Posts

Showing posts from July, 2020

ம்... - குறள் கதை

Image
ம்... - முடிவிலி நான் மெல்லக் கண்களைத் திறந்து கொண்டிருந்தேன். உடலெங்கும் வலியா சோர்வா களைப்பா என்று தெரியாத உணர்வு இருந்தது. நான் எங்கு இருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை.  அறையின் குளிரில் உடல் முழுதும் சில்லிட்டிருந்தது. 'டக்... டக்... டக்...' என்ற ஒலியுடன் ஏதோ சுழல்வது தெரிந்தது. நான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன். படுத்திருந்தபடி, என் உடல் பகுதியைப் பார்த்தேன், வெள்ளை நிறத்தில் சிறு இளஞ்சிவப்பு நிறப் புள்ளிகள் இடப்பட்ட அங்கி எனக்கு அணிந்திருந்தேன். எழ முயற்சித்த போது, ஒரு குரல் மட்டும் கேட்டது. "டாக்டர், அவரு முழிச்சுட்டாரு போல... சாமி, அசையாம இருங்க, இன்னும் கொஞ்ச நேரம்... அப்படி அசையாமப் படுத்திருங்க." 'டாக்டர்...' என்று காதில் விழுந்ததும், மருத்துவமனையில் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். படித்திருந்தபடியே, "என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?" என்றேன். "நீங்க ஒரு programல speech கொடுக்க கோயம்புத்தூர் வந்தீங்க, நான் டாக்டர். கதிரேசன், உங்களோட எல்லா பேச்சுக்களும் கேட்டிருக்கேன். நானும் அந்...

யாருக்கு நீதி? - குறள் கதை

Image
யாருக்கு நீதி? - முடிவிலி (ஏறைநாடு கதை 3) "அப்பா, தெருவுல எல்லாரும் உங்களைப் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க." என்று ஓடிவந்து தழுவிக் கொண்டான் பத்து வயது சிறுவனான குமரன். வண்டிக்காரர் தன்னைத் தழுவிக் கொண்ட மகனைப் பார்த்து, "என்னைப் பத்தியா பேசுறாங்க? என்னய்யா பேசுனாங்க?" என்றார். "நீங்க தான் அவனைப் பிடிக்க உதவுனீங்களாமே"  சிரித்துக் கொண்ட வண்டிக்காரர், "இல்ல, நான் பிடிக்குறதுக்குள்ள அவனே ஓடிப்போயி அந்தப் பள்ளத்துல விழுந்து காலை உடைச்சுக்கிட்டான், நான் விழுந்த இடத்தைக் காட்டுனேன், அவ்வளவு தான்." என்றவர் சற்று சிந்தித்தவராய், "இதுவே வேற நாடா இருந்தா, இவனையெல்லாம் பிடிக்குறது என்ன, பிடிக்குறது பத்திச் சிந்திக்கக் கூட மாட்டாங்க, நம்ம நாடு அப்படி, அதுவும் நம்ம அரசர் அப்படி" என்றார். "ஏம்ப்பா அப்படி சொல்றீங்க? மத்த நாட்டுல துறவி வேடம் போட்டு ஏமாத்துபவர்களை ஒன்னும் செய்யமாட்டாங்களா?"  "ஏமாத்துறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள அரசர்களோட ஆட்சிக்காலமே முடிஞ்சிடும். நம்ம நாடும் முன்பு அப்படித் தான் இருந்த...

ஒத்த ரூவா - குறள் கதை

Image
ஒத்த ரூவா - முடிவிலி மணல் மட்டும் பாதி ஆற்றிலே இருக்க, எங்கோ ஒரு ஓரத்தில் கொஞ்சம் மட்டும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் திருச்சி நகரத்தின் விடியாத காலைப் பொழுதில், நேற்று பகலில் இந்த ஊரிலா அவ்வளவு வெயில் சுட்டெரித்தது என ஐயமுண்டாக்கும் வகையில் குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஆவின் பால் வண்டிகளும், செய்தித் தாள்களின் கட்டுக்களை மொத்த விற்பனையாளர்களிடத்தில் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த பின்புறம் மூடிய டெம்போக்களும், சென்னையிலிருந்து மக்களைச் சுமந்து வந்து சூரியன் முளைப்பதற்குள் திருச்சியில் சேர்க்கும் ஆம்னி பேருந்துகள் தவிர பெரிதும் நடமாட்டமில்லாத நேரம், என்றும் இல்லாத அளவுக்கு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  வார்டன்கள் கைதிகளைக் கொண்டு, ஆங்காங்கே இடங்களைத் தூய்மை படுத்துவதும், முதன்மை அலுவலறையில் வண்ணநாடாக்கள் கொண்டு ஓட்டுவது என சிறைச்சாலையே தூங்காமல் விழிப்புடன் உழைத்துக் கொண்டிருந்தது. துணை சிறை அலுவலர் செல்வதுரை, நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டவாறு, "வர்ற புது ஜெயிலர், இந்த வரவேற்பு பாத்து அப்படியே அசந்து ப...

அமைதிப் புன்னகை - குறள் கதை

அமைதிப்புன்னகை - முடிவிலி வெகு தொலைவில் இருந்து பறந்து வந்த பறவைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே இருந்த அமைதியான ஏரியைக் கண்டு, இறங்கி, ஏரிக்கரையில் நின்று உடல் நனைத்த படியும், நீர் குடித்தபடியும் இருந்ததால் அதுவரை அமைதியாக இருந்த ஏரியின் பரப்பில் வட்டங்களாய் சிறு அலைகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஏரியின் மறுகரையில் ஒரு குடிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்தவாறு, சிறு அலைகளையும், சிறு அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் அருட்கனகர். வெகு நேரம் ஏரியையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கனகரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவரின் சீடன் சேந்தன்.  அந்தக் குடில், அதைச் சுற்றி இருந்த மயில்கள் விளையாடும் பழத்தோட்டம், எதிரே அமைதியாய் விரிந்திருக்கும் ஏரி, இவை அனைத்தையும் சுற்றி இருக்கும் அடர்ந்த காடு என இவையே இருவரின் உலகமாக இருக்கிறது. சேந்தன் கனகரிடம் அவனது சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சில காலமாய் அவன் மனதில் சில கேள்விகள் அரித்துக் கொண்டே இருக்கின்றன. அதை எப்படியாவது அவரிடம் கேட்டு விடவேண்டும் என்று தான் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ...

ஆ...! - குறள் கதை

Image
ஆ...! - முடிவிலி (ஏறைநாடு கதை 2) ஏறை நாட்டுத் தலைநகரானச் செவ்வூரைச் சுற்றி இருந்த அடர்ந்த காடுகளில் ,   புல்லினங்கள் ஆங்காங்கே இனிய குரலில் கூவிக் கொண்டிருக்க ,  குரங்குகளோ இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருந்தன. முகில் கூட்டம் எதுவுமில்லாது இருந்த வானில் நேரே வந்த கதிரவன் ஒளி ,  அடர்ந்த மரங்களின் இடையே ஊடுருவ முடியாமல் ,  பசுமையான இலைகளில் பட்டுத் தெறித்து தெறித்து ,  காட்டின் பரப்பை அடையும் போது தன் வெப்பம் அனைத்தையும் இழந்து குளிர்ந்து போயிருந்தது. அந்தக் காட்டின் வழியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு ஓட்டமும் நடையாய் நகர்ந்து செல்ல ,  எழுந்த காலடியின் ஓசை காட்டிலெங்கும் எதிரொலிக்க ,  தாவிய குரங்குகள் அதிர்ந்து நின்று ,  கிளைகளில் மறையத் தொடங்கின. விரைவாக நடந்த அந்தக் கால்கள் ,  செவ்வூர்க்காட்டின் அடுத்து இருக்கும் சிற்றூர்களில் ஒன்றான சிறுகுன்றூருக்குச் செல்லும் வழி நோக்கி நடந்து கொண்டிருந்தன.   சற்று நேரத்தில் ,  செவ்வூரிலிருந்து சிறுகுன்றூர் செல்லும் வண்டிப்பாதை தடம் தெரிய ,  தன் முகத்தை மூடி இருந்த துணியினை விலக்கி ,...

வேட்டை நாய் - குறள் கதை

Image
வேட்டை நாய் - முடிவிலி ' கா ர்த்தி, ஒரு தகவல் ஒன்னு கிடைச்சிருக்கு. திருச்செங்கோடு வரைக்கும் போயிட்டு வர்றேன், வந்ததும் detailedஆ சொல்றேன்' என்று whatsappல் குரல் செய்தி அனுப்பிவிட்டு, திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.   மீண்டும் எனக்கு வந்திருந்த மின்னஞ்சலை எடுத்துப் படிக்கத் துவங்கினேன்.    அதன் பின் அந்த மின்னஞ்சலில் செங்குட்டுவனைத் தொடர்பு கொண்டு, அவரின் தொடர்பு எண், முகவரி வாங்கிக் கொண்டு, இப்போது திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். பேருந்தின் சாளரத்தின் வழி இரவு நேரத்திலும் இளஞ்சூடான காற்று  முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. சற்று முன்பு பெருங்களத்தூரின் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த போது, வியர்த்து நனைந்திருந்த தலைமுடியை உலர்த்துவதற்காகவே இந்தக் காற்று வந்ததோ என்று எண்ணிக் கொண்டே கண்ணை மூட மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து தாலாட்ட, மெல்ல உறங்கிப் போனேன்.   *** திருச்செங்கோட்டில் இறங்கிய என்னை அழைத்துச் செல்ல செங்குட்டுவனே வந்திருந்தார். அவருடைய வண்டியின் பின்னால் நான்...

கோவிசின் - குறள் கதை

Image
(கதையின் பெரும்பான்மை வட இந்தியாவில் நிகழ்வது போல அமைக்கப்பட்டிருந்தாலும், புரிதலுக்காக, கதைமாந்தர்கள் தமிழில் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. கதைமாந்தர்கள் கற்பனையே) கோவிசின் - முடிவிலி " நீ ங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது உங்க Ghost FM. Bonfire with RJ Fire. இப்ப இருக்குற கொரோனா காலத்துல, எப்படா இயல்பு நிலைக்குத் திரும்புவோம்னு நெனச்சுட்டிருந்த  நாம, இப்ப இருக்குற நிலையையே new normalனு நகர்ந்திட்டிருக்கோம். இனிமே எல்லாம் இப்படித்தான் போல, சரி, அடுத்தப் பாட்டு ராஜா இசையில, விடிய விடிய நடனம் பாடல் உங்களுக்காக, stay tuned"  என்று காதிற்குள் RJ Fire தனது இடைநில்லாப் பேச்சால் பேசிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, காதில் இன்னிசை பரவத் தொடங்கியிருந்தது. தூக்கம் வராமல், இணைய வானொலியில் பாடல் கேட்டபடி, ட்விட்டரை மேய்ந்து கொண்டிருந்தான் சுந்தர்.  கீழிருந்து மேலாகத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தரின் இடது கை கட்டைவிரல், ஒரு செய்திக்கீச்சினைக் கண்டதும் நின்று, இணைப்பினைத் திறந்தது. *** 15 நாட்களுக்கு முன்பு (வட இந்தியா) குளிரூட்டப்பட்ட அறையில், வெற்றுடம்பில் கா...