்வி கேட்காம வெரட்டுடா" என்று அம்மா சொல்லிக் கொண்டே அறைக்குள் வர, புறா தானாகவே பறந்து போயிருந்தது. "உங்களைப் பாத்தததும் அதுவே போயிடுச்சும்மா" என்றேன் மெதுவான குரலில். "ஆமான்டா, நான் அரக்கி, என்னைப் பாத்து பயந்து ஓடிடுச்சு. உன் வயசுல எல்லாரும் கல்யாணம் செஞ்சுட்டு, செட்டில் ஆகிட்டான். நீ என்னடான்னா என்கூட உரண்டை இழுத்துட...

யாரோ - குறள் கதை

யாரோ? - முடிவிலி 'யாத்ரிகன், க்ருப்யா த்யான் தீஜியே...' என்று தொடங்கி கால் மணி நேரம் முன்பு சொன்னதையே இம்மி பிசகாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தது தொடர்வண்டி நிலைய ஒலிப்பெருக்கி. ஏற்கனவே கையிலிருந்த அலைபேசியில் நேரத்தையும், வண்டி வராத தண்டவாளத்தையும் பார்த்துப் பார்த்து நான்கு மணிநேரம் கழிந்திருந்தது. இரவு ஓட்டல் அறையில் அலைபேசியில் charger cable செருகி, switch on செய்யாமல் உறங்கியதின் பலனாக, 10% என்று சிவப்பு மின்னிக் கொண்டிருந்தது அலைபேசியின் வலது மூலையில். நான் இருந்த நடைமேடையின் இரு மருங்கிற்கும் சென்று தேடியும் ஒரு charging point இல்லாதததை எல்லாம் பார்த்துவிட்டுத் தான் இப்போது இந்த இருப்பதிலேயே சுற்றி பான் பராக் கரை குறைவாக இருந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.  'Passengers attention please, train from Gorakhpur to thiruvananthapuram Train no 21551 raptisagar express is running late by 2 hours. the inconvenience caused is being deeply regretted.' இதுவரை இரண்டரை மணி நேரம் என்று சொல்லிக் கொண்டிருந்ததை இப்போது இரண்டு மணி நேரம் என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டி...

கருகிய சிறகுகள் - லிய்போவ் சிரோட்டா (Liubov sirota) தமிழாக்கம்

Image
கருகிய சிறகுகள் - லிய்போவ் சிரோட்டா ஈடுசெய்யவோ, நிலையைச் சரி செய்யவோ இயலாது, அந்த ஏப்ரலின் தவறையும், துயரையும். எங்கள் விழித்துக்கொண்ட உள்ளுணர்வின் கூன்முதுகுகள் வாழ்நாள் முழுதும் இந்த வேதனைச்சுமையைத் தாங்கியே ஆக வேண்டும். நம்புங்கள், முடியவே முடியாது, எங்கள் இழந்த வீடுகளின் துயர்தரும் வலியிலிருந்து மீண்டெழ, சரிகட்ட.  வலி எங்கள் துடித்திடும் இதயத்தில் என்றும் இருந்திடும், அச்சத்தின் நினைவுகளாய். அதோ, முள்ளாய்க் குத்தும் கசப்பினால் சூழப்பட்ட எங்கள் விந்தை நகரம் கேட்கிறது: அனைத்தையும் மன்னித்தும், உளமார நேசித்தும், ஏன் எக்காலத்தும் கைவிடப்பட்டுள்ளேன்? இரவு நேரங்களில், வெறுமை மூழ்கிய எங்கள் நகரம் விழித்துக் கொள்கிறது. அதோ, அங்கே எங்கள் கனவுகள் மேகம் போல அலைகின்றன. நிலவொளியால் சாளரங்களை ஒளிரச் செய்கின்றன. அங்கு மாறாத நினைவொடு மரங்கள் நிற்கின்றன. எங்கள் கைகளின் தொடுதலை நினைத்துக் கொண்டு. இனியும் தன்னிழல் தனில் நிற்க, சுடும் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, யாரும் இல்லையெனத் தெரிந்த அம்மரங்களின் வலி எப்படி இருக்கும்? இரவில் மரங்க...

புற்றுப்பாம்பு - குறள் கதை

Image
  புற்றுப்பாம்பு - முடிவிலி தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்   தோன்றலின் தோன்றாமை நன்று.        (236) (அதிகாரம் : 24 புகழ், இயல்: இல்லறவியல்) என்றும் இல்லாதது போல, இன்று பெங்களூரின் சாலைகள் நெரிசல் இல்லாமல் இருக்க விரைவிலேயே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன். உள்ளே நுழைந்த போது, எனக்கு முன்னரே ஜனா உட்கார்ந்திருந்தான்.  "Good morning, இளங்கோ" ஜனா முகம் மலர்ந்திருந்தது. "Good morning ஜனா, பெங்களூர் trafficல மாட்டாம office வந்துட்ட போல. செம மகிழ்ச்சியா இருக்க?" என்றேன். "அதெல்லாம் ஒன்னுமில்ல. ஆனா, குட் நியூஸ்." என்று சிரித்தான். முகத்தில் இன்னும் வாட்ஸ் வெளிச்சம் கூடியது. அவன் கூறாமலேயே நல்ல செய்தி என்னவெனத் தெரிந்தது. "Congrats, ஜனா, junior ஜனாவா?" என்று நான் சொல்ல, "Thanks இளங்கோ" என்றான் ஜனா. "ஹே, இன்னிக்கு நம்ம team எல்லாம் dinner போறோம். உன்னோட treat" என்று சொல்லிவிட்டு, என்னுடைய cabinக்குள் நுழைந்தேன். எனது கணினியைத் துவக்கி, எனது மின்னஞ்சலுக்குள் நுழைந்தேன். கண்ணனிடம் இருந்...

பகிர்வு - குறள் கதை

பகிர்வு பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. (இயல்: இல்லறவியல்; அதிகாரம் 23 ஈகை; குறள் எண்: 227) இருபது ஆண்டுகள், எப்படி ஓடியது என்று தெரியாமல் காலத்தின் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவனாய் இருந்த நான், மீண்டும் எங்கு தொடக்கத்தைத் தேடி வந்து நின்றிருந்தேன். அதே பெரிய கதவு. கதவின் இடது ஓரத்தில், உள்கதவு ஒன்றும் இருந்தது. அதைத் திறந்து உள்ளே சென்றேன். நிகழ்காலத்தில் இருந்து ஏதோ ஒரு கதவைத் திறந்து முற்காலத்திற்குச் சென்றது போல் இருந்தது. பதினோரு மணி மணியடிக்க, வகுப்பில் இருந்து ஓடிவரும் நூற்றுக்கணக்கான மாணவர்களுள் நானும் ஒருவனாக ஓடிவந்து இதே கதவின் கம்பி இடுக்கு வழி கைவிட்டு, பொக்கை வாய்ப்பாட்டியிடம் களாக்காய் வாங்கித் தின்றது கண் முன் வந்து போனது. ஜுன் முதல் வாரம் இன்னும் பள்ளி துவங்கவில்லை. ஏற்கனவே பள்ளியின் முதன்மை கட்டடத்தில் இருந்த தலைமை ஆசிரியர் அறை புதிதாகக் கட்டப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரைச் சந்தித்து, இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் பள்ளியில் படித்த மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். இன்முகத்த...

கடன் - குறள் கதை

கடன் "போய் கங்காஸ்நானம் பண்ணிண்டு இதை அப்படியே கரைச்சுடுங்கோ" என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, ஆடி மாதம் மடை திறந்த வெள்ளத்தைக் கொள்ளும் இடமாய் இருந்த கொள்ளிடம் ஆற்றில் கிடந்த முழங்கால் அளவு தண்ணீர் இறங்கிப் பெயருக்குக் குளித்துவிட்டு, நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. வெயிலில் நடந்து வந்ததினால் வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் சில நொடிகள் இருண்டன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், தலையும் சுற்றியது. வீடு இருண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றது. மூன்று மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் என் அப்பா, அம்மா இருவரையும் இழந்த அன்றே இந்த வீடு இருண்டு விட்டது. சில நொடிகள் தலையைப் பிடித்து நின்றேன். இந்த மூன்று மாத காலமாக, மனம் ஆற்றாமையில் பிடித்து வாட்டுகிறது. யாருமில்லாத் தனிமை ஒரு புறம், இருந்தவர்களின் இழப்பு, இழப்பு தந்த துயரம் என மனம் படும் இன்னலில் கடந்த சில மாதங்களாக நடைப்பிணமாகவே இருந்து வருகிறேன். வீட்டில் இருந்த வெறுமை என் கண்ணை மறைக்க, வெயிலில் வந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, சோர்ந்து அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிப் போனேன்.  ...