புற்றுப்பாம்பு - குறள் கதை


 புற்றுப்பாம்பு
- முடிவிலி




தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்  
தோன்றலின் தோன்றாமை நன்று.        (236)

(அதிகாரம் : 24 புகழ், இயல்: இல்லறவியல்)

என்றும் இல்லாதது போல, இன்று பெங்களூரின் சாலைகள் நெரிசல் இல்லாமல் இருக்க விரைவிலேயே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன். உள்ளே நுழைந்த போது, எனக்கு முன்னரே ஜனா உட்கார்ந்திருந்தான். 

"Good morning, இளங்கோ" ஜனா முகம் மலர்ந்திருந்தது.

"Good morning ஜனா, பெங்களூர் trafficல மாட்டாம office வந்துட்ட போல. செம மகிழ்ச்சியா இருக்க?" என்றேன்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல. ஆனா, குட் நியூஸ்." என்று சிரித்தான். முகத்தில் இன்னும் வாட்ஸ் வெளிச்சம் கூடியது. அவன் கூறாமலேயே நல்ல செய்தி என்னவெனத் தெரிந்தது.

"Congrats, ஜனா, junior ஜனாவா?" என்று நான் சொல்ல,

"Thanks இளங்கோ" என்றான் ஜனா.

"ஹே, இன்னிக்கு நம்ம team எல்லாம் dinner போறோம். உன்னோட treat" என்று சொல்லிவிட்டு, என்னுடைய cabinக்குள் நுழைந்தேன். எனது கணினியைத் துவக்கி, எனது மின்னஞ்சலுக்குள் நுழைந்தேன். கண்ணனிடம் இருந்து வந்த மின்னஞ்சல், இன்று தனக்கு regular medical checkup இருப்பதாகவும், அதனால், காலையில் வரமுடியாது எனவும் கூறியது. intercomல் ஜனாவுக்கு அழைத்து, "என்ன கண்ணன் வரலையா? நேத்து நல்லாத் தானே இருந்தான். ஏதாவது stressed ஆ இருந்தானா?" என்றேன்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல. he seemed okay."
 
"இருந்தாலும், அவன் ஒரு நாள் வரலன்னாலும், திக்னு ஆகிடுது ஜனா. hospitalலேந்து வந்ததும் எனக்கு inform செய், சரியா?" என்று பேசியை வைத்தேன். ஆறு மாசம் முன்னாடி நல்லா இருந்தவன், அடிக்கடி தலைவலின்னு hospital போனவனுக்கு brain tumour stage 1 னு தெரிய வந்தது. அதிலிருந்து, என்னுடைய குழுவில் இருக்கும் அனைவரும் அவனை நன்றாகக் கவனிக்கத் தொடங்கினோம். இன்னும் chemotherapy, radiation அளவுக்குப் போகவில்லை எனினும், தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வர வேண்டும். தனக்கென யாரும் இல்லாத அவனுக்கு எங்கள் குழுவே குடும்பமாய் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மனதில் ஓடிய கண்ணனைப் பற்றிய நினைப்பினை நிறுத்தி விட்டு, கணினியில் மூழ்கிய நேரம், எனது அலைபேசி சிணுங்கியது.

"Hello"

"Hello, Mr. இளங்கோ?"

"yes, speaking"

"சார், நான் MG hospitalலேந்து Dr. செல்வம் பேசுறேன். உங்க employee Mr. கண்ணன் எங்ககிட்ட தான் treatment எடுத்துட்டு இருக்காரு."

"கண்ணனுக்கு என்ன ஆச்சு, any problem?"

"நீங்க கொஞ்சம் hospitalக்கு வர முடியுமா?"

"டாக்டர் கண்ணனுக்கு ஒன்னும் இல்லையே? கண்ணன்கிட்ட போன் கொடுங்க"

"Please, நீங்க நேர்ல வாங்க, Mr இளங்கோ, கண்ணனுக்கு ஒன்னுமில்ல."

"okay டாக்டர். நான் உடனே வர்றேன்." என்று அழைப்பைத் துண்டித்து, எனது அறையில் இருந்து வெளியேறினேன். 

ஜனா, என்னைப் பார்த்து, "என்ன ஆச்சு, இளங்கோ? you look tensed, any problem?" 

"ஜனா, நீயும் வா, கண்ணனோட டாக்டர் போன் பண்ணிருந்தாரு. உடனே வரச் சொல்லிருக்காரு."


****

அடுத்த 20 நிமிடங்களில் MG மருத்துவமனையில் நுழைந்து, வரவேற்பில் கணிப்பொறியில் முகம் புதைத்திருந்த பெண்ணிடம், "டாக்டர். செல்வம், oncologistஐப் பாக்கணும். அவரு எனக்கு போன் பண்ணி வரச் சொல்லி இருந்தாரு" என்றேன்.

"your good name?"

"இளங்கோ"

"you can meet Dr. selvam at Third Floor." என்று கூற, நன்றி கூறிவிட்டு, லிப்டை நோக்கி ஓட்டமும், நடையுமாகச் சென்றோம். 
அறைக்கு வெளியே இருந்த நர்ஸிடம், "Dr. செல்வம்..." என்று ஜனா கேட்கத் தொடங்க, அவர் "நீங்க இளங்கோவா?" எனக் கேட்க, நான் தலையை அசைத்தேன்.  


"டாக்டர் உங்களுக்குத் தான் காத்துட்டு இருக்காரு. உள்ளே போங்க" என்று கதவைத் திறந்து விட்டார்.

உள்ளே நுழைந்து, "வாங்க, நீங்க கண்ணன் கூட வேலை செய்யுறவங்களா? உங்கள்ல யாரு இளங்கோ?" என்றார் செல்வம்.

"நான் தான் டாக்டர், கண்ணன் எங்க சார், அவனுக்கு எப்படி இருக்கு?"

"முதல்ல உட்காருங்க, இளங்கோ"

"thank you, doctor" இருவரும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம். 

"கண்ணன் உங்ககிட்ட எவ்ளோ நாளா வேலை பாக்குறாரு?"

"ஒரு ஒன்றரை ஆண்டு இருக்கும். இல்லையா ஜனா?"

ஜனா 'ஆம்' என்பது போல் தலையாட்ட, டாக்டர், "அவரு வேலையில சேரும்போதுக்கும், அவருக்கு கேன்சர்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவர்கிட்ட ஏதாவது difference தெரிஞ்சுதா?"

"டாக்டர், ஏன் இதெல்லாம் கேட்குறீங்க? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க please" என்று நான் கூற, "இப்பவும் சொல்றேன், கண்ணனுக்கு ஒன்னுமில்ல. ஆனா, நீங்க சொல்லப்போற பதில் ரொம்ப பயனுள்ளதா இருக்கப்போகுது. சொல்லுங்க" என்றார் செல்வம்.

"வந்த புதிதில் அவரோட performance எனக்கு நிறைவாகவே தெரியல. வேலையிலும் ஆர்வம் இல்லாம இருந்தான். திடீர் திடீர்னு தலைவலின்னு அடிக்கடி லீவ், permission எடுக்குறதுன்னு இருந்தான். அதுவே, அவன்மேல ஒரு blackmark ஆகி இருந்த நேரத்துல தான், அவனுக்கு cancerனு தெரிய வந்துச்சு. அதுலேந்தே எங்க team மட்டுமில்ல, எங்க companyல எல்லாருமே அவனை நல்லா care பண்ணத் தொடங்கிட்டோம்."

"ம்ம்ம், இதுவரைக்கும் வேலையில appreciation கிடைக்குறது போல நடந்துக்கிட்டது உண்டா?"

"இப்ப recentஆ நல்ல improvement டாக்டர்."

"இல்ல, கேன்சர்னு உங்களுக்குத் தெரியுறதுக்கு முன்னாடி கேக்குறேன்."

"அப்படி குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்ல. அதான் முன்னாடியே சொன்னேனே டாக்டர். சில நேரம் அவனை எதுக்கு டீம்ல எடுத்தோம்னு கூட எனக்குத் தோனிருக்கு. But, he performs well now. ஆனா, இதெல்லாம் medically relevant ஆ டாக்டர்?"

"சொல்றேன், கண்ணனுக்கு இருக்குறது munchousen syndrome."

"புரியல டாக்டர், இது கேன்சர்ல இதுவும் ஒன்னா?"

"இல்ல, மிஸ்டர் இளங்கோ, munchousen syndrome புற்றுநோய் இல்ல. இன்னும் சொல்லப் போனா, கண்ணனுக்குப் புற்றுநோயே இல்ல."

"ஓ, மருந்துலயே குணமாகிடுச்சா?"

"முதலில் cancer வந்தால் தானே குணமாவறதுக்கு. இதுவரைக்கும் கண்ணன் நம்ம எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருந்திருக்காரு. அவருக்கு மூளையில கட்டியும் இல்ல, புற்றுநோயும் இல்ல. தனக்கு எந்த நோயும் இல்லாம, மத்தவங்க கிட்ட தன்னை நோயாளி மாதிரி காட்டிக்கிட்டு, attention தேடுறது, அதுக்காக, அந்த நோயோட symptoms போலியாக இருப்பது போல காட்டுறது இதுக்குப் பேரு தான் munchausen syndrome."

நானும், ஜனாவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"எப்படி சார் சொல்றீங்க?" என்றான் ஜனா.

"முதல்லேந்தே சொல்றேன். போன வருசம், முதல் முதலா கண்ணன் இந்த hospital அடிக்கடி தலைவலின்னு வந்தாரு. முதல் ரெண்டு முறை வெறும் வலி மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டுருக்காங்க. அதுக்கு அப்புறமும் அவரு தொடர்ந்து வந்ததைப் பாத்துட்டு, MRI எடுக்கச் சொன்னோம். அவரோட சின்ன வயசுல நடந்த accidentல fracture ஆனதுனால plate வச்சிருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. அதுக்கான x ray எல்லாம் வச்சிருந்தாரு. plate இருந்ததால, CT ஸ்கேன் தான் செஞ்சோம். அது செய்யும் போது எங்களுக்கு tumour எதுவும் தெரியல. ஆனா, CT scan prints எடுத்துப் பார்க்கும் போது அதில் glioblastoma stage 1 tumour இருப்பது தெரிய வந்துச்சு."

"இப்ப இல்லன்னு சொன்னீங்க?"

"முழுசும் கேளுங்க. stage 1 அப்படிங்குறதுனால மருந்துலயே சரி செய்யலாம்னு சொன்னோம். ஒவ்வொரு மூனு மாசத்துக்கு ஒரு முறை அவரு வந்து செக்அப் செய்யணும்னு கூட சொல்லி இருந்தோம். அப்படி வரும்போது நான் இல்லாத நேரத்தில் வந்து, அடுத்த மூனு மாசத்துக்கு மாத்திரை மட்டும் வேற டாக்டர்கிட்ட prescription வாங்கிட்டுப் போயிருக்காரு. அங்க தான் எங்களுக்கு doubt வரத் தொடங்குச்சு. இந்த முறையும் அதே போல, நான் இல்லாத நேரத்தில் வந்துட்டுப் போகப் பாத்தாரு. ஆனா, receptionல இவரு வந்ததும் எனக்குத் தகவல் சொல்ல சொல்லி வச்சிருந்தேன். மீண்டும் ஒருமுறை CT scan எடுத்திருவோம். tumour growth எப்படி இருக்குன்னு பாக்கணும்னு சொன்னா, முகமெல்லாம் வேர்த்துப் பதறத் தொடங்கிட்டாரு. அவரை sedate செய்து scan செஞ்சு பாத்தா, முதலில் இருந்து இது வரைக்கும் சொன்னது எல்லாம் பொய். accident, fracture, plate, தலைவலி, scan result, எல்லாமே பொய். எப்படியோ, எங்க lab system hack செஞ்சு scan result மாத்திருக்காருன்னு நெனைக்கிறேன். இன்னும் sedated conditionல தான் இருக்காரு. உங்க கம்பெனி medical insurance தர்றதுனால இது வரைக்கும் எல்லா செலவும் அதிலேந்து தான் ஆகிருக்கு."

"எதுக்கு சார் இப்படி நடிக்கணும்?" என்றேன் சற்று கோபமாகவே.

"இத நீங்க கண்ணன்கிட்ட தான் கேக்கணும். ஆனா, எனக்குத் தெரிஞ்சு, he was trying to get your attention and appreciation. இந்த ஆறு மாசமா, நீங்க அவருக்குக் கொடுத்திருக்கீங்க"

ஒவ்வொரு project target date வரும்போதெல்லாம், கண்ணன் மயக்கம் போடுவதும், தலைவலி எனச் சொல்லியதும் நினைவுக்கு வந்து நாங்கள் ஏமாற்றப்பட்டதை எங்கள் கண்முன் நிறுத்தியது.

ஜனா டாக்டரைப் பார்த்து, "இந்த... என்ன சிண்ட்ரோம் சொன்னீங்க?"

"Munchausen syndrome"

"ஆங், அது mental disorderஆ?"

"இல்லாத நோய் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வது hypochondriac. ஆனா, இல்லாத நோய் தனக்கு இருப்பதாக காட்டிக்குறது. அதாவது, தனக்கு நோய் இல்லன்னு நல்லா தெரிஞ்சும், பொய் சொல்றது இது. இது psychological disorder ஆக இருந்தாலும், இது உள்ளவங்க pathological liars." என்று டாக்டர் செல்வம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நர்ஸ் உள்ளே வந்து, "டாக்டர், பேஷண்ட் முழிச்சுக்கிட்டாரு" என்று சொல்ல, மூவரும் விரைந்தோம்.

இன்னும் மயக்க மருந்தின் தாக்கத்தில் இருந்து விழிக்காத கண்ணனிடம், டாக்டர் செல்வம், "congrats, கண்ணன். உங்களை scan செஞ்சு பாத்ததில் no new growth of tumours. In fact, the old tumours are also disappeared. You are cancer free."

"டாக்டர், என்ன சொல்றீங்க..."

"ஆமா கண்ணன், எப்படி உங்க சின்ன வயசுல நடந்த accidentல வச்ச plate மறைஞ்சு போச்சோ, அதே போல, உங்க மூளையில இருந்த கட்டியும் மறைஞ்சு போச்சு. Its gone." என்று சொல்லி டாக்டர் பின்னால் நகர, நின்றிருந்த என்னைப் பார்த்த கண்ணன் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவன் உறைந்த முகத்தைப் பார்த்து மெல்ல சிரித்தேன். "சார்..." என்று பேச வந்தவனைத் தடுத்தேன்.

"ஆனா ஒன்னு சொல்லணும்யா, you've really made us believe that you were sick. உன்ன நம்புனதுக்கு என்ன நானே செருப்பால அடிச்சுக்கிட்டது போல உணர வச்சுட்ட. நீ உண்மையாவே attention and appreciation எதிர்பாத்திருந்தா, உன் திறமைய பயன்படுத்திருக்கணும். Hospital serverல புகுந்து report மாத்தி, doctors ஏமாத்தி, உன்ன நம்புன எங்களை ஏமாத்தி, இருக்குற எல்லாரையும் உனக்காகக் கவலைப்பட வச்சு. Bloody moron, இது எல்லாம் உனக்கு கிடைச்ச attention இல்ல. நீ சாகப் போறன்னு தெரிஞ்சதால கிடைச்ச attention. இனிமே அது உனக்குக் கிடைக்காது. Because, you are already dead for us. Your bloody sick mind doesn't deserve another chance, You're fired".

- முடிவிலி 



Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka